உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. நான் பேசிய நாடகம்



1

தமிழ் ஒரு பெருங்கடல். தமிழரது வரலாறும் ஒரு பெருங்கடல். அலைகள் மேலே ஓங்கியும், கீழே தாழ்ந்தும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. பேரூக்கம் ஒருகாலம்; பெருஞ் சோர்வு மற்றொரு காலம். தமிழ்ப் பாட்டுக்களைத் திரட்டுவது, அவற்றின் சுவையிலீடுபட்டு ஆராய்வது—இப்படி ஒரு காலம் வரும். தமிழரைவிடச் சுவையுணர்ந்து, அந்நூல்களைச் செல்லும் கரப்பானும் உண்ண விருந்தளித்த காலம் ஒருமுறை வரும். ஒரு பஞ்சம் வந்தபோது புலவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறி வாழவந்த கொடுமையையும், அதன் பின்னர் அகத்திணை மரபை அறிய முடியாமற் போகவே, ஆண்டவனே


✽ நற்றிணை மகாநாட்டில் தலைமைபூண்டு நடித்த நாடகம் இது, தலைமையுரை என்று பேர் பெற்றது.

123