உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

தல் என்ற இரண்டு நிலையில்: அகத்தடக்கலோ அழித்தல் என்ற ஒரு நிலையில்: இந்த உண்மையும் இவ்வாறு சுட்டப்படுகின்றது. இயன்றன பயின்றபோதும் அகத்து வைத்துக் காத்துக் கொள்ளப்பெற்றே உள்ளன என்பதும் இத்தொடர்பால் விளங்குகிறது. "வேதமுதல்வன்" என்ற நிலையும், "தீதற விளங்கிய திகிரியோன்" என்ற நிலையும் எழுவாயும் பயனிலையுமாய் நிற்கின்ற தொடர்பினை எதுகைத் தொடையாலும் ஒன்றுபடுத்தி விளக்கி வற்புறுத்துகிறார்; தீதற விளங்குவதே திகிரியின் சிறப்பியல்பென்பதனை வற்புறுத்தி இரண்டும் மோனையாய் அமையப் பாடுகின்றார் பெருந்தேவனார்; திகிரியான் என ஒரு சீரால் கூறத்தக்கதனைத் தம் ஈடுபாடும் அதன் பெருமையும் தோன்ற இருசீராக்கித் திகிரியோனே என நீட்டுகின்றார். இவ்வாறு பொருளும் பா ஓசையும் அமைந்திருப்பது ஓரழகாம்.



122