உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

இன்றிச் "சிடுசிடு" என ஒளிவிட்டெரியும் தீயின் நினைப்பும் சுடு விளக்கத்தின் நினைப்பும் வரச் "சுடர்" என்று ஒர அசையில் கூறியமைந்தார்; மதியமும் கண்ஆனாலும், உண்மையில் உலகுக்கு ஒருகண் சுடரே எனக் குறிப்பார்போலச் சுடர்கண் என ஒரு சீராக்கினார்; உம்மையும் கொடுத்திலர்; தனி நிற்பது சுடர்: அதனால் விளங்கி அதனோடு தொடர்ந்தெண்ணப்படுவது மதியம் என்பது போலக் கூறுகின்றார்; "வேத முதல்வன்" என்ற உண்மையைத் தனியடியாக்கினார்; நாம் விரும்பும் இன்ப நிலையை நம்மையடக்கியாண்டு நன்மை பெருக்கும் ஆணையாகக் கூறி முடிக்கின்றார்; இத்திகிரியின் சிறப்பியல் தீதற விளங்குதல் ஆம் எனச் சிறப்பிக்கின்றார்.

"மாநிலம்" என்பதனோடு கடலின் தொடர்பு விளங்க அந்த அடியிலேயே, "தூநீர்" என எதுகை தோன்றக் கடலைப் பாடத்தொடங்குகின்றார் பெருந்தேவனார். கடலைப் புனைந்துரைக்கும் இரண்டாம் அடியில் வேறொன்றன் தொடர்பும் வேண்டாமையால் மோனையோ எதுகையோ வரப்பாடுகிறார் இல்லை; அருவத்திற் புகுதலின், உருவத்தோடு ஒட்டிவரத் தொடுக்கவில்லை; விசும்பும் திசையும் என்ற இரண்டு நிலையாகப் பிரிந்தாலும் அவை ஒன்றெனக் கொள்ள எதுகை நயம்கொண்டு ஒன்றுபடுத்துகிறார்; விசும்பில் செல்லும் ஒளிகள் என ஒற்றுமைப்படுத்த, விசும்போடு பசுங்கதிர் என எதுகைத்தொடை வரப் பாடுகிறார்; சுடர் என வேறு பிரித்து உயர்த்துகிறார்; "அனைத்தும் அதற்கு இடமாம்" என்ற வேற்று நிலையின் அடிப்படை ஒற்றுமையை "இயன்றன பயின்று" எனவரும் எதுகை நயத்தோடு "பயின்றகத்து" என ஒரு சீராக்கிப்பாடுகிறார். இயன்றன பயின்று நிற்றல், படைத்தல் காத்-

121