உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மாலை குறிப்பிட்ட நேரத்தில் சங்கரன் வந்து சேர்ந்தான். விருந்து நடக்கும் நத்தம் ஜெமீன்தாரின் மாளிகைக்குச் சென்றனர். விருந்துக்கு. அநேக சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருந்தனர். நகை அணிந்திருக்கிறாளே அந்த அம்மை தான் அகிலாண்டேஸ்வரி, அதோ சிரிக்கிறாள் பார், பல் லிலே கொஞ்சம் தங்க முலாம் கூட இருக்கிறதே, அவள் யார் தெரியுமா, அன்னம்மாள். மணபுரி ஜெமீன்தாரின் மருமகள். அவள் கணவன் சீமைக்குப் போகிறான். அதோ அவர் தான் வைரவியாபாரி வரத ராஜ செட்டியார். அது சுபேதார் சுந்தரம். டாக்டர் ரகுமாரன்-என்றுவிருந்துக்கு வந்தவர்களை எல்லாம், மங்கம்மாள், தனது மருமகனாக வர இருக்கும் சங்கரனுக்குக் காட்டினாள், வந்தவர்களும், இந்த மூவரையும் அறிந்துகொண்டு, உபசார மொழிகள் உரைத் தனர். விருந்து முடிந்து போகும் நேரத்திலே, ஒரு நடுத்தர வயதுடையவர், மங்கம்மாளை அணுகிவந்தார். "சௌக்கியந்தானா சுந்தரம் ? சௌந்தரவல்லி எப்படி இருக்கிறாள்" என்று மங்கம்மாள் கேட்டாள். "சுகந்தான் மங்கு! சௌந்திரம் ரங்கூனுக்குப் போனாள். இன்னும் அங்கு நாடகம் நடக்கிறது. முடிந்து தானே வருவாள். என்றான் சுந்தரம். இதுதான் என் தங்கை புருஷன் சுந்தரம்- என்று மங்கம்மாள் அவனை, சங்கரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.சங்கரன் கை குலுக்கினான். மலர்க் கொடியை சுந்தரம் தட்டிக் கொடுத்து "ஏ! அப்பா, இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாயா நீ - என்று கேலி செய்தான். கொஞ்ச நேரம் சென்றதும் விருந்துக்கு வந்தவர்கள் வீடு திரும்பி னர். நமது கதா பாத்திரங்களும் தத்தமது வீடு சென்றனர்.