உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

இளங்குமரனார் தமிழ்வளம் 27 3

"படம் பார்த்தல், வெற்றிலை போடுதல், புகைபுடித்தல், காப்பி தேநீர் ஆகியவை குடித்தல், இழிந்த பாடல்களைக் கேட்டல், தகவற்ற நூல்களைப் படித்தல் - ஆகியவை இவர் கனவினும் கருதாதவை!

"சீட்டு விளையாடுதல், பரிசுச்சீட்டு நடத்துதல், குதிரைப் பந்தயத்திற்குப் போதல், ஏமாற்று ஆட்டங்களில் ஈடுபடுதல் ஆகியவை இவரால் வெறுத்து ஒதுக்கப்படுபவை!”

“வீண் பேச்சுப் பேசுதல், வாளா பொழுதைக் கழித்தல், கேலிகிண்டல் நையாண்டி செய்தல் ஆகியவற்றில் என்றும் ஈடுபட்டறியார்! தக்கவர் தொடர்பை அன்றிப் பிறர் தொடர்பை வலக்காரமாக விலக்குவார்! வாட்டும் நோயின் இடையேயும், ஊட்டும் மருந்தின் இடையேயும் ஓய்வின்றி உழைப்பதை ஒரு பெருந்தவமாகக் கொண்டுள்ள தகவுடையார்! தகுதி வாய்ந்த பணிகளைத்தேர்ந்து செய்தால்வாழும் நாளும் நீளும் என்பதைப் பலப்பல சான்றுகளால்நிறுவிக் காட்டித் தம் வாழ்வையும் அவ்வண்ணமே உய்த்துச் செல்வதால் என்றும் இளையராய் வாழும் பெற்றியார்! இச் சீர்மைகளை நினைந்து நினைந்து உணர்ந்து வரலாறு எழுதும் போது, அந்நினைவாலும் அவ் ணர்வாலும் ஆட்கொள்ளப் பெற்றுச் சார்ந்தனன் வண்ணமாக வுழுந்திப்போகும் பேற்றினும் அரிய பேறு ஒருவருக்கு வேண்டுமோ? அத்தகு உயிரூதியப் பேறு' திருவருள் அருளியதே என்பது ஒரு தலை!

"நூற்றிதழ் அலரி நிரை கண்டாற்போல, நூறு பல்லாண்டு உரையும் பாட்டும் உடையோராய் வாழ்கதில்” என்பது மாணிக்க மொழி! ஆம்; முனைவர் வ. சுப. மாணிக்கனார் இவர்க்கு உரைத்த வாழ்த்து மொழி. அம் மொழியால் மொழி வளர்க்கும் ஏந்தலை வாழ்த்தி இவ் வரலாற்றுப் படையலை ‘அடியுறை' செய்து மகிழ்கின்றேன்.

செல்வம்

திருநகர்,

மதுரை-6

தமிழ்த்தொண்டன் இரா. இளங்குமரன்

30-7-81.