உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகுதை

எனவும் திரிந்து திக்கற்றவன், திக்கற்றது என விரவி நிற்பதோர் பொதுச்சொல் (நன். பொதுவி. 29 இராமானுச.).

அகுதை (அஃதை) பெ. சங்ககாலத்துக்

குறுநில

மன்னன். வயங்கு பெருந்தானை அகுதை களை தந்தாங்கு (அகநா. 208, 17-18).

அகுப்பியம்1 பெ. பொன்.

பொன். (சங். அக.)

அகுப்பியம் 2 பெ. வெள்ளி. (முன்.)

அகுபதி பெ. (பாம்புகளுக்குத் தலைவனாகிய ஆதி சேடன். அகுபதி ஆயிரந்தலையால்... பொறுக்கின்ற (மெய்க். பாண்டியர். 5, 55).

அகும்பை பெ. கவிழ்தும்பை. (பச்சிலை. அக.)

அகுமது பெ. நபிகள்நாயகம். நான்கு பேரொளியும் அகுமதின் ஒளி அடுத்திருப்ப (சீறாப்பு. 1,4,31)

அகுயலம் பெ. தீமையாயுள்ளது. குயலாகுயலம் எனக் கூறும் வினை (நில.490).

அகுரு1 பெ. குரு அல்லாதவன். (கதிரை. அக.)

அகுரு பெ. (அ+ குரு) கனமற்றது. (முன்.)

அகுரு (அகரு) பெ. அகில்மரம். (சங். அக.)

அகுரு பெ. வெட்டிவேர். (கதிரை. அக.)

அகுலாதிகம் பெ. கரிசலாங்கண்ணி. (சித். அக. செ.ப.

அக. அனு)

அகுலி பெ. நறுவிலி என்னும் மரம். (பச்சிலை. அக.)

அகுலோதிகம் பெ. கருங்கொடுவேலி. (சித். அக. / செ. ப. அக. அனு.)

அகுவைக்கட்டி பெ.

தொடையிடுக்கில் வரும் கட்டி,

அரையாப்பு. (சங். அக.)

அகுளுதி பெ. வேப்ப மரம் (முன்.)

அகுளை பெ. கல்லடிச் சேம்பு. (சித். அக./செ.ப.அக.

அனு.)

அகுன்றி பெ. இசைக்கருவி.

அகுன்றியென்பது

வாத்தியமாகும் (அக. நி. அம்முதல். 66).

அகூடகந்தம் பெ. பெருங்காயம். (பச்சிலை. அக.)

பெ.செர .அ.1-4

19

அகை-த்தல்

அகை1-தல் 4வி. 1. (விதை) முளைத்தல். வெண் மணல் அழுத்தி...காழ் முளை அகைய (நற்.172, 1-2). 2. (கிளை, செடி, பயிர்) தழைத்தல், தளிர்த் தல், செழித்தல். கயன் அகைய வயல் நிறைக்கும் (மதுரைக். 92 வயல் தழைக்கும்படி - நச்.). அழல் அகைந் தன்ன... ஒண்பூ (அகநா. 245,15). கொய்குழையகை காஞ்சி (கலித். 74, 5 கொய்யுத்தழை தளிர்க்கின்ற காஞ்சி - நச்.). கொய்து அகைப் போந்தும் கை தகை காந்தளும் (பெருங். 2, 12, 23). 3. (மலர்) விரிதல், மலர்தல். அகை மலர்ப் பூம்பொழில் (மணிமே. 24,176). அகை மத்தத்தளிவர்க்கத் தள கக் கொத்தினரே (தக்க. 98).

...

அகை - தல் 4வி. 1. (கொழுந்துவிட்டு) எரிதல். கூர் வாய் அழல் அழல் அகைந்தன்ன துதை மயிர்... கோழி (அகநா. 277, 13-15). எரி அகைந்தன்ன வீ ததை இணர வேங்கையம்படு சினை (நற்.379, 3-4). எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை (பொருந. 159). 2.மேலெழுதல். பொரி அகைந்தன்ன பொங்கு பல சிறுமீன் (அகநா. 106,2). வேங்கை கள் எரி அகைந்தன அலர் ஊட்டும் (தணிகைப்பு. திருநா. 41).

அகை 3- தல்

4வி. வருந்துதல். கொய்து அகை பொதும்பர்க்கையகன் றொழிய (பெருங். 1,52,91). அழுவது கண்டு அகையேல் அமர்தோழி அழேல்

(சீவக.1524).

அகை - தல் 4வி. காலம் நீட்டித்தல், தாமதித்தல். மணிமேகலை ஆயினதேல் அகையாது எனது ஆவி தழைக்குமென (சீவக.1379).

அகை'-தல் 4வி. 1. ஒடிதல். அகைந்த இத்துணை மலர் எனக்கு அருளுதி என்றாள் (பாரதம். 3,3, 40). 2. வளைதல். அகைதல் ... வளைவு (கயா. நி. 348).

...

அகை 8 - த்தல் 11வி. 1. கிளைத்தல், தளிர்த்தல். கரி மரம் கண் அகை இளம் குழை (அகநா. 283,9-10). குப்பைக் கீரை கொய்கண் அகைத்த (புறநா. 159, 9). 2.(கொடி படர்ந்து) மேலேறுதல். குறைக் கொடி... நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப எழுச்சியின் (நற் 5, 3-4). கதித்தலே யகைத்தல். பேர் (சூடா.நி. 9,38.3.உயர்த்துதல். (செ. ப. அக.) 4. வலிய மலர்த்துதல். (தக்க. மலர்த்துதலுமாம் ப. உரை).

98

...

அகைத்தல் - வலிய

அகை-த்தல் 11வி. ஒத்தல். கடும் பரிக் கதழ் சிறகு. அகைப்ப நீ நெடுந்தேர் ஓட்டிய... நாடு (பதிற்றுப்.