உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டமச்சனி

அட்டமச்சனி

பெ. சந்திரலக்கினத்துக்கு எட்டாமிடத்து

நிற்குஞ் சனி. (பஞ்சாங்க வ.)

அட்டமசுத்தி பெ. இலக்கினத்திற்கு எட்டா மிடத்து எந் தக் கிரகமும் இல்லாதிருக்கை. (விதான. மைந்தர்வி.13/

செ. ப. அக.)

அட்டமணியம் பெ. ஊதியம் பெறாது அதிகாரம் செய்

கை. (ராட். அக.)

அட்டமத்துச்சனி பெ. சந்திரலக்கினத்துக்கு எட்டா மிடத்துநிற்கும் சனி. அட்டமத்துச் சனி பிடித்தது; பிட்டத்துத் துணியையும் உரிந்து கொண்டது

(பழ . அக. 220).

அட்டமம் பெ. எட்டாவது. ஒத்த உதயத்துக்கு அட் டமத்தே நிற்குமோர் அதிபன் (விதான.குணா. 87/ செ.ப.அக.). புத்திதனில் இரவின் அட்டமம் (திருச்.

முரு. பிள். 65).

அட்டமாங்கம் பெ. (கீழ் விழுந்து வணங்குகையில் நிலத்தில் படும்) உடலின் எட்டுறுப்புகள். அட்டமாங் கம் கிடந்து அடி வீழ்ந்திலர் (தேவா. 5,95, 7). அட்டமாசித்தி பெ. அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என் னும் எண்வகைப் பேராற்றல். அணிந்து எண் திசை யினும் அட்டமாசித்தி (திருமந்.640). அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி (தேவா. 3, 36,11). அட்டமாசித்தி அருளிய அதுவும் (திருவாச. 2, 63). அட்டமாசித்திஎலாம் அடிக்குள் தோற்றும் (கருவூ ரார். திர. 162). அட்டமாசித்தி தந்த திறம் (திருவிளை. பு. 33,1).

அட்டமாசுணம் பெ. அட்டநாகம். முடி சுமந்திடும் அட்டமாசுணமும் (பிரபோத. 6,18).

அட்டமி பெ. எட்டாவது திதி. ஆடித்திங்கள் பேரி ருட்பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமிஞான்று (சிலப். 23, 133). அட்டமிமுன் சீருடை ஏழு நாளும் (தேவா. 4,50,2). அட்டமியும் ஏனை உவாவும் (ஆசாரக். 47). நள்ளிருள் பக்கத்து அட் டமிதனில் (குசே. 676).

அட்டமிகை பெ. அரைப்பல அளவு. தனித்தனிக் கங்கு அட்டமிகை வெவ்வேறாக (தைலவ. தைல. 54) செ.ப. அக.).

அட்டமிடு-தல் 6 வி. சுற்றுதல். (ராட். அக.) அட்டமுகடு பெ. உச்சி. (செ.ப.அக. அனு.)

அட்டமூர்த்தம் பெ. நிலம்,நீர்,தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் எண்வகை வடி

110

அட்டவண்ணைத்திருக்கை

வங்கள். வரும் அட்டமூர்த்தமாம் வாழ்வே (கந்தர்

கலி. 65).

...

(காரை.

அட்டமூர்த்தி பெ. (எட்டுத் திருமேனிகளையுடைய) சிவன். அவனே ... அட்டமூர்த்தியுமாய் அந். 21). திருஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே அஞ்சலென்றருள் (தேவா.3,51, 4). அட்டமூர்த்தி அழகன் ஆனந்த வெள்ளத்தான் (திருவாச. 42, 2). அட்டமூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் (கம்ப ரா. 4, 3, 40).அட்டமூர்த்தியைப் பொருள் என (பெரியபு. 28,786) அட்டமூர்த்தி விடையருள் பெற்று (திருவிளை. பு.17,88). அட்ட மூர்த்தி எனும் ஈசுவரன் பெயரால் உணர்க

உடைமையால்

141 ப. உரை).

அட்டமூலி பெ.

(தக்க.

எட்டுவகை மூலிகை. அட்டமூலி

பிரித்துக் கேளு (கருவூரார். திர.183).

அட்டயோகம்1 பெ. இயமம், நியமம், ஆதனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எண்வகை யோக உறுப்புக்கள். மெய்ஞ் ஞானம் தரும் அட்டயோகத் தவமே (கந்தர்கலி. 65). அட்டயோகம்' (அட்டயோசம்) பெ. அரைபொடி. (வைத்.

விரி, அக. ப. 5)

அட்டயோசம்

(யாழ். அக.)

(அட்டயோகம்2) பெ. அரைபொடி.

அட்டர் பெ.சாதிக்காய். (செ.ப.அக.அனு.)

அட்டரூபம் பெ. கடவுளின் எண்வகைத் திருமேனி. அட்டரூபமும் திருவுருவாக வாழ்ந்தருளும் (கச்சி. காஞ்சி. இருபத்தெண். 191).

அட்டலி பெ. மரவகை. (செ. ப. அக. அனு.)

அட்டலோகபற்பம்

பெ. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம் என் னும் எண்வகை உலோகங்களின் புடமிட்ட பொடி. (செ. ப. அக.)

அட்டவசுக்கள் பெ. அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூசன், பிரபாசன் ஆகிய எண்வகைத் தேவர்கள். தரன் துருவன்...பிர பாசன் அட்ட வசுக்கள் பெயரே (பிங். 182). எண் பெரும்பேய் அட்டவசுக்கள் (தக்க. 791 ப. உரை). அட்டவண்ணைத்திருக்கை பெ. பெருந்திருக்கை மீன்.

(செ.ப.அக.)

...

.