உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டகந்தம்

அட்டகந்தம் பெ. சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, விலாமிச்சி, கோட்டம், கத்தூரி, அகரு, பச்சிலை ஆகிய எட்டு மணப் பொருள்கள்

153)

(சித். பரி. அக. ப.

அட்டகம்1. பெ. வசம்பு என்னும் மருந்துவேர். (சங், அக.)

அட்டகம்' :பெ. 1. எட்டன் தொகுதி. உருவமெலாம் பூதவுபாதாய சுத்தாட்டக உருவமென்னின் (சி. சி. பர. செளத். மறு. 17). 2. வேதத்தில் அடங்கிய ஒரு சார் மந்திரத் தொகுதி. வருக்க முழுதும் வந்த அட்டகமும்... சங்கிதைகளும் (கலிங். 184). 3. எட் டுப் பாடல் கொண்ட நூல். திருப்போரூர் அட்டகம் 4. எட்டு நூல் கொண்ட தொகுப்பு. சித்தாந்த அட்டகம் (நூ.பெ.)

அட்டகர்மம் (அட்டகருமம், அட்டகன்மம்) பெ. எட்டு கேளே (கரு வகைச் செயல். அட்டகர்மப் பாசை

வூரார். திர. 175).

அட்டகராசி பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அட்டகருமக்கரு பெ. தாவரம், கிழங்கு, தோல், எலும்பு போன்ற மாயவித்தைக்குரிய பொருள்கள். (செ. ப. அக.)

அட்டகருமம் (அட்டகர்மம்,

அட்டகன்மம்)

பெ.

வசியம், மோகனம் முதலான எண்வகைச் செயல்கள். (கதிரை. அக.)

அட்டகன்மம்

பெ.

(அட்டகர்மம், அட்டகருமம்) வசியம், மோகனம் முதலான எண்வகைச் செயல்கள். (மந்திரவ)

அட்டகாசம்1 பெ. பெருநகை. அனல் உமிழ் கண்

களும் அட்டகாசமும் (பிரபோத. 18, 74). அன்னை புரி அட்டகாசத்து அண்டம் பிளப்ப (தேவிமான்.

2, 16).

அட்டகாசம்' பெ. பெருந்தொல்லை. அவன் அட்ட காசம் செய்கிறான் (பே.வ.).

அட்டகாசம் 3

(பச்சிலை. அக.)

(அட்டகசம்) பெ. ஆடாதோடை.

அட்டகிரி பெ. (புரா.) இமயம், மந்தரம், கயிலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்னும் எட்டு மலைகள். (சங். அக.)

07

அட்டசூரணம்

அட்டகுணம் பெ. தன்வயத்தனாதல், தூயவுடம் பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர் தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரரு ளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பில் இன்ப முடைமை என்னும் கடவுளின் எட்டுக் குணங்கள். (குறள். 9 பரிமே.)

அட்டகுன்மம் பெ. சூலை, வாதம், பித்தம், சிலேட்டு மம், எரி, சத்தி, சன்னி, வலி ஆகிய எட்டு வகை வயிற்றுநோய் அட்டகுன்மம் உப்பிசமும் போன வாறே (போகர் 700, 156).

அட்டகெசம் பெ. திக்குயானைகள் எட்டு. அட்ட கெசம் அட்டபாலர் நாட்டே (கருவூரார். திர.

154).

...

...

...

அட்டகை பெ. 1. ஒரு யாகம். அக்கினிட்டோமம் அட்டகை பதினெட்டு யாகப் பல பெய ராகும் (திவா. 2712). 2. அட்டமி. தென்புலத் தவர் பிண்டம் ஈங்கு நன்களிக்க அட்டகையாய காலங்கள் (திருக்காளத். பு. 12, 15). 3.மார்கழி முதலிய மாதங்களில் அட்டமி முதலிய திதிகளில் செய்யும் சிராத்த வகை. அட்டகை என்னும் சிராத் தம்... உஞற்றிட (கூர்மபு. உத்தர. 23, 3).

அட்டகோணம் பெ. 1. எட்டுமூலை. (கதிரை. அக.) 2. எட்டு மூலையையுடைய வடிவம்.(செ. ப. அக.) கூச்சம் முதலிய காரணமாக உடல் கோணுகை. இவன் அட்டகோணமாக நிற்கிறான் (பே.வ.).

3.

அட்டங்கால் (அட்டணங்கால், அட்டணைக்கால்' அட்டாணிக்கால்) பெ. குறுக்காக மடக்கிவைக்கும்

கால். (61) GOT.).

அட்டசத்தி பெ. யோகேசுவரி முதலான எட்டு மாதர். அட்டசத்தி ... நாட்டே (கருவூரார் . திர. 154).

அட்டசித்தி பெ. யோகத்தினால் கைகூடும் அணிமா முதலிய எண்வகைப் பேராற்றல், அட்டமாசித்தி. எந்தை அட்டசித்தி வேண்டும் (திருவிளை. பு. 33, 6).

அட்டசித்து பெ. எண்வகைச் சித்திகள். இத்தாலே அட்டசித்தும் (கருவூரார். திர. 124).

அட்டசுபம் பெ.

அட்டமங்கலம்'. (யாழ். அக. அனு.)

அட்டசூரணம் பெ. திரிகடுகு, பருத்திவிதை, கழற்சிப் பருப்பு, பெருங்காயம், வளையலுப்பு, இந்துப்பு, கல்

லுப்பு, கருவேம்பு

அக. ப. 154)

ஆகியவற்றின் பொடி. (சித். பரி.