உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனாவசியம்

(அநாவசியம், அனாவசியகம்)

பெ.

அனாவசியம் 1. தேவையற்றது. அனாவசியச் செலவு செய்யாதே (பே. வ.). 2. பயனற்றது. அங்குப் போனது அனாவசியம் (LOGOT.).

அனாவிதம் பெ.

ஒருவகை வீணை, (பரத. 4, 15)

அனாவிருட்டி பெ. மழை பெய்யாது பொய்ப்பது. இன்று தொட்டு அனாவிருட்டி எய்தும் (மச்சபு.

பூருவ. 2, 2).

அனாவிலன் பெ. (அழுக்கற்றவன்) வெள்ளி. (யாழ். அக.)

அனான்மவாதம் பெ. ஆன்மா இல்லை என்று கூறும் புத்தசமயக் கொள்கை. (செ. ப. அக. அனு.)

அனான்மா பெ. ஆன்மாவின்

வேறானது, ஆன்மா

அல்லாதது. அறைந்த அது

அனான்மா

(சிவப்

பிர. விகா. 187).

அனி பெ. பெ. நெற்பொரி. (செ.ப. அக.)

அனி2 பெ. பத்தாயம். (முன்.)

அனிகம்1 பெ. சிவிகை. சிவிகை வையம் தண்டிகை அனிகம் (சூடா. நி. 7, 47).

1.

பெ.

...

1

அனிகம்' கூட்டம், திரள். அரிகளின் அனிகமோ எனப்பல் பதினாயிரம் வீரரே (கம்பரா. 3, 6, 30). அனிகமாக விரப்ப அமர்ந் தனர் முனிவர் (அகோர. வேதார. பு. நாரத. 14). 2. அணிவகுப்பு, வரிசை. அனிகவெஞ் சேனைக்கு எல் லாம் விருந்து இனிது அமைப்பென் (கம்பரா. 6, 37, 198). 3. சேனை, படை. அனிகமாய் வரும் ஆகண்டலன் (தக்க. 586). அலகை அனிகம் (திருக் கழுக். உலா 30). கோலஞ்செறி கொய்யுளைமா அனிகம் புரந்து (ஞான. உபதேசகா. 275).

அனிகராசி

...

பெ. படைப்பெருக்கம். காண மூண் டெழும் ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிகராசியே (கம்பரா. 2, 11, 27).

அனிச்சக்கோதை பெ. அனிச்சப் பூவால் கட்டிய மாலை. இருநூற் பெய்த அனிச்சக் கோதையும் (பெருங்.1,

42, 70-71).

அனிச்சநாகம் பெ. மல்லிகை.

(சாம்ப. அக.)

544

அனிச்சைவினை

அனிச்சம் (அனித்தம்') பெ. 1. மோந்தால் வாடக் கூடிய மெல்லிய இதழ்கள் கொண்ட பூவகை. அனிச்சம் தண்கயக் குவளை (குறிஞ்சிப். 62).நீலம் அல்லி அனிச்சம் (கலித். 91, 1) மோப்பக்குழையும் அனிச்சம் (குறள். 90). அனிச்சமும் அசோகமும் அடர அலைத்து (பெருங். 1, 51, 52). நறவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் (திவா. 677). அடுக்கிய அனிச்சப்பூவின் அமளிமேல் (சூளா. 558). பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் திருவொடு பொலியும் திருவடி (பட்டினத்துப். திருவிடை. 1, 15). அனிச்சம்

...

...

அனத்தின் தூவி குலாவிய சீறடி (திருப்பு.114). சீறுவெயில் அனிச்ச நீழல்வாய்ச் சேர்த்தென்ன (திருக்கழுக். உலா 215). அனிச்சமென் புதுமலர் அமளி (605L5. 22, 18). அன்பான ஆறு தலைமேல் அனிச்சமும் உருத்திய பதச்சிறு குறச்சிறுமி (திரு மலைமுரு. பிள். 11). 2. சிறுமரவகை. இப்போது இச்சிறுமரம் (அனிச்சம்) பங்களூரில் உள்ள லால் பாக் தாவரப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது.

(சங். தாவ. ப. 341).

அனிச்சம் 2 பெ. வரகு. (சாம்ப. அக.)

அனிச்சம்' (அனிச்சை3) பெ. விருப்பமின்மை. (கதிரை.

அக.)

அனிச்சி (அனிச்சை1) பெ. நாகமல்லிகை. (பச்சிலை.

அக.)

அனிச்சை1 (அனிச்சி) பெ. நாகமல்லிகை. (முன்.)

அனிச்சை2 பெ. வெற்றிலை. (வாகட அக.)

அனிச்சை' (அனிச்சம்') பெ. (அன் + இச்சை) விருப்ப மின்மை, அனிச்சை சொல்லிக் கைவாங்கும் இத் தனை (பெரியதி. பிர.).

அனிச்சை + பெ. தங்கை. கை அனிச்சை தங்கை (நாம.நி.191).

அனிச்சைச்செயல் பெ. தன்னியங்கி, தானே நிகழ்வது. அனிச்சைச் செயலாவது மூளையின் உத்தரவின் றிச் சில உடலுறுப்புகள் தாமே செயல்படுவது (அறிவி. 10 ப. 271). கண்ணிமைகள் மூடுவதும் திறப்பதும் அனிச்சைச் செயல் (கல்வி.வ.).

அனிச்சைப்பிராரத்தம் பெ. விருப்பமின்றி இன்பதுன்பம் நுகர்விக்கும் பழவினை. (வேதா. சூ.175 உரை)

அனிச்சைவினை பெ. (இக்.) மூளை இயக்காது தானாக வே உடலில் நடைபெறும் (கண்ணிமைத்தல் போன்ற) இயக்கம். (உளவியல் 11 ப.47)