உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழி1 - தல்

அழி 1 - தல் 4 வி. 1. கெடுதல், நாசமாதல். ஆர் உயிர் அழிவதாயினும் (நற்.382,6). பீடு அழியக் கடந் தட்டு அவர் நாடு அழிய (மதுரைக். 186). ஊர் கவின் அழியப் பெரும் பாழ் செய்து (பட்டினப். 269). உறுபடையான் ஊக்கம் அழிந்துவிடும் (குறள். 498). சுறவேந்தன் உரு அழியச் சிவந்தான் (தேவா. 2,19, 5). நந்திகுலவீரர் ஆகம் அழிய (நந்திக்கலம். 81). அழிந்த மாவின் சூழ் குடர்க் கண்ணி சூடி (சீவக. 803). சங்கரற்கு அழி முப் புரத்தவர் (கம்பரா. 6, 5, 61). மாபாரதப் போர் வரும் நீர் அழிந்திடுவீர் (பாரதி. பாஞ்சாலி. 252,76). 2. சிதைவுறுதல். அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்டஞாட்பு (நற். 14, 4). அடுமதில் பாய அழிந்தன கோட்டை (முத்தொள். 17). தானம் அழியாமை ... இனிதே (இனி. நாற். 13). சிறை அழி புனலிற் சென்று (பெருங். 1,46, 16). குறி அழிந் தன குங்குமத் தோள்கள் (கம்பரா. 1, 2, 40).மையழி சேயரி நெடுமலர்க்கண்கள் சேந்தென (சூளா.369). என்றன் மானம் அழிவதும் காண்பரோ (பாரதி. பாஞ்சாலி. 257). 3. நிலைகெடுதல். நெடும் பீட ழிந்து நிலம் சேர்ந்தனவே (புறநா.368,6).யாறு கண்டு அழிந்து வேறுபடு புனல்என (பரிபா. 6, 43-44). மூர்த்தியை நினையாதோடி ...நாளும் கருத்தழிந்து (தேவா. 4,28,1). தாணுவே அழிந்தேன் (திருவாச. 44,5). அஞ்சல் அஞ்சல் என்றுரைத்தால் அழிவதுண்டோ (நந்திக்கலம். 4). நாமத்தால் அழி வாள் ஒரு நன்னுதல் (கம்பரா. 1, 19, 40). அன்பர் தங்கள் பான்மை அழிபுத்தர்களும் பணிந்து வீழ்ந் தார் (பெரியபு.28, 924). அழிந்த குடி (பே.வ.). 4. உள்ளமுடைதல், தளர்தல். அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து (நற். 56,7). உருகி உடன்று அழிய வேண்டா (ஐந்.ஐம். 9). அயலாரும் என்னை அழியும் சொல் சொல்லுவர் (முத்தொள். 94). ஊற்று நீர் அரும்பிய உள்ளழி நோக்கினர் (பெருங்.1,43, 137). உள் அழியேல் என்றான் (கம்பரா. 2, 4, 17). இடுக்கண் அழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை (குறள். அதி. 63 தலைப்பு - மணக்.).5. வாடுதல். தோளும் அழியும் நாளும் சென்றென (நற். 397, 1). 6. வருந் துதல். சோர்வு கண்டு அழியினும் (தொல். பொ. 148,15 இளம்.). வாடிய முலையள் பெரிதழிந்து (புறநா. 159,8). அழியல் எழுந்து இது கொள் ளாய் (மணிமே. 14, 12). உள்ளகத் தழிதல்செல்லாள் (பெருங். 4, 8, 14). பண்டே துன்பமுற்று அழிந் தாரை அதன்மேலும் துன்பத்தினைச் செய்தாற் போலும் (குறள். 1310 மணக்.). 7. தேய்தல். மிக இரந்து உண்டு கால் அங்கு அழிந்ததே (தில். கலம்.

452

அழி'-த்தல்

89). 8. தவறுதல். நீயுரைத்ததொன்றும் அழிந் திலது (கம்பரா. 6, 22, 30). 9. பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறிவிடுப்பினும் (தொல். பொ. 43 இளம்.). 10.உள்ளம் உருகுதல். அரும்புண் உறுநரின் வருந்தினள் பெரிதழிந்து (அகநா. 57, 17). 11. தோல்வியுறுதல். ஆடு பெற்றழிந்த மள்ளர் (பதிற்றுப். 63,13). ஒவ்வாமை மொழிந்த வாதில் அழிந்தொழிந்த (தேவா. 3, 39, 3). மானினம் அஞ் சில் ஓதி நோக்கிற்கு அழிந்து (சேரமான். மும்.16). அழிந்து அவன் போனபின் (கம்பரா. 1, 23, 41). நன்னுதால் மென்னடைக்கு அழிந்து (சிலப். 2,55).

அழி - தல் 4 வி. 1. பெருகுதல், மிகுதல். அழிந்தன பூமி விழுந்தனர் மேலோர் (பெருங். 3,27,115). அழியும் புனல் அஞ்சன மாநதியே (சீவக. 1193). ஓடை யானை அழிமதத்து இழுக்கல் ஆற்றில் (கம்பரா. 1,13,52). அழிந்து மட்டொழுகு தாரினான் ஒருவன் (செ. பாகவத. 10, 21, 14). 2.வழிதல், ஒழுகுதல். பசுஞ்சுனைப் பாங்கர் அழி முது நீர் (கைந். 3). அழி கவுள் யானை வேந்தன் (சீவக. 1644).

அழி 3 - தல் 4 வி. அஞ்சுதல். படையழிந்து மாறினன் (புறநா. 278,3).

பின் வாழாமை

அழி + -தல் 4 வி. 1. கடத்தல். இதழ் அழிந்து ஊறும் கண்பனி (குறுந். 348).2. நீங்குதல். மானம் அழிந்த வாழாமை முன் இனிதே (இனி. நாற். 13). பெற்றேன் கவின் அழிந்து இப்பசப்பே (சங்கர. கோவை 216). 3. (எண்ணுதற்குப்) போதாதுதீர்தல், செலவாதல். பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப (பதிற்றுப். 15,5). வினை செய்து முடித் தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தால் உளதாகும் பொருளும் (குறள். 464 மணக்.). அழியாத காசு அழியுமோ (முக்கூடற். 94). என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்துவிட்டது (நாட். வ.).

அழி' - த்தல் 11 வி. 1. கெடுத்தல், பயனற்றதாக்குதல். உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின் (புறநா. 97, 2). சினத்த களிறு மதன் அழிக்கும் (மலைபடு. 260). பாடலொடு ஆடல் அருப்பம் அழிப்ப (பரிபா. 10.57). சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூது (குறள். 934). அகன்று பெயர்ந்தழிக்கும் அரும் பெறற் சூழ்ச்சி (பெருங். 3,1, 31). அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை (தேவா. 5,30,11). அழித்தனை மனையின் மாட்சி (கம்பரா. 4, 7, 123). பொன்னம்பலத்திட்ட வாதழித்த மாணிக்க வாசகனும் (மதுரைச். உலா 90). 2. கலைத்தல்,