உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

21

“பிள்ளை அவர்களின் தொண்டினைப் பற்றிக் கூற வேண்டு மானால் அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவை என்றே கூறவேண்டும்."

'அவர்கள் செய்தவரும் தமிழ்த்தொண்டு எதிர்காலத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கு மளவுக்குப் பெருமையுடைய

தாகும்."

“உண்மையிலேயே சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகும் என்றால் சுப்பையாபிள்ளைதாம். சுப்பையாபிள்ளை என்றால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்தான்.

ஒரு சிறப்பான துணையை ஆண்டவன் அவருக்கு அளித்திருக்கிறார்.

இவ்வாறு அறிஞர் பலர்தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்கட்குப் புகழாரம் சூட்டுகின்றனர்.

விழா நாயகர் எழுபத்தைந்தாண்டு இளைஞர் (1973 ஆம் ஆண்டில்) ஏற்புரை வழங்குகின்றார். அப்பொழுது தெறித்த மணிகள்;

“நான் எப்போதும் இளமையைத்தான் விரும்புவேன்”

என்னை யாராவது முதியவர் என்று சொன்னால் அதை நான் சுவைப்பதில்லை

"தமிழ்நாட்டு வரலாற்றை எழுத வேண்டுமானால் - தமிழ் மொழியின் வரலாற்றை எழுத வேண்டுமானால் - என் தமையனார் திருவரங்கர் வரலாற்றைத்தான் முதன் முதலில் எழுத வேண்டும். என் தமையனார் இல்லாவிட்டால் மறைமலையடிகளாரின் பெருமை இவ்வளவு விளக்க முற்றிருக்காது என்பதை நான் அறிவேன்.'

தமிழுக்கு என்ன செய்யலாம், தமிழர்க்கு வருகிற இடையூறு களை எப்படிப் போக்கலாம் - இவையே எனக்கு எப்போதும் சிந்தனை.

"ஓய்வு ஒழிச்சல் என்பவை எனக்குப் பிடிக்காதவை”

“எனக்குக் கிடைக்கப்பெறும் புகழுக்கும் பெருமைக்கும் உரியவர்கள் என் அருமைத் தமையனார்திருவரங்கனார் அவர்களும், தனித் தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரும் ஆவர்"