உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

"ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நிலையம் துவங்கும் பொழுது எந்த அளவுக்குத் தனித்தமிழ்ப்பற்றாளராக இருந்தாரோ, அந்தத் தனித்தமிழ்ப் பற்றில் இருந்து கொஞ்சம் கூடப் பிறழ்ந்து கலப்புத் தமிழுக்கு அவர் மாறவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலையத்தின் பொறுப்பை இவர் ஏற்கும்போது எப்படித் தம்மை ஒப்படைத்தாரோ, அதற்குப் பின்பு எந்தக் கவர்ச்சியும், எந்த அதிர்ச்சியும் தம்மை மாற்றவிடாமல் இதற்கே தம்மை ஒப்படைத்துவிட்டார். இப்படி ஒருவர் இருப்பது இந்த இருபதாம் நூற்றாண்டின் நாகரிகத்தை மீறிய செயல்

6

"ஐம்பது ஆண்டுகளில் இவரைவிடச் சிறந்த தொண்டாற் றியவர்கள் இருக்க முடியுமா?'

"இறைவன் அவருக்குக் கொடுத்திருக்கும் நல்ல பண்பு, அவருக்கு யாரும் பகையில்லை.”

"ஒருவன் எந்தச் சமயத்தில் இருந்தாலும் அவன் தமிழுக்கு அன்புடையவனாக இருந்தால் அவனைச் ‘சைவன்' என்று கருதுவார்கள்."

"தமிழ் படித்தவர்கள் தமிழ் உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் நம்முடைய பிள்ளை அவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும்."

"விழா நாயகர் அவர்களே, ஒரு நல்ல நூல்; அந்த நல்ல நூலுக்கு உள்ள பொருள் 'தமிழ்' ஒன்றுதான்"

"அவர்கள் தொகுத்து வைத்துள்ள நூல் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்”

"மதிப்புக்குரிய நூல் நிலையங்களே, நிறைந்திருக்கும் உங்கள் பேழைகளில் இல்லாத, ஆனால் உங்களுக்கு மிக மிகத் தேவையானவற்றை நானேகொண்டு வருகிறேன்" என்றான் வால்ட்டு விட்மன். அந்தக் கவிஞனைப் பொறுத்தவரை அஃது உண்மையோ? பொய்யோ? நானறியேன்; ஆனால் தமிழன்னை யின் எளிய நூல்நிலையத்தில் இல்லாத, ஆனால் இன்றியமை யாது தேவைப்பட்ட எண்ணற்ற நூல்களைத் திரு. பிள்ளை யவர்கள் கொண்டு தந்தார்கள்

"தமிழ் வாழ வாழ்ந்த உமது தவத்தை இன்றைய தமிழகம் உணர்ந்து போற்றுகிறது. எதிர்காலத் தமிழகம் நினைந்து நன்றி செலுத்தும்; தமிழ் வரலாறு உமது தொண்டிற்குத் தலை வணங்கும்."