உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. ஒரு பெருவிழா

(பனிநீர் பலமுறை தெளித்தார்; சந்தனம் அளித்தார்; மாலை சூட்டி மகிழ்ந்தார்; பாராட்டெடுத்துப் பரவச முற்றார்; அவற்றையெல்லாம் ஒருங்கே திரும்பப்பெற வாய்த்தவேளையில் திக்குமுக்காடிப் போனார்.)

சென்னையிலே ஒரு பெருவிழா. அவ்விழாவில் அரசியல் தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் குழுமியுள்ளனர். விழா நாயகருக்குப் புகழ்மாலை சூட்டுகின்றனர்.

"எனக்குத் தெரிந்த வரையில் திரு.வ.சுப்பையாபிள்ளை அவர்களைக் கொலம்பசுக்கு கொலம்பசுக்கு ஒப்பிடலாம். ஒப்பிடலாம். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்ததுபோல் இவர்மனிதனைக் கண்டுபிடித்தார். தமிழ் நாட்டில் யார் யார்மனிதராக இருக்கி ன்றார்கள், எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள், அறிஞராக இருக்கின்றார்கள், எவரெல்லாம் நூலாசிரியராக இருக்கத் தகுதியுள்ளவராக இருக்கின்றார்கள் என்று கண்டுபிடித்தார்கள். ஆசிரியர்களாக இல்லாதவர்களை ஆசிரியர்களாக்கினார்கள். நூலாசிரியர் ஆக்கினார்கள்.'

'ஒரு பாசுவெல் இல்லையானல் எப்படி சான்சன் இல்லையோ அபோல் ம்றைமலையடிகளுக்குப் பெரும் விளம்பரத்தைத் தேடித் தந்தவர்கள் திரு. சுப்பையா பிள்ளை அவர்களே."

"திரு. சுப்பையாபிள்ளை அவர்கள் ஒரு புத்தக வணிகர் மட்டுமல்லர். அவர் ஒரு செந்தமிழ்க் காவலர், புலவர், புரவலர், பல்துறை அறிவு பரப்புநர்: இந் நாட்டு முன்னேற்றத் தொண்டர் களுள் ஒருவர்.”

"அவர் ஓர் இயல்பான புத்தக வெளியீட்டாளர் மட்டு மல்லர்; அவரிடத்தில் இருக்கும் ஒருபெரும் சிறப்பு என்ன வென்றால், அவரே ஒரு சிறந்த எழுத்தாளர். அவரே ஒரு புத்தக விற்பனையாளர்; அவரே ஒரு புத்தக வெளியீட்டாளர்; அவரே ஒரு நூலகர்; அவரே ஒரு வாசகர்; ஓர் இதழாசிரியராகவும் இருக்கிறார்.