உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

27

பழையன் கோட்டை பின்னை நாளில் பளையன் கோட்டையாய்ப், பாளையங் கோட்டையாய்ப், பாளை யாள் மருவியுளது. சங்கப்புலவர் பெருமக்கள் பாடுபுகழுக்கு உரியவனாக விளங்கிய பழையன் மாறன் ஊரிலே ‘சங்கநூற்பேழை' தரவந்த பெருமகனார் பிறந்தது நினைவுகூரத் தக்கதாம்.

பாளையங்கோட்டையில் வாழ்ந்த திருவாளர் ஒருவர் வயிர முத்துப் பிள்ளை என்பார். அவர்தம் அருமைக் கிழத்தியார் சுந்தரத்தம்மையார். வயிரமும், முத்தும் அழகொடும் விளங்குவதை எவரே அறியார்?

“ஒன்றன் கூறு ஆடை உடுப்பவர் ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்பார் ஒரு சங்கச்சான்றோர். “ஓர் ஆடையை இருகூறு ஆக்கி உடுத்துக்கொண்டால்தான் என்ன? ஈருடலும் ஓருயிரும் போன்று வாழும் வாழ்வே வாழ்வு” எனக் கண்ட அவ்வுயில் கலந்து ஒன்றிய உயர்ந்த வாழ்வை வயிரமுத்தரும் சுந்தரத்தம்மையும் கொண்டனர். அவர்கள் இல்லறவாழ்வுப் பயனாக மக்கள் ஐவர் தோன்றினர்.

மூத்தவர் முத்துசாமி, அடுத்தவர் திருவரங்கர். மூன்றாமவர் ஐயம் பெருமாள், நான்காமவர் இவ்வரலாற்று நாயகர் சுப்பையா; இவர்களுக்கெல்லாம் தங்கை குப்பம்மாள் ஐந்தாமவர். திரு. வ.சு. பிறந்தது 1897 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 22ஆம் நாள் ஆகும். தமிழ்மொழி காக்க வந்த தலைமகனைத் தம் கடைசி மகனாகத் தந்தார் சுந்தரத்தம்மையார். கடைப்பட்டார் தலைப்பட்டார் என்னும் பழமொழி மெய்யாயிற்று. அன்றியும் தமிழ் அன்னை செய்த தவப்பெருந் திருநாளும் அந்நாள் ஆயிற்று!