உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. இளமையும் கல்வியும்

(இளமை, கல்விக்குரியது; ஆனால், அவ் விளமை எத்த னையோ இடர்களைச் சந்திக்க வேண்டியதாகவும் அமைந்து விடுகிறது. அவ் விடர் வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடிக்க வல்லவர்க்கு அவ் விளமை என்ன செய்கின்றது? என்றும் இளமையாய் இருக்கும் பேற்றை அருளிவிடுகிறது.)

மக்களின் கல்வி தந்தையரைச் சேர்ந்தது என்பது முந்தையோர் முறை. "தந்தையொடு கல்விபோம்" என்று அவர்கள் உரத்துக்கூறியதும் உண்டு.

வயிரமுத்துப்பிள்ளை தம் மக்களுக்குக் கல்விதரும் வேட்கையில் முந்தி நின்றார். முயன்றும் செய்தார். ஆனால் அதனை முற்றுவிக்க அவர் இருந்தால்தானே முடியும்? ஓடும் உயிரை நிறுத்தி வைக்க எவரால்தாம் முடிகின்றது? வயிரமுத்துப பிள்ளை 1900 ஆம் ஆண்டு பிறைமுடிப் பெருமான் திருவடி யடைந்தார்.

நல்லிளமைப் பருவத்திலேயே நாயகனை இழந்தார் சுந்தரத்தம்மையார். அவர் என்ன செய்வார்? தமக்கு நேர்ந்த தீயூழை எண்ணித் தெருமந்து நோவாரா? பதின்மூன்றாண்டு முத்துசாமியையும், பத்தாண்டுத் திருவரங்கரையும், ஏழாண்டு ஐயம் பெருமாளையும், மூன்றாண்டுச் சுப்பையாவையும், ஓராண்டும் நிரம்பாத குப்பம்மாளையும் எண்ணி எண்ணிப் புண்படுவாரா? தம்பியர் உளராக வேண்டும் என்னும் தனிப்பெரும் தயையால் உயிர் வாழ்ந்த திலகவதியார் போலத் தம் இளஞ்செல்வங்களின் எதிர்கால வாழ்வை நோக்கி, அம்பொன்மணி நூல் தாங்காமல் அருள் தாங்கி நின்றார்.

ஆலின் அடிமரம் கறையானால் அரிக்கப்பெற்று வீழ்ந்தாலும், மரம் வீழ்ந்து படாமல், அதன் வீழ்துகள் காக்கும். அதுபோல் தந்தையில்லாக் குடும்பத்தைத் தாங்க முற்பட்டார் மூத்தவர் முத்துசாமி, அவர்க்குத் தந்தையார் செய்துவந்த வணிகத்தில் ஓரளவு முன்னரே பயிற்சியிருந்தது. அப் பயிற்சியும் ஆர்வமும்