உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூலாசிரியர் நுதல்வு

கழக இலக்கியச் செம்மல்

புலவர் இரா. இளங்குமரன் தலைமைத் தமிழாசிரியர்

மு.மு.உ. பள்ளி, மதுரை.

“சுருங்கச் சொல்லல்” என்பது பத்துவகை அழகுகளுள் தலையாயது. சுருக்கி எழுதுக என்பது இந்நாள் தேர்வுப் பயிற்சி களுள் ஒன்று! ஆனால், “விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்" என்று கழகச் சான்றோர் உரைத்தது போன்ற தொரு பெரு வரலாற்றைச் சுருக்கி வரைவதன் அருமை எழுதத் தொடங்கிய பின்னர் நன்கு தெளிவாயிற்று!

'பன்னூல் தொகுதிகளாக எழுதப்பெற வேண்டிய வரலாறு, இச் 'சின்னூல்' அளவில் எழுதப்பெற்றிருப்பது உண்மை; ஆனால், வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் முழுதுற இடம் பெறா விடினும், வரலாற்றில் சுட்ட வேண்டிய இன்றியமையாப் பகுதிகள் விடுபெறவில்லை என்றே எண்ணுகின்றேன்; எனினும், ஒவ்வொரு தலைப்பும் விரித்தெழுதத்தக்க விழுப்பமுடையதே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

"நீடிருங் குன்றம், நிழல்காலும் மண்டிலத்துக்

கோடு கோடாய்த் தோன்றும் கொள்கைத்தே”

என்னும் சிலப்பதிகாரம் தொடர்பான பழம் பாடற் குறிப்பு இவ் வரலாற்றுக்கும் ஏற்கும்!

தமிழன்னையின் நிலைமக்களுள் தலைமக்களாகத் தோன்றி யோர் பலர்; அவர்கள் படைப்பாளர்; உரையாளர்; பதிப்பாளர்; பரப்பாளர்; காப்பாளர் எனப் பல திறத்தர். அன்ன வரை எல்லாம் தமிழ்கூறு நல்லுலகப் பரப்பெல்லாம் 'இன்னார்’ என்று ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையில பரப்பிக் கொண்டிருக்கும் ஏந்தல் இவ் வரலாறுடையார்!

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்றும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்பகை