உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன்'

அண்ணன் மூத்தோன் (சூடா. நி. 2, 77). அண்ணன் அலால்உயிர் வேறு இங்கு அயல் இல்லையெனும் தம்பி (காந்திகாதை. 1, 10, 65). அண்ணன் தம்பி கள் ஐவரும் மாண்டனர் (நாஞ். மரு. மான். 1, 21). 2. தந்தை. (பே.வ.) 3. வைணவ ஆசாரிய மரபில் சிலருக்குரிய பெயர். கோயில் கந்தாடையண்ணன் (குருபரம்.). 4. சிவன். அண்ணாமலை எம் அண்ணா போற்றி (திருவாச. 4, 149).

அண்ணன்2 பெ. ஆண் குழந்தைக்கிடும் பெயரீறு. காளியண்ணன், நல்லண்ணன் (கோவை வ.).

அண்ணன்மார் (அண்ணமார்) பெ. (கொங்குநாட்டு அண்ணன் தம்பியரான இரு) தெய்வங்கள். நல்ல தங்காள் அண்ணன்மாரைத் தேடி...வருவாள் (அண் ணன். கதை ப. 88).

.

.

அண்ணா 1 -த்தல் 12 வி. 1. தலைநிமிர்தல். நண்ணார் நாண அண்ணாந்தேகி (புறநா. 47,8). அண் ணாந்து ... கண்ணி சூடி...வந்தோய் (நற். 34, 7-9). அண்ணாந்தியலா ஆன்று புரியடக்கத்து (பெருங். 1, 32, 66). 2. (தலைநிமிர்ந்து) மேலே பார்த்தல். களிறு தன்...மடப்பிடி வருத்தம் நோனாது...அண் ணாந்து... முழங்கும் (குறுந். 307). அண்ணாந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும் (சீவக. 2625). அண்ணாந்து அலமந்து விளித்தாலும் (வேணா. திருவிசை. 7). 3.(தலை அல்லாத பிற உறுப்பு) மேல் நோக்கியிருத்தல். அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் 10, 1). 4. வாய்திறத்தல். அண்ணாத்தல் செய் யாது அளறு (குறள்.255). தேன் தூரங்கண்டு முடவன் அண்ணாந்தெனச் சிந்திப்பதென் (சங்கர.

Gamma 212).

(நற்.

அண்ணா2 பெ. 1. இறைவன். பெரியண்ணா என்று பிரியமுடன் தெண்டனிட்டான் (பவளக். ப.99).2 அண்ணன். (நாட்.வ.) 3. தந்தை. (பே.வ.) அண்ணா3 பெ. திருவண்ணாமலை. அண்ணாவுங் கழுக்குன்றுமாய மலையவை வாழ்வார் (தேவா. 3,

64, 1).

அண்ணா 4

அமைவரு

பெ. உள்நாக்கு. அண்ணாவில்லா வறுவாய் (பொருந.12). அண்ணா உரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக. 2703). அண்ணாக்கயிறு பெ. அரைஞாண். (நாட். வ.)

அண்ணாக்கு பெ. உள்நாக்கு. அண்ணாக்கை யுரிஞ்சி மூக்கை உயர்த்தினார் என்க (சீவக. 2703நச்.). அண்ணாக்கு - தல் 5 வி. (ஆடு, மாடுகளுக்கு) அண் பெ. சொ. அ. 1-11

16

61

அண்ணாவி

ணாந்தாள் போடுதல். இடைமகனே ... அறியாயோ அண்ணாக்குமாறு (பெருந். 1423).

அண்ணாச்சி (அண்ணாத்தை) பெ. 1. அண்ணன். இவர் என் அண்ணாச்சி (பே.வ.). 2.மூத்தவ ரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல். வாங்க அண் ணாச்சி (முன்.).

அண்ணாத்தை (அண்ணாச்சி) பெ. 1. அண்ணன். (வட். வ.) 2. மூத்தவரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல். (முன்.)

அண்ணாந்தாள் (அண்ணந்தாள்) தண்டனை வகை. (வின்.)

பெ. பழங்காலத்

அண்ணாந்தாள்போடு-தல் 6 வி. ஆடு மாடு முதலியவை வேகமாக ஓடாதபடி கழுத்துக்கயிற்றை முன்காலுடன் சேர்த்துக் குறுக்கிக்கட்டுதல். (நாட் .வ.)

அண்ணாந்துபார்-த்தல் 11 வி. மேல்நோக்கிப் பார்த்தல். சரக்கை நான் சுமந்து சடைந்தேனடி அண்ணாந்து பாராதே (பழைய. நீலி. ப. 17). ஆழக்குழிதோண்டி அதிலொரு முட்டையிட்டு அண்ணாந்துபார்த் தால் (விடுகதை. 256). சிறுவர்கள் வானூர்தியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் (செய்தி.வ.).

...

அண்ணாநாடு பெ. திருவண்ணாமலைப்

பகுதி.

அண்ணாநாட்டு எல்லையில் திருந்திகையாற்றை யடைத்து (தெ.இ.க. 7, 44).

அண்ணாமலை பெ. திருவண்ணாமலை என்னும் சைவத் தலம். அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே (தேவா. 1, 10, 1). அண்ணா மலை எம் அண்ணாபோற்றி (திருவாச. 4, அண்ணாமலை மேல் அணிமலையை ஆரா அன் பின் அடியவர் (பெரியபு. 21,313).

அண்ணாமலைமுழம்

பெ. இருபத்துநான்கு

கொண்ட தச்சுமுழம். (சிற். செந்.ப. 3)

149).

விரல்

அண்ணார்1 பெ. (நெருங்காதவராம்) பகைவர். அண் ணார் புரம் அவியக் கனல் அவி நல்கினர் (கோனேரி

உபதேசகா. 28, 112).

அண்ணார்2 பெ. அண்ணன். (நாட். வ.)

அண்ணார்வைரம் பெ. (மருத்.) அலிவைரம். (குண.

2 ப.293)

அண்ணாவி (அண்ணாழ்வி) பெ. 1. ஆசிரியர். ஐயம்பிள்ளை அண்ணாவி (நாஞ். மரு. மான். 9, 77). தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என் செய்வார் (யென். பழ. தொ.715).