உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாழ்வி

162

அண்மைநிலை


2.

அண்ணன். (யாழ். அக.) 3.

புலவன். (முன்.)

5.

அதிகாரி.

4. கூத்துத் தலைவன். (நாட். வ.) இதற்கு நீ என்ன அண்ணாவி (பே.வ.). 6. பனர்களின் பட்டப்பெயர். (திருநெல். வ.)

பார்ப்

அண்ணாழ்வி (அண்ணாவி) பெ. 1. அண்ணன். எங்கள் அண்ணாழ்வி செய்த பணி (திருவாங்.கல். 1,103). 2. ஆசிரியர். (பே.வ.)

அண்ணாளன் பெ. 1. பெண்வழிச்சேர்வோன். (வட்.வ.) 2. அலி. (முன்.)

அண்ணி-த்தல்

11வி. இனித்தல். அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே (திருமந். 2365). அண்ணிக் கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண் (தேவா. 6, 52, 2). அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே (மதுரகவி. கண்ணி. 1).

அண்ணி '-த்தல் 11 வி. நெருங்குதல், பொருந்துதல். ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க (திருவாச. 1, 4).

அண்ணி' பெ. 1. அண்ணன் மனைவி. அத்தைமாரும் அண்ணிமாரும் (மலைய.ப.222). 2. தொண்டை மண்டல முதலியார் குடும்பத் தலைவியைப் பிறர் குறிப்பிடும் சொல். (வட். வ.)

அண்ணிசு (அண்ணிமை, அணிமை)

பெ.

அருகு.

(யாழ். அக.)

அண்ணிமை (அண்ணிசு,

(அண்ணிசு, அணிமை')

பெ.

அருகு,

நெருக்கம். அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாம் (பெரியதி. 2, 7.6 வியாக்.).

அண்ணியன்

பெ.

1. நெருக்கமானவன். என்னுள் வந்திட்டு அண்ணியனே தில்லை அம்பலவா (நம்பி யாண். கோயில். 38). 2. நெருங்கிய உறவினன். தமப் பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவர நின்ற பிரகலாதன் (திருவாய். 10,3

பிர. ஈடு).

அண்ணியான்

பெ. நெருக்கமானவன். வேண்டுவார் வேண்டுவார்க்கே அண்ணியார் (தேவா. 4, 25,1). அண்ணு-தல் 5 வி. 1. அணுகுதல். பரமாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே (திருவாச. 49, 3). அண்ணிய தாயும் அகன்றும் (கூர்மபு. உத்தர. 16, பொருந்துதல். உன்னடிக்கீழ் அண்ணிய மெய்யடிய வர்க்கு (திருவிளை. பு. 30,8). 3. பற்றுதல். (தைலவ.

12).

2.

162

அண்மைநிலை

தைல . 106/செ.ப.அக.) 4. ஒத்தல். புகலும் வாள ரிக்கு அண்ணியர் (கம்பரா. 1,15,28).5. சார்தல்.

(சங். அக.)

அண்ணுண்டார்

பெ. கள்ளர்

(கள்ளர்சரித். ப. 97)

பட்டங்களுளொன்று.

அண்ணூத்திப்பிரியர் பெ. கள்ளர் பட்டங்களுளொன்று.

(முன்.)

அண்ணெரிஞ்சான்பூண்டு (அன்றெரிந்தான் பூண்டு) பெ. அறுத்த அன்றே அடுப்பில் வைத்தால் எரியும் தன்மையுடைய பூண்டுவகை. (வைத். விரி. அக. ப. 25) அண்ணை பெ. அறிவின்றி மயங்கி யிருப்பவன். அண்ணை யலி குருடாதி யவர்களை (சூளா.1985). அண்ணை' பெ. பேய். (பொதி.நி.2,53) அண்பல் பெ. 1. மேல்வாய்ப்பல். நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற (தொல். எழுத். 96 நச்.). அண்பல் முதல்நா விளிம்புற வருமே (நன். 76). 2. அடிப்பல். அண்பல் நீர் ஊறு அமிர்தம் (சீவக. 928 அடிப்பல் நீர் ஊறு அமிர்தம்-நச்.).

அண்பு-தல் (அண்மு-தல்) 5 வி. அணுகுதல். அண் பினார் பிரியார் அல்லும் நண்பகலும் அடியவர் அடியிணை தொழவே (தேவா.3,121,6).

அண்மு-தல் (அண்பு-தல்) 5 வி.அணுகுதல். அங்கண் நாயகற் காணவந்து அண்மினார் (கம்பரா. 2, 6,10). அண்மி இராயிரம் வெள்ளமொடு.... தெவ்வி

எழுந்து (தணிகைப்பு. சீபரி. 572).

அண்மை பெ. அருகு. அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் (தொல். எழுத். 210 நச்.). அண்மையாற் சேய்த்தன்றி (கலித். 108, 35). அவளைக் காண்ப தோர் அண்மைக்கண் (இறை. அக. 2 உரை). அண்மை ஆகுவர் அகல்வர் (கந்தபு. 2, 27, 3). சேய்மை அண்மையில் உயிர்க்கொரு துணை (அரிச். 4. 8, 127). காந்தியடிகள் அண்மையில் மறைந்தார் (செய்தி.வ.).

அண்மைச்சுட்டு பெ. (இலக். அருகிலிருக்கும் ஒரு வரை/ஒன்றைச் சுட்டுகை. (சங். அக.)

அண்மைநிலை பெ. (இலக்.) தொடரில் சொற்கள் அருகில் இருக்கும் தன்மை. தொடர்மொழியாவது அவாய்நிலையானும் தகுதியானும் அண்மை நிலை யானும் இயைந்து (தொல். சொல். 1 சேனா.).