உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்மைவிளி

அண்மைவிளி பெ. அருகிலுள்ளவரை விளிக்கை. மணி வண்டு இம்மாதர் கோதை மதுஉண வந்தபோழ்து (சீவக. 1502 மணிவண்டு-அண்மைவிளி-நச்.).

அண-த்தல் அண- த்தல் 12 வி. 1. தலைநிமிர்தல். பாம்பு அணந் தன்ன ஓங்கு இருமருப்பின் (பொருந. 13). நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை (குறிஞ்சிப்¥ 35). 2. பொருந்துதல். முலைமூன் றணந்த சிலை நுதல் கன்னி (கல்லாடம் 13).

அணங்கம் பெ. இலக்கணம்.

அக.).

அஞ்சணங்கம் (சங்.

அணங்கயர்-தல் 4 வி. விழாக் கொண்டாடுதல். சுறவ முள்மருப்பு அணங்கயர்வன கழிச் சூழல் (பெரியபு.

19, 7).

அணங்கன் 1

பெ. (உமையாகிய) அணங்கை இடப்பா கத்து உடையவனான சிவபிரான். அணங்கன் எம் பிரான் அன்பிலாலந்துறை வணங்கும் (தேவா. 5,

80, 8).

அணங்கன் 2

பெ. காசிச்சாரம். (போகர் நி19)

அணங்கா-தல் 5 69. வருத்தமாதல்.

தக்கதோ நினக்கு (கலித். 148,15).

அணங்காதல்

அணங்காட்டு பெ. வெறியாட்டு. அணங்காட்டு முதி யோள் (கல்லாடம் 17).

அணங்காடு-தல் 5 வி. 5 தெய்வம் ஆவேசிக்க ஒருவர் ஆடுதல். இவளைப் பெறும்பரிசு இவ்வணங்காடுதல் அன்று (திருவாய். 4, 6, 5). பேரணங்காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை (பெரியபு. 10, 11).

,

அணங்கு-தல் 5 வி. 1. வருந்துதல். நுணங்கு செந்நா அணங்க ஏத்தி (புறநா. 211, 14). நீயணங்கியது அணங்க என்றான் (சீவக. 957). 2. வருத்துதல். புறத்தோன் அணங்கிய பக்கமும் (தொல். பொ. 67 நச்). அருந்திறற் கடவுள் அல்லன் இவள் அணங்கியோனே (ஐங். 182). ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ (கலித். 120, 15). அணங்கி எறிவன் அயிர்மன வாளால் (திருமந். 1493). 3. வதக்குதல். செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங் குறை (அகநா. 237,9). 4. வாடுதல். பனிக் கணங்கு கண்ணியார் (காரை. அந். 12).5. அஞ்சுதல். பார் பெ.சொ.அ.1-11 அ

163

அணங்கு6

அணங்கு இமில் ஏறு ஏழு அடர்த்த பனி முகில் வண்ணன் (பெரியதி. 1, 4, 6). 6.கொல்லுதல். பாம்பு உயிர் அணங்கியாங்கு (நற். 75,3). 7. இறந்துபடுதல். நற்போரணங்கிய (புற. வெண். 153).

அணங்கு-தல்

5 69. 1. பின்னி வளர்தல். வளர்தல். முழு நெறியணங்கிய நுண்கோல் வேரலொடு (மலைபடு. 223). 2. பொருந்துதல். உரை யணங்குந் தமிழ் வேந்தன் (இறை. அக. 50 உரை).

அணங்கு3 பெ. 1. (வருத்திக்கொல்லும்) தெய்வ மகள். அணங்கே விலங்கே கள்வர்தம் இறையென (தொல்.பொ. 252 இளம்.). அணங்குடை நெடுவரை

(அகநா. 22, 1).

சுணங்கு என அணங்குடை நெடுவரை

...

நினைதி நீயே, அணங்கு என நினையும் என் நெஞ்சே (ஐங். 363). அணங்கொடு நின்றது மலை வான் கொள் வான்ெ கென (நற்.165,3). அணங்கு உமை பாகமாக அடக்கிய ஆதிமூர்த்தி (தேவா. 4, 49, 9). ஐயுறான் அணங்கெனவே அகத்தடக்கிச் செல்கின்றான் (சீவக. 181). அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப் பராலோ (கலிங். 111). 2. வருத்தும் தெய்வமகள் தாக்கு. அணங்கென்ப மாய் மகளிர் முயக்கு (குறள். 918).3. அருந்ததி. வானத்து அணங்கு அருங்கடவுள் அன்னோள் (அகநா. 16, 17-18). 4. பெண். வேறுபட நன்மை நன்மை தீமை வெளிப்படல் மெல்லணங்கே (வீரசோ. 172). அல்லொத்த பூங் குழல் பாங்கது போலும் அணங்கினுக்கே (அம்பி. கோ. 22). 5. பேய். துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). அணங்காடு காட்டில் (காரை. பதிகம் 1, 7). அணங் கும் நடம் நவிற்றும் காடு (ஞானா. 47).

அணங்கு' பெ. வெறியாட்டு, விழவு. அணங்கு அயர் வியன் களம் பொலிய (அகநா. 382,6).

அணங்கு பெ. சண்டாளன். அணங்கு சண்டாளர்க்கு அபிதானம்மே (பிங்.814).

அணங்கு பெ. 1. வருத்தம். அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி (அகநா. 159, 6).அணங்கு ஆற்று அருவில் (சிலையெழு. 47). 2. அச்சம். அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு (நற். 288,1). 3. மையல்நோய். அணங்கு உற்றனை (ஐங். 58) 4. நோய். அணங்கு நோய் (பிங். 1901). அணங்கேயாகும் இவள் செய்கை அறிந் தோர் பேச அஞ்சுவரால் (பெரியபு. 29, 217). 5. கொலை. அணங்கு பார்த்து நகை முகத்து