உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசித்தம்'

ஒன்று. ஏதுப்போலி... மூன்றாகும். அசித்தம் அநை காந்திகம் விருத்தம் என (LD GOLD. 29, 192-193).

அசித்தம்' பெ. 1. முடியாதது. (சங். அக.) 2.முடிக்கப் படாதது. (முன்.)

அசித்தி' பெ. (அ+ சித்தி)

தே (பிரபோத. 27,80).

முற்றுப்பெறாமை,

கை

கூடாமை. தாவறும் அசித்தி சித்தி தம்மில் அலையா

அசித்தி 2 பெ. தவறு.(கதிரை. அக.)

அசித்திரன் பெ. கள்வன். (யாழ். அக. அனு)

அசிதம் 1 பெ கருமை. காளமும் ... அசிதமும் ... ஆகும் கருநிறத்து (பிங். 1935). அசித வெங்கடல் உண்டு அவியாது எழ (இரகு. குசன் அயோ. 83).

அசிதம் 2 பெ. இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஐந்தாம் ஆகமம்.(சைவ. நெறி பொது.331 உரை)

அசிதம்' பெ. வெல்லமுடியாதது. (நாநார்த்த. 114)

அசிதம் + பெ. 1. சிரிப்பது. அசிதம் சிரிக்கின்றது (முன்.) 2. அலர்வது. அசிதம்... அலர்ந்தது (முன்.).

அசிதர் பெ. சைனத் தீர்த்தங்கரருள்

(திருக்கலம். காப்பு உரை)

இரண்டாமவர்.

அசிதன் பெ. 1. வெல்லற்கு அரியோன். (நாநார்த்த. 118) 2. திருமால். (முன்.) 3. சனி. (முன்.) 4. நீல நிறத்தோன். (முன்.)

அசிதாம்புருகம் பெ.நீலோற்பல மலர். (வைத். விரி. அக.

ப. 12)

அசிதாரு பெ. நரக வகை. அதிபாகம் கிரகசம் மற்று அசிதாரு அங்காரம் (சிவதரு .7,115).

அசிதாலவனம் பெ. உடலைக் கூரிய பனங்கருக்கின் மீது இழுத்து வருத்தும் நரகம். துன்னும் அசிதாலவனத்து உடல் துணியத் தொகுத்து இழுப்பர் இழுப்பர் (முன். 7,

145).

அசிதேலு பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அசிதை' பெ. சிவசக்தி பேதங்களுள் ஒன்று. (சைவ.

நெறி பொது. 74 உரை)

85

அசிபதம்

அசிதை' பெ. அவுரிச்செடி. (செ.ப. அக.)

அசிந்தம்' (அசிந்தியம்') பெ. (அ + சிந்தம்)

சிந்தித்

தல் இல்லாத நிலை. ஓதா அசிந்தம் ஈது ஆனந்த

யோகமே (திருமந். 709)

அசிந்தம்' (அசிந்தியம்') பெ.

ஒரு பேரெண்ணைக்

குறிக்கும் சொல். (யாழ். அக.)

அசிந்தம்' பெ. மரணம். (சங். அக.)

அசிந்திதன் பெ. நினைவுக்கெட்டாதவன். அசிந்தித

அகண்டாகார

நற்சிதம்பர ... போற்றி

சாத். 2 குருகாருண். 7).

(வள்ள.

அசிந்தியம்" (அசிந்தம்') பெ. சிந்தைக்கெட்டாதது.(சங்.

அக.)

அசிந்தியம்" (அசிந்தம்') பெ. ஒரு பேரெண். (வின்.)

அசிப்பு பெ. அவமதிப்பு. விசித்திர கம்மமும் அசிப் பிலனாகி (பெருங். 3,14,225).

அசிபத்திரகம் (அசிபத்திரம்!) பெ. கரும்பு. (கதிரை.

அக.)

அசிபத்திரம்! (அசிபத்திரகம்) பெ. கரும்பு. (வைத்.

விரி. அக.ப. 11)

அசிபத்திரம் - பெ. 1.வாளின் கூரலகு. (கதிரை. அக.) 2. (வாளின் கூரலகு போன்ற இலையுடைய மரம் நிறைந்த) நரகவகை. அசிபத்திரமெனும் ... நர கிடை (குற்றா. பு. கவுற்சன. 67).

அசிபத்திரவனம் பெ. நரக வகை. காலசூத்திரம் அசிபத்திரவனம் (சேதுபு.தனுக்.3).

அசிபதம் பெ.

...

'தத்துவமசி' என்னும் வடமொழி மகாவாக்கிய முப்பதத் தொடரில் இருக்கிறாய்' என்னும் பொருள்பட (ஆன்மாவையும் பரத்தை யும் ஒற்றுமைப் படுத்தி) வரும் தொடர். தோன் றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் (திருமந். 2437). அசிபதத்தால் அயிக்கியம் பண் ணப்பட்டு (சிவதரு. 10, 113 உரை). கேடில் சுத்தம் அசிபதமே (சுத்தசாத. 2).