உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு 3

77

படித்தலால், குழந்தையரொடு ஆடலால், பாடலால் என்பதை! பிறவியின் நோக்கம் நிறைவேறுதலில், பிள்ளைப்பேறு பெரும்பங்கு கொள்கிறது என்பது உலகறிந்த உண்மையே!

திரு. வ.சு. மங்கையர்க்கரசியார் அன்பொத்த இல்வாழ்வின் அரும்பயனாக மக்கள் இருவர் தோன்றினர். அவர்கள் வடி வழகியார் வயிரமணியார் ஆவர்.

வடிவழகியார் 1939 இந்தி எதிர்ப்பின்போது தோன்றிய எழிற்செல்வியார். தவத்திரு அடிகளாரும் தமிழகப் புலவர் பெரு மக்களும் இந்தி எதிர்ப்பில் முனைந்திருந்த காலம் அது. எப் பொழுதும் புலவர் தோழராகவும், தமிழ்மொழிக் காப்பாளராகவும் திகழ்ந்தவர் திரு.வ.சு. ஆதலால் அவர்கள் இல்லம் புலவர் அவையமாகவும், இந்தியெதிர்ப்புப் பாசறையாகவும் திகழ்ந்தது. அப் பொழுதில் அழகேஒரு வடிவாகி எழிலுறத் தவழ்ந்தும், மழலை மொழிந்து புலவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் வடிவழகியார். ஆதலால் 'தமிழரசியார்' என்று அவர் அழைக்கப்பெற்றார். பிறவி முதலே புகழ்பூத்த பூங்கொடியா விளங்கினார். தமிழிசை தனிவிருப்புடன் கற்றுத் தேர்ந்தார் கல்லூரிப் படிப்பும் கனிந்து வளர்ந்தார்.

இளைய செல்வி வயிரமணியார் தாத்தாவின் பெயரைத் தாங்கிய நன்மணியார். “பொன்னும் துகிரும்முத்தும மன்னிய, மாமலை பயந்த காமரு மணியும் மாலையாய் அமைந்தது போன்ற பண்புச் செல்வயிார். கற்பன கற்றுத் கவினுற வளர்ந்தார். இரட்டைப் பிணையலோ, இணைப்புறாக்களோ என்னுமாறு அக்கையும், தங்கையும் இனிது வளர்ந்தனர்.

தமிழரசியாரும், வயிரமணியாரும் பெற்றோருக்கும், உற்றோருக்கும் எத்துணை இன்பம் நல்கி அறிவு திருவுடன் வளர்ந்தவனர் என்பதைஅவர்கள் அன்புத் தந்தையார் திரு.வ.சு. எளிமையும் இனிமையும் சீர்மையும் தவழ எழுதிய குழந்தைப் பேச்சு, பிழையின்றிப் பேசுக, பழமொழிக் கதைகள், விளையாட்டுப் பந்தயம், எங்களுர்ச் சந்தை முதலிய நூல்களில் வரும் உரையாடல்களாலும் செய்திகளாலும் நன்கு அறியலாம்.

1943இல் வெளிவந்த நூல் 'விளையாட்டுப் பந்தயம்'. அதில் நல்ல குடும்பம் சிறந்த பள்ளிக்கூடம் ஆவதைக் காண்கிறோம். 'தமிழரசியும், வயிரமணியும் பெண்பள்ளிக் கூடத்தில் படித்து