உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. வீசு தென்றல்

(குழந்தைகளை வருங்காலப் பெரியவர்கள் ஆக்க வேண்டும் என்றால், பெரியவர்கள் இப்போது குழந்தையோடு குழந்தையாகி விடவேண்டும்.)

கோடை வெயிலுக்குக் குளிர்தரு நிழல்கிடைப்பது இன்பமே! அதனினும், அதனை அடுத்தே மாலை மதியமும் வீசுதென்றலும் வரின் பேரின்பமேயன்றோ! அதனாலன்றோ, “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவே தருநிழலே" எனத் தொடங்கிய வள்ளலார், “மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே" என்று விரித்தார்!

ஒருவர் இல்லறம் மேற்கொள்ளுதல், 'கோடையிலே குளிர்தரு' கிடைத்தல் போன்றது என்றால், நன்மக்களைப் பெற்று நலமோம்பி மகிழ்தல் வீசு தென்றலால் இன்புறுதல் போன்றதாம்!

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்'

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்'

6

இப் பாக்களின் சொல்லிலும் பொருளிலும் இரண்டும் கலந்த ஒருமையிலும் ஒன்றி ஒன்றித் திளைக்கும் மனம் எந்நிலை எய்தும்? அம்மனத்தைத் தொல்லை யுறுத்துங்கொல், என எழுதினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. (திருக்குறள் விரிவுரை: அணிந்துரை) தொல்லையிலா மனம் எவ்வகையால் அமைகின்றது? குறிப்பாக உணர்த்துகிறார்: குழந்தைகளால், குழந்தையரோடு, குழந்தையராக அளவளாவுதலால், குழந்தையரைப்பற்றிப்