உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

75

சென்னை, பவழக்காரத்தெருவில் உள்ள கழக மனையில் இவர்கள் இல்லறம் தொடங்கிது. கழகப்பணிகளே தலைக்கு மேல் இருக்க, இவர் வீட்டுப் பொறுப்பை ஏற்றுச் செய்வரோ? செய்தற்கு உள்ளமும், எடுத்துககொண்ட பணியு இடம் தருவனவோ? தாராவல்லவோ! ஆதலால், தொடக்கநாள் முதலே மங்கையர்க்கரசியார் மனையரசியாராகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள நேர்ந்தது!

அரசுக்கு எத்தனை துறைகள் உண்டு? சிறிய குடும்பம் ஆயினும் பெரிய குடும்பம் ஆயினும் அத்தனை துறைகளும் குடுமபத்திற்கும் உண்டு. அத்தனை துறைகளையும் செவ்வையாய்ச் செய்து முடிக்கவேண்டிய பொறுப்பு முழுமையும் அரசியார்க்கே வாய்த்தது. செலவுக்கு வேண்டும் பொருளைத் தந்துவிடுவார் வ.சு. அதனைக் கொண்டு ஆகும் கடமைகளை யெல்லாம் அருமையாகச் செய்தலில் தேர்ந்தார் அரசியார். இத்திறன் அவர்க்கு வாய்த்தற்கும் அது செவ்விதாக நிகழ்ந்ததற்கும் மூலமாக இருந்தவை அம்மையார்க்கு அவர்தம் பெற்றோர் தந்திருந்த பயிற்சியும், உடன் பிறந்தவர்கள் காலத்தில் தவறாமல் கனிவோடு செய்து வந்த உதவிகளுமேயாம். நாட்டில் இவ்வாறு எத்தனை குடும்பங்கள் புரிந்து கொண்டு கடனாற்றுகின்றன!

"மருவிய காதல் மனையாளும் தானும்

இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று”

என்பது அறநெறிச்சாரம். இச் சாரம் சார்ந்தது வ.சு. வாழ்வு!