உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

79

சொல். கண்விழி என்று கேட்கவில்லையா? சொற்களைத் திருத்தமாகச் சொன்னால் மட்டும் அவற்றைப் பிழையின்றித் திருத்தமாக எழுதலாம் என்றார்கள்” இவ்வாறு 'பிழையின்றிப் பேசுக' என்னும் நூல் தொடங்குகிறது.

"இங்கே உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் (1932) சென்னையில் திரு.பா. மாணிக்கநாயக்கர்என்னும் பேரறிஞர் ஒருவர் இருந்தார். அவர் தமிழ் ஒலி ஆராய்ச்சியில் மிக வல்லவர். பிறமொழி கலவா தமிழைத் திருத்தமாகப் பேசுவார்; எழுதுவார்; அவர் பொறித் துணை கண்காணிப்பாளராக (சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்) விளங்கினார். இப்போதுஅமைந்திருக்கும் மேட்டூர் அணைக் கட்டுக்கு இவர் பார்த்துக் குறித்துக கொடுத்த அறிஞர் இவரே. இவர் மனைவி ஒருநாள் இவருக்கு எழுதிய கடிதத்தில் பிண்ணாக்கு என்ற சொல்லைப் 'புண்ணாக்கு' என்று பிழைபட எழுதியிருந்தாராம். அதனைப் பார்த்து நாயக்கர் தம்மனை யார்க்கு அனுப்பிய விடையில் ‘கடிதத்தில் கண்ட புண்ணாக் மனத்தை பெரிதும் புண்ணாக்கிவிட்டது' என்று எழுதினாராம்; என்று அப்பா சொன்னார்கள். அதைக் கேட்டு நாங்கள் சிரித்த சிரிப்பில் எங்கள் வயிறும் புண்ணாய்விட்டது.'

என்

இளந்தைப் பருவத்திலேயே இவ்வாறு குழந்தைகள் பிழையின்றிப் பேசுதற்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டால் அவர் உரையாடலும் எழுத்தும் எவ்வளவு சிறப்பாக அமையும்!

குழந்தைப் பேச்சு, எங்களூர்ச்சந்தை ஆகிய நூல்கள் தமிழரசி கூறுவதாகவே அமைந்தவை. அக்கையும், தங்கையும் எப்படி இருக்வேண்டும் என்று எண்ணி எண்ணித் தேக்கெ நெஞ்சத்தின் வெளிப்பாடே இவ் வுரையாடல் நூல்களும், நூல்களும் என்பது வெளிப்படை.

குழந்தைகள் எப்படியெல்லாம் வளரவேண்டும் என்ற ஆர்வத்தூண்டலை ஒவ்வொரு சொல்லிலும் காணுமாறு அமைந்துள்ள சிறு நூல்கள் இவை. 'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்பதை எளிமையாக விளக்கிக் காட்டுபவை!

இந் நூலில் காணும் கனவுகள் நனவுகளாய் ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழுமாயின் வீழ்ச்சியுறும் உலகம், எழு கொள்ளும் என்பதற்கு ஐயமில்லை!