உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப்‌ பற்கள்‌ 625

சில சமயங்களில் தொல்லையில்லாமல் இருக்கின் றது என்று புறக்கணித்து விடுவதால் நமக்குத் தெரி யாமல் எலும்பு அரிப்பு உண்டாகித் தாடை எலும் பில் துளையை ஏற்படுத்திவிடும். எலும்பின் முழு வடிவம் குறைக்கப்படுவதால், வேலைப்பளு தாங்கா மல் கீழ்த்தாடை எலும்பு தானே உடைந்துவிடுவதும் உண்டு. தொடர்ச்சியான அழற்சி அல்லது உறுத்தல் இருக்குமேயானால் நாளாவட்டத்தில் வாயில் புற்று நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. முளைக்காத புதைப்பட்ட அறிவுப் பற்களுக்கும், அதற்கு முன் இருக்கும் பற்களுக்குமிடையே ஏற்படும் இடைவெளியில் இனிப்பான, மிருதுவான உணவுப் பதார்த்தங்கள் தங்குவதால், அறிவுப் பற்கள் சொத் தையாவது மட்டுமின்றி, அதன் முன்னேயுள்ள நல்ல பற்களையும் தாக்கிச் சீரழித்துவிடும். நுண்ணுயிர்க் கொல்லி போன்ற மருந்துகள் இல்லாத காலத்தில், முளையாத புதைப்பட்ட அறிவுப் பற்களினால் உயிரிழந்தவர்களும் உண்டு. இன்றோ, இது போலத் தீவிரமான தொல்லைகள் இல்லாவிட் டாலும் மேற்கூறிய வகையில் தொல்லைகளை மக்கள் அடைகிறார்கள். குரு இதற்குக் காரணம், மக்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும், வேண்டிய மருத்துவம் பெறா மையே. மேலும் பற்களை எடுப்பதால், கண் டாகிவிடும். காது கேட்கா து என்பன போன்ற தவறான கருத்துக்களைக் கொண்டு தொல்லைகளைப் பொறுத்துக்கொண்டே காலத்தைப் போக்குகிறார் கள். இது தவறு. இக்காலத்தில் நோய் நாடி, நோய் நீக்கும் விதம் அறிந்திருப்பதாலும், மேலும், அறுவைச் சிகிச்சை கள் சிறந்த முறையில் முன்னேறியிருப்பதாலும், எளிதாகவும், வலியின்றியும் தொல்லை தரும் அறிவுப் பற்களை நீக்கிவிடலாம். மிருதுவான உணவுப் பொருள்களை மென்று சாப்பிடுவதால் அறிவுப் பற்களை நீக்கி எஞ்சிய 28 பற்களினாலேயே திறம்படச் சாப்பிட முடியும்,பேச முடியும். இந்த முளையாத பற்கள் சில சமயங்களில் முன் கோணலாகவும், பின் கோணலாகவும், பெருத்தும் வளரும். மேலும், கீழ்த்தாடையில் திசை மாறிக் கீழ் நோக்கியும் நகரும். மற்றும் கீழ்த்தாடையில் பின் னால் இருக்கும் தாடை மூட்டுப் பக்கமும் வளர் வதுண்டு. மேல் தாடையிலுள்ள சரியாக முளையாத பற்கள் வெளிப்பக்கமே இடறி வளருமேயானால், அ.க-2-40 அறிவுப் பற்கள் 625 கீழ்த்தாடை திறந்து மூடும்போது திசுக்கள் அடி பட்டுப் புண் ஏற்படுவதுண்டு, சீராக வளராத அறிவுப் பற்களினால் கடிபுற்று தாக்கப்படலாம். அறிவுப் பற்களைச் சுற்றியுள்ள திசுக்கள் சில சமயங் களில் மாறுபட்டுக் கடிபுற்று நோய்க்கு வழி கோலும். சுமார் ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு இவ் விதமான கடிபுற்று நோய் ஏற்படுவதுண்டு. இந்தக் கடிபுற்று பற்களைக் கவனமாகப் பாதுகாப்பவர் களுக்கும் வருவதுண்டு. ஆகையினால் பற்களின் அமைப்பு, வளரும் முறை ஆகிய இவைகளை அறிய அப்போதைக்கப்போது நாம் பற்பரிசோதனை செய்து வரவேண்டும். இந்த நோய் தென்படும் காலை முளையிலேயே கிள்ளிவிடுவது போல் மருத் துவம் மேற்கொள்ளுதல் வேண்டும். அதனால் நல்ல பலனும் உண்டாகும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதால் இவ் விதமான கொடிய விளைவுகளிலிருந்து நாம் காப் பாற்றப்படலாம். தேவை இருக்குமேயானால் வருட மொருமுறை கதிர்வீச்சுப் படம் எடுத்துத் தெரிவு செய்தல் நலம். அழற்சி என்பது முளையாத அறிவுப் பற்களி னால் ஏற்படுகின்றது. அடிக்கடி ஏற்படும் அழற்சிக்கு மருத்துவம் செய்யக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் நாளாவட்டத்தில் மருத்துவ வேகம் இழப்பது மட்டுமின்றி, ஒவ்வாமை போன்ற அதிர்ச் சியான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், தேவைப்படும்போது உயிர்க்கொல்லி மருந்துகள் வலுவிழந்து பயனற்றுப் போய்விடும். ஆகையினால் நேரிடையான நோய்முதல் காரண மான முளையாத பற்களை எடுத்துவிடுவதுதான் நல்ல முறையாகும். இன்றோ நவீனமும், நாகரிகமும் விரைவாகப் பரவி வருகின்றன. அதன் விளைவாக, மென்று உண்ணும் பழக்கம் குறைந்து வருகிறது. அதனால் தாடைகளுக்கு வேண்டிய பயிற்சி குறைவதனால், பற்களைக் கொண்ட தாடைகளின் வளர்ச்சி குறை பட்டுப்பின் முளைக்கும் அறிவுப் பற்கள் முளைக்க இடமில்லாமல் தவிக்கின்றன. இஃது நவீன முன் னேற்றமடைந்த மேலை நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது. நாகரிகம் பரவாத முன்னேற்ற மடையாத நாடுகளில் இவ்விதத் தாடைக் குறை வளர்ச்சியினால் ஏற்படும் முளையாப் பற்களைக் காண்பதரிது. உணவு உண்ணும் முறை எளிதாக ஆகத் தாடை வளர்ச்சி சிறுக்கிறது. அதனால் கடைசியில் முளைக்கும் அறிவுப் பற்கள் முளைக்க இடமில்லாமல் தவிக்கின்றன. இஃது இயற்கையின் போக்கு, போகப் போக இயற்கையே பயனற்ற அறிவுப் பற்களை