உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆப்பு

8ஆப்பு சுண் போது கிளைகளைக் கவாத்துச் செய்வது (prunirg) கையாளப்படுகின்றது. ஏனெனில் கிளைகளை நெருக் கமாகவும், நீண்டு உயரமாகவும் வளரவிடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. ஆப்பிள் மரங்கள் நடப்பட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் பயனளிக்கத் தொடங்குகின்றன. பலவகையான நோய்கள் ஆப்பிள் மரத்தைத் தாக்குகின்றன. கருப்புத்தண்டு நோய்(stem black), பழுப்புத் தண்டு நோய் (stem brown) எனப் படும் இருவகை நோய்கள் கோனியோத்தீசியம் கொமாட் டோஸ்ப்போரம் (Goniothecium chomatosporum) பாட்ரி யோஸ்ஃபிரியா ரிபிஸ் (Botryosphaeria ribis) என்ற பூஞ்சைகளால் முறையே உண்டாகின்றன. கறுப்புத் தண்டு நோயினால் தண்டுகளில் கருமை நிறக் கீறல் கள் உண்டாகி மரங்கள் அரிக்கப்பட்டு, பட்டுப் போகின்றன. இது ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் ஏற்படுகின்றது. பழுப்புத் தண்டு நோயினால் பட்டைகள் தாள் போன்று மாற்றமடைந்து சுருண்டு விடுகின்றன. ஏப்ரல்-மே மாதங்களில் இவ்வாறு ஏற் படுகின்றது. இந்த இருவகை நோய்களும் கவாத்து செய்தலினால் உண்டாகின்ற காயங்களின் வாயிலா கப் பூஞ்சைகள் ஊடுருவிச் செல்வதால் ஏற்படுகின் றன. ஆதலால் ஈயச் செந்தூரம் (red lead, 2oz.) காப்பர் கார்பனேட்டு (copper carbonate, 20z.), ஆளி விதை எண்ணெய் (linseed oil, 100 c.c.) ஆகியவற் றினால் செய்த பசையைக் காயங்களின் மீது தடவு வதால் இந்நோய்கள் தடுக்கப்படுகின்றன. ணாம்புக்கந்தகக் (lime sulphur) கலவையை வேனிற்காலத்தில் இருமுறை தெளிப்பதாலும் கருப் புத் தண்டு நோய் வராமல் பாதுகாக்கலாம். இளஞ் சிவப்பு நோய் (pink disease), கார்ட்டீசியம் சால் மோனிக்கலர் (Cortictum salmonicolor) என்ற பூஞ்சை யினால் குமான் (Kumaon) குன்னூர் (Coonoor), ஆகிய இடங்களில் பயிராகின்ற மரங்களில் ஆகஸ்ட்டு- செப்டம்பர் மாதங்களில் நோய்தோன்றுகின்றது. சிறு வெள்ளைக் கொப்புளங்களாகத் தோன்றிக், கடை சியில் ஊசியின் தலைப்பு அளவில், இளஞ்சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட பாகங்கள் முழுதிலும் பெருமளவில் காணப்படுகின்றது. மேலும் இலைகள் பழுப்பாகிவாடி விடுகின்றன. இதைத் தடுப்பதற்குக் கவாத்து செய்தலினால் ஏற்பட்ட காயங்களை ஈயம், செம்புகார்பனேட்டு (lead - copper carbonate) ஆகி யவற்றினாலான பசையைப் பூச வேண்டும். பாதிக் கப்பட்ட கிளைகளை அகற்றி எரித்துவிட வேண் டும். ஏதாவது பாதிக்கப்பட்ட வேற்றுச் செடிகள் (alternative plants) ஆப்பிள் மரங்களுக்கு அருகில் இருந்தால் அவற்றையும் அழித்துவிட வேண்டும். இது போன்று பழுப்பு அழுகல் (brown rot) ஹிகிலிரோட் டீனா ஃபுருண்டிஜீனா (Sclerotina fructigena) என்ற பூஞ்சையினாலும், காலர் அல்லது வேர் அழுகல் {collar of root rot, ) கார்ட்டீசியம் ரோல்ஃபிலியை Corticium rolfsii) என்ற பூஞ்சையினாலும், ஆப்பிள் ள தழும்பு நோய் (Apple scab) வெஞ்சுரியா இன்ஈக்கு வாலிஸ் (Venturia inaequalis) என்ற பூஞ்சை யினாலும் உண்டாகின்றன. கம்பளிப் பூச்சிகள் (woolly caterpillars), கம்பளி அசுவணி (wolly aphis), சிதல் பூச்சிகள் (scaley insects) ஆகியவற்றி னாலும் ஆப்பிள் மரத்திற்குத் தீமைகளேற்படு கின்றன. பொருளாதாரச் சிறப்பு. உலர்த்தப்பட்ட ஆப்பிள் பழங்கள் ரொட்டிகள் செய்வதில் பயன்படுகின்றன. ஆப்பிள் மாவு குழந்தைகளுக்கேற்படுகின்ற சில வகை வயிற்றுப்போக்கை (diarrhoea) நிறுத்துவதற் குக் கொடுக்கப்படுகின்றது. இதன் பழங்களிலிருந்து குறிப்பாக மஞ்சள் நியூட்டன், (yellow Newton) பால்டுவின் (baldwin) வகைகளிலிருந்து ஆப்பிள் பானம் தயாரிக்கப்படுகின்றது. இது வயிற்றுப் போக்கு, குடற்புண் (peptic ulcer) ஆகியவற்றைக் குணப்படுத்துகின்றது. ஆப்பிள் பழங்கள், பழக் குழைவு (jam), பானங்கள் (beverages), ஜெல்லிகள் (jellies) செய்வதற்குப் பயன்படுகின்றன. ஆப்பிள் தேறல் (wine), ஆப்பிள் பிராந்தி {brandy) ஆகிய வற்றைப் பழங்களின் சாற்றை நொதிக்கச் செய்து (fermentation) தயாரிக்கின்றார்கள். தோலும், மத்திய பாகமும் நீக்கப்பட்ட பழங்களிலிருந்து பழக்குழை வும், முர்ராபாவும் (murraba) செய்யப்படுகின்றன. பழங்களை மென்மையாகும் வரை நீரில் வேக வைத்துக் குழைவாக்கிச் சர்க்கரையையும், வாசனைப் பொருள்களையும் சேர்த்து ஆப்பிள் வெண்ணெய் (Apple butter) தயாரிக்கின்றார்கள். கழிவுப்பொரு ளாக நீக்கப்படுகின்ற பழங்களின் தோல், மத்திய பகுதி ஆகியவை ஆப்பிள் பொமேஸ் (Apple pomace என்ற விலங்குத் தீவனம் செய்யப் பயன்படுகின்றன. ஜே.பி.எம். முகமது அப்துல் காதர் நூலோதி 1. Janick, J., Moore, J.N., Advances in Fruit Breed- ing, Purdue Univ. Press, West Lafayette, 1975. 2. Lape, F., Apples and Man, Van Nostrand Rein- hold Co., New York, 1979. 3. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆப்பு இரண்டு தலைமைப் பரப்புகள் ஒரு குறுங்கோணத் தில் எதிர்ப்புத் தரும்படி அமைந்த அமைப்பு ஆப்பு (wedge) எனப்படும். ஆப்பு, மரக்கட்டை அல்லது உலோகத்தால் தடித்த தலைப்பகுதியும் குறுகிய கூர்முனையும் கொண்டிருக்கும்படிச் செய்யப்படு கிறது. இது சாய்தளத்தோடு (inclined plane) நெருங்கிய உறவுடையது. தரப்படும் விசையின்