உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஆப்ரிக்காட்‌

12 ஆப்ரிக்காட் சிறப்புப் பண்புகள். இது ஏறக்குறைய 10 மீ. உயரத்தை (நடுத்தர அளவினை) அடையக் கூடிய நிறமானது. மரமாகும்; அதன் பட்டை சிவப்பு இலைகள் முட்டை (ovate), உருண்டைமுட்டை (round-ovate). சில சமயங்களில் ஏறக்குறைய, இதய (subcordate); 5 முதல் 9 செ.மீ. வடிவானவை நீளமுள்ளவை; இவற்றின் நுனி நீள் கூர்மையானது (acuminate); விளிம்பு அரைவட்ட வெட்டுள்ளது (crenate); இலைக் காம்புகள் சுரப்பிகளையுடை யவை; இலை மொட்டுக்கள் சுருண்டிருக்கும் (con- volute). இலையடிச்சிதல்கள் (stipules) ஈட்டிவடி வெளிர் சிவப்பு வானவை (lanceolate). மலர்கள் நிறமுடையவை; இலைகள் தோன்றுவதற்கு முன்பே உண்டாகக் கூடியவை. கனிகள் ஏறக்குறைய 5 செ. மீ. குறுக்களவு உடையவை. முதிர்வதற்கு முன் கேசங்களுடையவை; முதிர்ந்த பிறகு கேசங்களற் சிவப்புக்கலந்த மஞ்கள் நிறத்தோலைப் பெற்றவை; இவற்றின் சதை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமானது; கெட்டியானது; இனிப் பானது; இது கொட்டையிலிருந்து தனித்திருக்கும்; கொட்டை தட்டையானது; மேற்பரப்பில் வரம்பு களுடையது. றவை; தாவரவியல் அடிப்படையில் இச்சிற்றினத்தில் பலவகைகள் (varieties) உண்டு. இவற்றில் கருமை அல்லது சிவப்புக்கலந்த ஊதாநிற ஆப்ரிக்காட் என்று டாசிகார்ப்பா கூறப்படுகின்ற பு. ஆர்மீனியாக்கா வகை (P. armeniaca Var. dasycarpa Koch) காஷ்மீரில் பயிராக்கப்படுகின்றது. பயிரிடும் முறை. கோடைக் காலங்களில் மித மான வெப்பநிலை உடைய பகுதிகளில் 850 முதல் 1700 மீ. உயரம் வரையிலும் இது நன்கு வளர் கின்றது. நீர் தேங்காத களிச்சேற்று மணற் (loam) பாங்கான நிலம் பயிரிடுவதற்கு மிகவும் உகந்தது. மொட்டு ஒட்டுதல் (bud grafting) மூலம் இது பரப் பப்படுகின்றது. இவை இளவேனிற்காலம் அல்லது இலையுதிர் காலங்களில் ஒன்றுக்கொன்று 6 முதல் 8ம். இடைவெளி விட்டு நடப்படுகின்றன. நட்ட பிறகு குறிப்பாக வறண்ட காலங்களில் நீர் பாய்ச்சு தல் வேண்டும். செழிப்பாகவும், விரைவாகவும் வளரக்கூடிய தன்மை உடையவையாகையால் அவ் வப்பொழுது அதிகப்படியாக உண்டாகின்ற கிளை களைக் கவாத்துச் செய்தல் (pruning) வேண்டும். காய்கள் அதிகமாக உண்டாகும்பொழுது, வொரு மிலாறிலும் இரண்டு அல்லது மூன்று காய் களிருக்குமாறு செய்து கிளைகளைக் கழிக்க வேண்டும். இந்த முறை காய்கள் சீராக முதிர்ச் சியடையவும், அவை பெரிய அளவை அடையவும் உதவுகின்றது. ஒவ் நோய்களும் தடுப்பு முறைகளும். பவழப்புள்ளி நோய் (corai spot disease), நெக்டிரியா சின்ன பாரினா (Nectria cinnabarina) என்ற பூஞ்சை யினாலும், பழுப்பு அடை அழுகல் நோய் (brown patch rot), ஃபில்லோஸ்ட்டிக்ட்டா புருனிக்கோலா (Phyllosticta prunicola) என்ற பூஞ்சையினாலும், நுரை இதய அழுகல் நோய் (spongy heart rot), பாலி போரஸ் ஹிஸ்ப்பிடஸ் (Polyporus hispidus) என்ற பூஞ்சையினாலும் முறையே ஏற்படுகின்றன. இருந்த போதிலும் இவையாவும் ஆபத்தானவையாகக் ஆனால் கருதப்படுவதில்லை. சூடோமானாஸ் (pseudomonas ) என்னும் பாக்டீரியாவின் சிற்றினங் களினால் உண்டாகின்ற பிசின் நோய் (gummosis) அல்லது காங்கர் (canker) மிகவும் ஆபத்தானது. பாதிப்பு ஏற்பட்ட உடனேயே கட்டைகளை அகற்றி, எரித்துவிடுவதுதான் இதைத் தடுப்பதற்கான ஒரே முறையாகும். அனோமாலா பொலிட்டா (Anomala polita) என்ற வண்டும், லிமாண்டிரியா ஆப்ஃபுஸ்கேட்டா (Lymantria obfuscata) என்ற வண்ணத்துப் பூச்சியும் கம்பளிப் பூச்சியும் இலைகளுக்கும், தண்டு இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மரத்தை கோலினால் சுற்றுவதாலும், கவாத்து செய்தலின் மூலம் உயரப்போக்கு வளர்ச்சியைக் கட்டுப்படுத்து வதாலும் இவற்றைத் தவிர்க்கலாம். வைக் பொருளாதாரச் சிறப்பு. ஆப்ரிக்காட் பழத்தின் சமைத்த கூழைத் (pulp) துணியின் மேல் தடலி உருட்டி, உலர்ந்த பிறகு அதைப் பிரித்தெடுத்து உண்பார்கள். வெவ்வேறு ஆப்ரிக்காட் வகைகளைக் கலந்து, அவற்றிலிருந்து பழக்குழைவு (jam), பானம் (beverage), அப்பளம் போன்ற அடை (paped) ஆகிய வற்றைச் செய்வார்கள். கொட்டையிலிருந்து சமைப் பதற்கும், எரிப்பதற்கும் பயன்படுகின்ற எண்ணெய் தயாரிக்கின் றார்கள். இந்த எண்ணெய் வாதாம் எண்ணெய்க்குப் (almond oil) பதிலாகவும், கலப் படம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது வாசனைப் பூச்சுப் பொருள்களும் (cosmetics), மருந்துகளும் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பிண்ணாக்கு எருவாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பழங்களில், சர்க்கரைப் பொருள்களும், 'ஏ' ஊட்டச்சத்தும் (vitamin A), தயாமினும் (thiamine), இரும்புச் சத்தும் நிரம்பியிருக்கின்றன. கால்சியம், பாஸ்ஃபரம், இரும்புச்சத்துப் பொருள்களடங்கிய இப்பழத்தி லிருந்து சத்துள்ள குழந்தைகளுக்கான தயாரிக்கப்படுகின்றது. நூலோதி. உணவு எ.கோ. 1. Hooker, J.D. Hook's F. Fl.Br. Ind. 1878. 2. The Wealth of India. CSIR Publication, New Delhi, 1984,