உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபத்துமிகு நோய்களும்‌ முதலுதவியும்‌ சிகிச்சைகளும்‌, கால்‌ நடை 15

ஆபத்துமிகு நோய்களும் முதலுதவியும் சிகிச்சைகளும் (கால்நடை) 15 வைக்கவேண்டும். வலி தெரியாமல் மரத்துப் போகச் செய்யும் களிம்புகளும் சில நேரங்களில் தடவலாம். அமிலங்களினாலும் காரங்களினாலும் ஏற்படும் புண் கள். பாதிக்கப்பட்ட இடங்களில் அமில, காரங்களின் தன்மையை முதலுதவியால் குறைக்கவேண்டும். எடுத்துக் காட்டாக, அமிலத்தினால் புண்கள் ஏற் பட்டால் அவற்றில் காரத்தை ஊற்றி அமிலத்தின் தன்மையைக் குறைக்க வேண்டும். முதலுதவியாக அமிலம் பட்ட இடத்தைத் தண்ணீர்விட்டுக் கழுவி விட வேண்டும். பின் சமையல் சோடாவைத் தண்ணீரில் கரைத்த கரைசலால் அமிலம் பட்ட இடத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இதனால் எஞ்சியிருக்கும் அமிலம் முறிவுபடும்; அமிலத்தின் பாதிப்பு மட்டுப்படும். அதேபோல் காரங்களுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவி விடவேண்டும். பின்னர் நன்கு நீர்ப்பித்த அசெட்டிக் அமிலம் போன்ற மென் அமிலக் கரைசலால் கழுவி விட வேண்டும். விபத்துக்களினால் ஏற்படும் இரத்தக் கசிவுகள். இரத்தக் கசிவு ஏற்படும் இடத்தைப் பொறுத்துச் சிகிச்சையும் மாறுபடுகின்றது. கால்களிலோ, வால் பகுதி தொடை முதலிய இடங்களிலோ காயம் ஏற் பட்டால் அந்தப் பகுதிக்கு மேல் சற்றுத் தள்ளி ஒரு கட்டு அல்லது ரப்பர் கட்டுப் (Esmarchi bandage) போட்டு அழுத்தமாக முடிபோட வேண்டும். இந்த முறையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இதைக் கையாள முடியாது. சிறுசிறு இரத்தக் கசிவு ஏற்பட்டால் அந்த இடங்களில் பஞ்சை வைத்துச் சில நிமிடங்கள் நன்றாக அழுத்திப் அழுத்திப் பிடித்துக் கொள்ளலாம். அல்லது குளிர்ந்த நீர், பனிக்கட்டி, டிங்ச்சர் பென்சாயின் (tincture benzoin) முதலிய வற்றைப் பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தி இரத்தக் கசிலைக் கட்டுப்படுத்தலாம். மேலும் சூட்டுக் கோலால் கசிவு உள்ள இடத்தில் வைத்து அழுத்தி னால் பலன் உண்டாகும். முக்கியமாகப் பாதிக்கப் பட்ட விலங்கினங்களைக் கூட்டம் இல்லாத நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். அதிர்ச்சி. சாலை விபத்துக்கள், விபத்துக்களினால் அதிகமான இரத்தக் கசிவு, தீப்புண்கள், நுண்கிருமி களால் ஏற்படும் ஒவ்வாமை (alergy) முதலிய சில காரணங்களால் கால்நடைகளுக்கு அதிர்ச்சி (shock) வரக்கூடும். அச்சமயத்தில் பாதிக்கப்பட்ட விலங்கைச் சுற்றிக் கூட்டம் கூடாமல் அது சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்படிச் செய்யவேண்டும். குளிர்ந்த நீரை முகத்திலும் உடலிலும் தெளிக்க வேண்டும். மின் அதிர்ச்சி,இடி,மின்னல் போன்றவற்றினால் ஏற்படும் அதிர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். உடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாய்க்கடி முதலில் கடிபட்ட இடத்தை நன்றாகச் சவர்க்காரத்தால் சழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சூட்டுக் கோலால் கடிபட்ட இடத்தை அழுத்த வேண்டும். பின் மருத்துவமனைக்குச் சென்று வெறி நாய்க்கடி மருந்தைச் சிரை வழி 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை போடவேண்டும். பாம்புக்கடி. பாம்பு கடித்த உடனே கடிபட்ட இடத்தை ஒரு கயிற்றினால் நன்றாக இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும். இதனால் நஞ்சு கலந்த இரத்தம் உடலின் பல பாகங்களுக்கும் செல்லாமல் தடுக்கப் படுகின்றது. பின்னர் கடிபட்ட இடத்தைக் கத்தியால் கீறி நஞ்சு கலந்த இரத்தத்தை உறிஞ்சியோ,பிதுக் கியோ எடுத்துவிட வேண்டும். பிறகு அந்த இடத்தை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து மருந்து போட்டுக் கட்டுப்போட வேண்டும். இறுதியில் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தகுந்த சிகிச்சை செய்யவேண்டும். புண்களும் காயங்களும். புண்களில் பலவகை உள்ளன. எடுத்துக்காட்டாக, நாய், பாம்பு முதலியன கடித்து ஏற்படும் புண்கள், உடலிலேயே கட்டி போல் ஏற்பட்டுப் பிறகு உடைந்து ஏற்படும் புண்கள், கீழே விழுந்தோ மற்ற ஆயுதங்களாலோ ஏற்படும் புண்கள் எனப் புண்களைப் பலவகையாகப் பிரிக்கலாம். எனவே அவற்றிற்கான சிகிச்சைகளும் அந்தந்தக் காரணங்களால் ஏற்படும் புண்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. ஆனால் பொதுவாக எல்லாப் புண்களையும் முதலில் நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்து புரை எதிர்ப்பியை வைத்தல் (antiseptic dressing) அல்லது நுண்ணுயிர்க்கொல்லி பயன்படுத் துதல் (antibiotic application) முறையில் சிகிச்சை செய்யலாம். மற்றவற்றிற்கு அருகில் உள்ள கால் நடைமருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை செய்ய வேண்டும். வயிற்றுவலியும் வயிறு உப்புதலும். பொதுவாக ஆடு, மாடு, எருமை, எருது முதலிய விலங்குகளுக்கு அடிக் கடி இந்தத் தொல்லை ஏற்படும். இதற்கான மூலகாரணங்கள் உணவுகள்தாம். கால்நடைகளுக்கு அளவுக்கு அதிகமான பிண்ணாக்கு, மாவுப்பொருள் கள். சமைத்த உணவு, தானியங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும்போது வயிற்றில் உப்புதல் ஏற்பட்டு வயிற்றுவலியும் உண்டாகின்றது. சிகிச்சை முறைகள். வழக்கமான அளவிலேயே உணவைக் கொடுக்க வேண்டும். அதிகமாக வயிறு உப்பிக் கொண்டால் கால்நடைகளுக்கு 100 மி.லி. முதல் 400 மி.லி. வரையில் கடலை எண்ணையை வயிற்றில் ஊற்றலாம். மேலும் சமையல் சோடா, சாதாரண உப்பு முதலியவற்றை நீரில் கரைத்துச் சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து அருந்தச் செய் யலாம். மற்ற சிகிச்சைகளுக்கு அருகில் உள்ள கால் நடை மருத்துவ மனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும்.