உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பியர்‌ (அலகு) 23

(dykes), காப்ரோ (gabbro) முதலியவை அவ்வாறு அல்லாமல் படிவுப் பாறைகள் உருமாற்றத்திற்கு உட் படுகின்றன. மகனீசியம் உட்கூறு கொண்ட மணல் கலந்த சுண்ணாம்புக்கல்லுடன் (magnesian mari) தோன்நும் பாறைகள், பாரா ஆம்ஃபிபோ லைட்டு என வழக்கில் கூறப்படுகின்றன. ஆனால் இயற்கையில் பெரும்பாலும் நிலஇயலின் படியும், நில வேதியியல் ஆராய்ச்சியின் படியும், கார அனற் பாறைகளே பெரும்பாலும் ஆம்ஃபிபோலைட்டாக மாறுகின்றன. ஆம்ஃபிபோலைட்டு, குவார்சைட்டு, வரிப்பாறை கள் ஆகியவை, ஆம்ஃபிபோலைட்டு ஆம்ஃபிபோலைட்டு உருமாற்றச் சுழலில் (amphibolite metamorphic facies) உருவாகும் பாறைகள் ஆகும். எனவே ஆம்ஃபிபோலைட்டு பாறைகளில் கிடைக்கும் தனிம ஹார்ன்பிளெண்டு பலவகை வேதியியல் உட்கூறுகளைக் கொண்டதாகக் காணப்படும். இவ்வகை வட்டார உருமாற்றம் நிகழும்போது அதில் தோன்றும் ஹார்ன்பிளெண் டின் கட்டமைப்பில் இரும்பிற்குப்பதில் (iron II), மகனீசியமும் (magnesium) சோடியத்திற்குப்பதில் கால்சியமும், இரும்புக்குப்பதில் (iron III) அலுமினி யமும் (aluminium) aluminium) வேதியலாக இடம் மாறிக் கனிமத்தின் உட்கூறில் இயல்பாக உள்ள தனிமங்கள் குறைந்து காணப்படும். அதாவது, இயற்கையான ஹார்ன்பிளெண்டின் வேதியியல் உட் கூறு மாறுபட்டு மற்ற தனிமங்களின் ஊடுருவல் குறைந்தோ, மிகுந்தோ காணப்படும். எனவே, ஹார்ன்பிளெண்டின் உண்மை உட்கூறு மாறு தலடைந்துவிடும். இவை இரட்டைக் கனிம (bimine- ralic) ஹார்ன்பிளெண்டு, பிளஜியோகிளேசு கொண்ட பாறை என்று கூறப்படுகின்றன. இவை வெவ்வேறு வகைப்பட்ட பாறைகளினின் று உருவானாலும், தோன்றுவதற்கு முன்பு இருந்த அவற்றின் தாய்ப் பாறையை (parent rock) அறுதி யிட்டுக் கூறமுடியாது. இது காரப்பண்புடைய பசால்ட்டு, காப்ரோ முதலியவற்றிலிருந்து உருவானால் குறைவான மடிப் புகளுடன் காணப்படும். ஆனால் இதை உறுதி யாகக் கடைப் பிடிக்க முடியாது. சில பாறைகளில் தூய குவார்ட்சு, பயோடைட்டு ஆகியவற்றுடனும், சிறப்பு வகைப் பாறையில் கார்னெட்டுடனும் காணப்படும். இவை, உருண்ட வடிவத்தில் பழமை யான யாப்பைப் (texture) பெற்றிருக்கும். எப்பி டோட்டு (epidote) என்ற கனிமம் இருந்தால் குறை வான வெப்பத்தில் உருவாகியுள்ளது எனக் கூறலாம். குறைந்த அருகிய கனிமங்களாக அப்படைட்டு, ஸ்பீன் (sphene) ஒளி ஊடுருவாத நரம்பிழைகளும் (opaque veins) காணப்படும். மிகு காரப் பண் புடைய அனற் பாறைகளில் (ultrabasic rocks) இருந்து ஆம்ஃபிபோலைட்டு உருவானால் இவை ம்பியர் (அலகு) 23 மிகவும் அதிகக் கருப்பாகவும் ஹார்ன்பிளெண்டு நிறைந்தவையாகவும், பயோடைட்டும், சில சமயங் களில் ஆந்த்தோஃபில்லைட்டு (anthophyllite) நிறைந்தவையாகவும் காணப்படும். படிவுப் பாறைகளில் (sedimentary rocks) இருந்து தோன்றிய ஆம்ஃபிபோலைட்டாக இருந் தால் அவை படிவுப் பாறையில் காணப்படும் கால்சி யத்தின் அளவைப் பொறுத்து, ஆம்ஃபிபோலைட் டில் உள்ள ஹார்ன்பிளெண்டின் வேதியியல் உட் கூற்றில் ஸ்பீனும் (sphene) டயாப்சைடும் (diopside எப்பிடோட்டும் (epidote) கார்டியரைட்டும் (cordie Tite) மிகுந்து காணப்படுகின்றன. சில வகை ஆம்ஃபிபோலைட்டுகள், சுண்ணாம் புப் பாறை டோலமைட்டு (dolamite) ஆகியன உரு மாற்றம் உறும்போது அங்கு உருவாகும் சிலிக்கா, மகனீசியம், இரும்பு வளிமங்களுடன் வேதிவினை புரிந்து உண்டாகின்றன. பரவல். இவ்வகை உருமாறிய பாறைகள் முன் கேம்பிரியன் (pre cambrian) காலத்தில் தோன்றிய பாறைகளில் பரவலாகக் காணப்படுகின் றன. அண் மைக்காலத்தில் அரிக்கப்பட்ட இளமையான மடிப்பு மலைகளிலும், கிரானைட்டு வரிப் பாறைகளுக்கு (granite gneiss) அடுத்தபடியாகவும், ஆம்ஃபிபோ லைட்டு நிலக்கோளப் பரப்பில் பரந்த படிகவுருவப் பாறைகளாகவும் அல்லது, படிக வடிவப் பாறைத் தகடுகளாகவும் காணப்படுகின்றன. இந்தியாவில் கோலார் தங்க வயல்களிலும் ஹட்டி (Hatti) கடகு (Gadag) அனந்தபூர் (Anantapur) ஆகிய இடங்களி லும் ஆம்ஃபிபோலைட்டுத் தகட்டுப் பாறை குவார்ட் சும் தங்கமும் கலந்த ஆம்ஃபிபோலைட்டு வரிப் பாறைகளுடன் கலந்து காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, வட ஆற்காடு முதலிய மாவட்டங்களில் பரவலாக ஹார்ன்பி ளெண்டு தகட்டுப் பாறைகளும் (hornblende schist ) ஹார்ன்பிளெண்டு வரிப் பாறைகளும் (hornblende gneiss) காணப்படுகின்றன. நூலோதி சு.ச. 1. Milovsky, A. V., kohanov, O.V., Mineralogy and petrography, Mir publishers, Moscow, 1982. 2. Krishnava, M. S., Geology of India Burma, Higginbothams (p) Limited, Madras, 1968. ஆம்பியர் (அலகு) ஆம்பியர் மின்னோட்டத்தின் அலகு. இது பத்தொன் பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு இயற்பியல் அறிஞர் ஆந்திரே மரி ஆம்பியர் என்பவர் பெயரால் வழங்கப்படுகிறது. இது முறைப்படுத்திய