உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆம்பியர்‌, ஆக்திரே மரி

24 ஆம்பியர், ஆந்திரே மரி மீ -கி.கி.-நொ -ஆ (MksA) அலகு அமைப்பின் அளவு அலகாகும். வெற்றிடத்தில் தள்ளத்தக்க வட்டவெட்டு முகமும் ஒரு மீட்டர் நீளமும் உள்ள இரண்டு இணைக்கடத்திகள் ஒரு மீட்டர் இடை வெளியில் பிரித்துவைக்கப்படும் போது 2 × 107 நியூட் டன்/மீட்டர் விசையை உருவாக்குவதற்கு அக்கடத் திகளில் செலுத்தப்படவேண்டிய நிலையான மின் னோட்ட அளவு ஓர் ஆம்பியர் என வரையறுக்கப் படுகிறது. இது ஓர் ஓம் மின்தடையுள்ள கடத்தியில் மின்னிலை ஒரு வோல்ட் வேறுபாட்டின்போது பாயும் மின்னோட்டத்திற்குச் சமமாகும். இயல்பு ஆம்பியரை 20°C இல் உள்ள 0.1 வெள்ளி நைட்டிரேட்டுக் கரைசலில் ஒரு நொடிக்கு 0.0011180 கிராம் வெள்ளியை மின்னாற் பகுத்து வீழ்படியச் செய்யத் தேவையான அளவு மாறாத மின்னோட்டம் எனவும் மின்வேதியியலாக வரைய இக்கலாம். அதாவது, இது ஒரு நொடிக்கு ஒரு கூலம்பு மின்னூட்டத்தைக் கடத்தும் மின்னோட்ட அளவுக்குச் சமமாகும். ஆனால் நடைமுறையில் கூலம்பைத்தான் ஒரு நொடியில் ஓர் ஆம்பியர் மின் னோட்டம் கடத்தும் மின்னூட்டத்திற்குச் சமமென வரையறுப்பது தற்கால வழக்கமாகிவிட்டது. பழைய (அனைத்துலக) ஆம்பியரும் புதிய (தனிநிலை) ஆம்பி யரும் 0.02 விழுக்காடு அளவு மட்டுமே வேறுபடு கின்றன. மற்ற மின்னோட்ட அலகுகள் மில்லி ஆம் பியர் (103ஆம்பியர்), மைக்ரோ ஆம்பியர் (107& ஆம்பியர்), அபாம்பியர் (10 ஆம்பியர்) என்பன. அபாம்பியர் அவ்வளவாக வழக்கில் இல்லை. காண்க. மின்னோட்டம்; அலகுகளும் செந்தரங்களும்,மின் ஆம்பியர், ஆந்திரே மரி உலோ.செ. மின் இயங்கியலை (electrodynamics) உருவாக்கிய பிரெஞ்சு நாட்டு இயற்பியல், கணிதவியல் அறிஞர் ஆந்திரே மரி ஆம்பியர் (Andre Marie Ampere) 1775-ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் இலியான் (Lyon) எனும் இடத்தில் பிறந்தார். 1836 ஜூன் 10 ஆம் நாள் மார்செல்லி (Marseille) எனும் இடத்தில் இறந்தார். மின்னோட்ட அலகு இவரது பெயரால் வழங்கப்படுகிறது. மின்னோட்டம் சுமக்கும் இரண்டு மின்காந்த ஏற்படும் கடத்திகளுக்கு இடையில் விசையின் விதிகளை இவர் சோதனைகள் மூலம் உருவாக்கினார். இவை ஆம்பியர் விதிகள் என வழங்கப்படுகின்றன. இவர் தந்தையின் வழிகாட்டுதலுடன் தமது சொந்த முயற்சியாலேயே கல்வி கற்றார். தமது 14ஆம் வயதில் அறிவியலில் விரிந்துபரந்த அறிவும் கணிதத்தில் முதிர்ச்சியும் பெற்றார். 1793-ஆம் ஆண்டு இவரது தந்தை வல்லாண்மை ஆட்சியில் (reign of terror) உயிர் இழந்தார். 1799 இல் மணமுடித்து 1800 இல் ஒரு மகனுக் குத் தந்தையானார். 1801-1803களில் பூர்கு (Bourg) நகரில் பேராசிரியரானார். மனைவி இயற்பியல் இறந்ததும் 1804 இல் பாரிசு சென்றார். 1809 இல் பாரிசு நகர் எக்கோல் பல்தொழில் நுட்பகத்தில் பேராசிரியர் (Ecole polytechnic) கணிதவியல் ஆனார். 1814 இல் அறிவியல் கல்விக் கழகத்துக்கு (Academy of science) உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். polytechnic) ஊசி 1820 செப்டம்பர் 11 ஆம் நாள் மின்னோட்டம் உள்ள கடத்தி அருகில் காந்த வட்டையைக் (magne- tic compass) கொண்டு சென்றால் காந்த விலகுகிறது என்ற ஆயர்ஸ்டெடின் கண்டுபிடிப்பு, அறிவியல் கழகத்துக்குக் கூறப்பட்டது. செப்டம்பரி லும் அக்டோபரிலும் நடந்த மறு கூட்டங்களில் ஆயர்ஸ்டெடு மின்னோட்டம் சுமக்கும் இரு கடத் திகள் தமக்குள் விசையை ஏற்படுத்திக் கொள்கின் றி றன என விளக்கினார். இந்த விசையைக் கண்ட யப் பயன்படும் கணிதச் சமன்பாடுகளையும் உரு நீளமான வாக்கினார். மின்னோட்டம் சுமக்கும் சுருளைவடிவச் (helical shape) சுருள் (coil) சட்டக் காந்தத்துக்குச் சமமானது என நிறுவினார். இந்தச் சுருளில் செருகப்படும் இரும்புத்துண்டு காந்த ஏற்றம் அடைவதையும் காட்டினார். நிலைக்காந்தங்களுக்கு இடையில் நிலவும் காந்த விசைகள் இரும்புத்துண் டின் மூலக்கூற்று மின்னோட்டங்களுக்கு இடையில் விசைகளே என விளக்கம் கூறினார். ஏற்படும் தொடக்கத்தில் நியூட்டனின் வினை எதிர்வினைச் சமவுடைமையுடன் இவரது கோட்பாட்டின் ஒரு பகுதி முரண்படுகிறது என்ற எதிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அது மறைந்துவிட்டது. பிறகு மின் இயங்கிய லின் ஆம்பியர் விதிகள் ஏற்கப்பட்டு வியப்புடன் அவை பாராட்டப்பட்டன. இவ்விதிகள் பிறகு 1865-இல் ஜெ.சி. மாக்சுவெல் ஏற்படுத்திய மின் காந்தக் கோட்பாட்டின் அடிக்கோள்களாய் அமைந் தன் நுண்புலமிக்க சோதனையாளரான ஆம்பியர் மின்னோட்டம் அளக்கும் கால்வானா அளவி, 26 கம்பிகள் உள்ள தொலைவரி ஆகியவற்றை ஆயர்ஸ் உருவாக் டெடின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி மின்திரட்டியை கினார். இவர் முதன் முதலாக (commutator)ஒத்த சுழல் மின் இணைப்புமாற்றியைக் (rotating switch) கண்டறிந்தார். இதை 1832 இல் எச்.பிக்சி (H.Pixii) தமது மின்னாக்கியில் (electric generator) பயன்படுத்தினார். இயக்கவியல் (mech- anics) ஒளியியல், புள்ளியியல், வேதியியல், படிக விளக்கவியல் (crystallography) ஆகிய பல களின் வளர்ச்சிக்கு இவர் துறை பெருந்தொண்டாற்றி