உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பியர்‌ மணி அளவி 25

யுள்ளார். இவரது நூல்களான மின் இயங்கியல் கவனிப்புகளின் தொகுப்பு, மின் இயங்கியல் நிகழ்வு களின் கோட்பாடு ஆகியன புகழ்பெற்ற மின்னியல் நூல்களாகும். ஆம்பியர்-சுற்று உலோ.செ. து மீ.கி.கி.நொ.ஆ (MksA) அலகு அமைப்பிலுள்ள காந்த இயக்கு விசையின் (magnetomotive force) அலகு. ஓர் ஆம்பியர் மின்னோட்டம் பாயும் மூடிய சுற்றுள்ள கண்ணியின் காந்த இயக்க விசை ஆம் பியர் - சுற்று என வரையறுக்கப்படுகின்றது. காண்க, அலகுகளும் செந்தரங்களும், மின்; கில்பர்ட்டு (அலகு); காந்த இயக்கு விசை. ஆம்பியர்-மணி உலோ. செ. ஒரு நேர்மின்னோட்டச் சுற்றுவழிக்கு ஒருமணி நேரத்தில் ஓராம்பியர் மின்னோட்டம் தர ஒரு மின் கலம் வெளியிட்ட மின் அளவு ஆம்பியர்-மணி எனப்படும். ஆம்பியர்-மணி என்பது மின்கலத்தின் கொண்மையை அல்லது கொள்ளளவைக் (capacity) குறிப்பிடும் புறநிலை அளவும் (physical quantity) நடைமுறை அலகும் (practical unit) ஆகும். இந்த அளவை நிலைக்காந்த இயங்கு சுருள் ஆம்பியர்- மணி அளவியாலும் மின்னாற்பகுப்பு ஆம்பியர்-மணி அளவியாலும் அளக்கலாம். காண்க, ஆம்பியர். மணி அளவி. ஆம்பியர் மணி அளவி உலோ.செ. ஆம்பியர் மணி என்ற என்ற அளவை அளக்கும் கருவி ஆம்பியர் மணி அளவி (Ampere-hour meter) எனப் படும். எனவே ஆம்பியர் மணியை அளப்பதற்குச் சுழலும் வட்டத் தட்டின் (rotating disc) வேகம், மின்னோட்டத்தின் அளவுக்கு நேர்விகிதத்தில் இருந்தால், வட்டத் தட்டைத் தாங்கியிருக்கும் சுழல் தண்டுடன் (spindle) தொடர் பல் சக்கரங் களை இணைத்துச் சுழல்தண்டின் சுற்றுகளைப் பதிவு செய்து ஆம்பியர் மணியை அளக்கலாம். ஆம்பியர் மணி அளவி அளப்பதற்குப் பொது வாக மின்னோடி அளவி (motor meter) பயன் படுகிறது. மின்னோடி அளவியின் முக்கியமான உறுப்புக்கள், மின்சுற்றில் செல்லும் மின்னோட்ட அளவின் விகிதத்திற்கேற்ப இயக்கும் திருக்கத்தை ஆம்பியர் மணி அளவி 25 (operating torque) ஏற்படுத்தும் இயக்க அமைப்பு (operating system), நிறுத்தும் திருக்கத்தைச் (braking torque) சுழல் வேகத்திற்கு ஏற்றாற்போல் ஏற்படுத் தும் நிலைக்காந்தம், பதிவு செய்யும் அமைப்பு என் பனவாகும். மிகவும் சிறப்பாக நேர்மின்னோட்டத்தில் ஆம் பியர்மணியை அளப்பதற்குப் பயன்படுவதுஆம்பியர் மணி பாதரச மின்னோடி அளவி. இதன் இயக்க முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மெல்லிய கட்டுமானம். மணிக்கிண்ணத்தில் செம்பு வட்டத்தட்டு, தாங்கியின் மேல் பொருத்தப் பட்டுள்ள தண்டின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட் டுள்ளது. இந்த வட்டத்தட்டு, இரண்டு இணைநிலைக் காந்தங்களின் நடுவே சுழலும். வலப்புறத்திலுள்ள இரு காந்தங்கள் இயக்கத் திருக்கத்தை ஏற்படுத்தும்; இடப்புறத்திலுள்ளவை நிறுத்தத் திருக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காந்தங்களில் தேனிரும்பால் ஆன காந்தத் துருவத் துண்டுகள் N, S பொருத்தப் பட்டுள்ளன. மேலும் இந்தத் துருவத்துண்டுகள் N, S இரண்டும் பித்தளையில் ஆன வட்டமான தட்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. பித்தளைத் தட்டுகளின் இடையில் இழை வலயங்கள் தட்டு களின் வெளிவட்ட விட்டம் அளவுக்குச் செய்யப் பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தட்டுகளும் இழை வலயங்களும் சேர்ந்து உள்ளே காலியான வட்ட வடிவமான பெட்டி போல் காணப்படும். இந்த அமைப்பிற்குள் செம்பு வட்டத்தட்டுச் சுழலும். மீதிப் பகுதி பாதரசத்தால் நிரப்பப்பட்டிருக்கும். பாதரசம் போதுமான அளவு செம்புத் தட்டின்மேல் மேல் நோக்கி இறுக்கு விசையை ஏற்படுத்துவதால் (bear- ing), தாங்கி உருளைகளின் மேல் செம்புத்தட்டால் உண்டாக்கப்படும் அழுத்தம் குறையும். சுழல் தண் டின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள புழு வடிவப் பல்சக்கரங்களுடன் பிணைக்கப்பட்டுப் பதிவு செய் யும் அமைப்புடன் இணைக்கப்படுகிறது. அளக்கப்பட வேண்டிய மின்னோட்டம் வட்டத் தட்டின் வட்ட விளிம்புக்கு வலப் பக்கத்திலிருந்து பாதரசம் வழியாகச் செலுத்தப்படுகிறது. வட்டலிளிம் பிலிருந்து தட்டின் மையப்பகுதிக்கு மின்னோட்டம் ஆரப் (radius) பாதையில் சென்றடைகிறது. அங்கி ருந்து தண்டின் மூலம் பாதரசத்திற்கும் பாதரசத்தி லிருந்து மணித்தாங்கி (jewel bearing) வழியாக வெளிப்பாதைக்கும் மின்னோட்டம் கொண்டு செல்கிறது. மின்னோட்டம் வலப்பக்கக் காந்தங்க ளின் கீழே மட்டும்தான் செல்லுகிறது. எனவே வலப் பக்கத் தட்டின் மேல் ஃபாரடேயின் விதிப்படி (Faraday's law) திருக்கம் ஏற்படுகிறது. அதனால் தட்டு, சுழலத் தொடங்குகிறது. இந்தச் சுழல் திருக்கத் தின் திசை, அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள் ளது. இதை ஃபிளமிங்கின் இடக்கை விதிப்படிக்