உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பியர்‌ விதி 27

செய்வதால் பாதரச உராய்வால் ஏற்படும்உராய்வுப் பிழை, ஈடுசுட்டப்படுகிறது. ந. சுப்பிரமணியன் நூலோதி 1. சுப்பிரமணியன், ஆர்.கே., மின் அளவைக் கருவி கள், முதற்பதிப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1975. 2. Golding, E.W., Widdis, F.C., Electrical Measure- ments and Measuring Instruments, Fifth Edition, A.H.Wheeler and Company Private Limited, Allahabad, 1963. 3. Popov, V., Electrical Measurements, Third Edition Mir Publishers, Moscow, 1982. ஆம்பியர் விதி ஒரு கடத்தியில் உள்ள மின்னோட்டம் அக்கடத்தி யைச் சுற்றிக் காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. மின்னோட்டத்தையும அதன் விளைவால் ஏற்படும் காந்தப்புலத்தையும இணைக்கும் அடிப்படை விதி களில் ஒன்றே ஆம்பியர் விதி (Ampere's law). மின் னோட்டம் இருக்கும் போதோ மின்புலம் மாறும் போதோ உண்டாகும் காந்தப் புலத்தின் அளவினை மின் அளவு மூலம் அளக்க ஆம்பியர் விதி உதவு கிறது. மின்காந்தக் கோட்பாடுகளின் அடிப்படைக் குக் கணிதவியலான விளக்கம் கண்ட பிரெஞ்சு நாட்டு அறிவியலறிஞர் ஆந்திரே மரி ஆம்பியர் (Andre Marie Ampere) அவர்களின் நினைவாக இவ்விதி பெயரிடப்பட்டுள்ளது. இவ்விதி பயோட்-சவாட் விதி (Biot-Savat's law) என்றும் அழைக்கப்படுகிறது. ஆம்பியர் விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம். ஒரு கடத்தியின் ஒரு குறிப் ஆம்பியர் விதி 27 பிட்ட புள்ளியில் உள்ள மொத்தக் காந்தப்புலத்தின் அளவு, கடத்தியின் வழிச் செல்லும் மின்னோட்டத் துக்கு நேர் விகிதத்தில் இருக்கும். காந்தப் புலத்தின் திசையை மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதிமுறை (Maxwell's cork screw rule) மூலம் கண்டறியலாம். ஒரு நேரான கம்பியில் மின்னோட்டம் பாய்வதாகக் கொள்வோம். வலப் புறமாய்ச் சுற்றும் ஒரு திருகு ஆணி (right handed screw) முன்னேறும்போது, திருகின் முனை மின்னோட்டத்தின் திசையைக் குறிக்குமானால், திருகு சுழலும் திசை காந்த விசைக் கோடுகள் அமையும திசையைக் குறிக்கும். ஒரு வட்டமான கடத்தியில் உள்ள மின்னோட்டத் தால் உண்டாகும் காந்த விசைக் கோடுகள் கடத்தி யின் அருகே அதைச் சுற்றி அமைந்திருக்கும். வட்டக் கடத்தியின் மையத்திற்கு அருகே விசைக் கோடுகள் சீராகவும் இணையாகவும் இருக்கும் (படம் 2 அ). காந்த விசைக்கோடுகள் மின்கடத்தியின் தளத்திற்கு எப்பொழுதும் செங்குத்தாக இருக்கின்றன (படம் 2ஆ) குடிகு (A) (2)

  1. 2

(ஆ) படம் 1. நேரான கம்பியின் காந்தப்புலம். 1. மின்ட்ேடத் திசை 2. காந்தவிசைக்கோடுகள் காந்த விசைக் கோடுகளின் திசை. (3) படம் 2. வட்டக் கடத்தியின் காந்தப் புலம் 1. காத்தப் புலத்தின் தனம் 2. காந்த விசைக் கோடு மின் கடத்தி 4. மின்னோட்டத் தளம்