உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமுறை கிளத்து படலம்

45

தராசிலே வைத்து நிறு என்பான் 75
எங்கும் போகாமல் இங்கே யேயிரு
என்று சொல்லுவ திவட்கே இசையும்.
இவள்,
அடுக்களை வந்திடாள்—அரக்குப் பாவையோ?[1]
கரிக்காலம்[2] கையெடாள்—கனகசுந் தரியோ? 80
வாருகோ வேந்திடாள்—மகராணி மகளோ?[3]
வெயிலில் இறங்கிடாள்—மென்மலர் இதழோ?
குடத்தை எடுத்திடாள்—குருடியோ நொண்டியோ?
வஞ்சகி இவள்செய் தலையணை மந்திர[4]
உபதே சங்களை உண்மையென் றெண்ணிக் 85
கணவன் ஒவ்வொரு காலத் தெங்களைப்
படுத்திய பாடெலாம் பகர்வதும் எளிதோ?


  1. 79. அரக்குப் பாவை-மெழுகினாலாகிய பொம்மை. மெழுகு நெருப்புப்பட்டால் உருகிவிடும் என்னும் கருத்தால்
    அடுக்களை வந்திடாள் என்கிறாள். அடுக்களையில் நெருப்பு
    இருக்குமல்லவா?
  2. 80. கரிக்கலம் - கரிபட்ட பாத்திரம்.
  3. 81. வாருகோல் - துடைப்பம். மகராணி- மகாராணி, பேரரசி.
  4. 84. தலையணை மந்திரம் - படுக்கையறையில் மனைவி
    கணவனுக்கு இரகசியமாகச் சொல்லும் கோள்.