உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை 37

37 அல்லது பிணைத்திசுவினால் (ligament) இணைக்கப் பட்டுள்ளன. நன்னீர் ஆமைகள் (terrapins) தவிர மற்றவைகளில் காரப்பேசும், பிளாஸ்ட்ரானும் தோல் தகடுகளால் (dermal plate) மூடப்பட்டுள்ளன. இந்த மேல்தோல் தகட்டினையே ஆமை ஓடு எனக் குறிப் பிடுகிறார்கள். ஆமைகளின் உடல் நீளத்தை ஓட்டின் முன் முனை முதல் பின்முனை வரை அளந்து குறிப்பிடு கிறோம். மிகச் சிறிய வகை ஆமை 11 செ.மீ. நீள மும் பெரிய வகை ஆமை 2 மீட்டர் நீளம் வரையும் உள்ளன. உடல் ஒரு கெட்டியான எலும்புப் பெட்ட கத்தினுள் அமைந்திருப்பதால் ஆமைகளின் ஆமைகளின் உறுப் பமைப்பில் சில தனித்தன்மைகள் உள்ளன. தலை கால்கள்,வால் ஆகிய உறுப்புகள் சிறியனவாகவும், ஓட்டிற்குள் இழுத்துக்கொள்ளக் கூடியனவாகவும் உள்ளன. நீளமான கழுத்தைப் பெற்றுள்ள ஆமை கள் அதனை 'S' வடிவில் மடித்துக் கொள்கின்றன. உடல் தசைகள் மென்மையாகக் காணப்படுகின்றன. தேய்ந்துபோனால் ஓட்டின் ஒரு பகுதி அல்லது உடைந்துபோனால் அப்பகுதி மீண்டும் வளர்ந்து விடுகிறது. இத்தகைய மீட்பாக்கம் (regeneration) ஓரளவே காணப்படுகிறது; கால் அல்லது வால் பகுதி களை இழந்தால் அவை மீண்டும் வளர்வதில்லை. வால் பொதுவாகச் சிறியதாகவுள்ளது. ஆனால் சில ஆமைகளுக்கு நீளமான வால் உண்டு. இவை புல் வெளிகள், சதுப்புநிலங்கள், நீர்நிலைகள், ஆறுகள், கடல் ஆகிய பல இடங்களில் வாழ்கின்றன. இவற் றின் கால்கள் வாழுமிடங்களுக்கு ஏற்ப அமைந் திருக்கின்றன. கடல் ஆமைகளின் (turtles) கால்கள் துடுப்புகள் போலவும், நன்னீர் ஆமைகளின் கால் விரலிடைச் சவ்வுகளுடனும், நில ஆமைகளின் (tortoi- ses) கால்கள் தனித்தனி விரல்களுடனும் காணப் படுகின்றன. ஆமைகளின் தாடைகளில் பற்களில்லை: ஆனால் தாடைகள் கடினமான கொம்பு போன்ற தகட்டி னால் மூடப்பட்டிருப்பதால் உணவை வெட்டித் தின்ன முடியும். இவற்றின் நாக்கு மென்ன மை யானது; அகலமானது; வெளியே நீட்ட முடி யாதது. சில ஆமைகளின் உணவுக்குழாயில் கடின மான கூம்பு நீட்சிகள் உள்ளன. இவற்றின் பொதுக் கழிவுப்பையுடன் இரண்டு மலப்புழைப் பைகள் இணைந்துள்ளன. இப்பைகளின் சுவரில் இரத்த நுண்நாளங்கள் காணப்படுவதால் இவை சுவாச உறுப்புக்களாகச் செயல்படுகின்றன. சில நீர் ஆமைகளை நீரைவிட்டு வெளியே எடுத்தால் அவற் றின் மலப்புழைப்பையிலுள்ள நீர் பொதுப்புழை வழியாக வெளியே பீச்சப்படுகிறது. சிலர் இந் நீரைச் சிறுநீர் (urine) எனத் தவறாக நினைப்பது உண்டு. பொதுப்புழை ஒரு நீளவாட்டத் துளை யாகவுள்ளது. ஆமைகளுக்கு ஓர் இணை நுரையீரல்கள் உள் ளன. அவற்றின் மேற்பக்கம் காரப்பேசின் கீழ்ப் பக்கத்துடன் பொருந்தியிருப்பதாலும், விலா எலும்பு கள் காரப்பேசுடன் அசைய முடியாமல் இணைந் துள்ளதாலும் நுரையீரல் சுருங்கி விரிவது மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டமுறையில் நடைபெறு கிறது. கால்களும் கழுத்தும் உள்ளிழுக்கப்பட்டுப் பின்னர் வெளியே நீட்டப்படுவதாலும், உணவு உட் கொள்ளப்படும் தசை அசைவுகளினாலும் நுரை யீரல் சுருங்கி விரிந்து, மூச்சு வெளிவிடுதலும் உள்ளி ழுத்தலும் நடைபெறுகின்றன. சிவ ஆமைகள் நீண்ட நேரம் மூச்சுவிடாமல் வாழும் தன்மையுடை யவை. ஆண் ஆமை,மேற்பக்கத்தில் நீண்ட வரிப்பள்ள முடைய ஒரு கலவியுறுப்பைப் பெற்றுள்ளது. நீரில் வாழ்ந்தாலும், பெண் ஆமைகள் நிலத்தில்தான் முட்டையிடுகின்றன. பெண் ஆமைகள் ஒரு முறைக்கு இரண்டு முதல் இருபது முட்டைகள் வரை இடு கின்றன. சில கடலாமைகள் ஒரு தடவையில் 100 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டை ஓடு வெண்மையாகவும் கெட்டியான தோல் போலவும் உள்ளது. சூரிய வெப்ப ஆற்றலினால் கருவளர்ச்சி சில நடைபெற்றுச் மாதங்களில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. உடல் வளர்ச்சி ஆண்டு முழுதும் தொடர்ச்சி யாக நடைபெறுவதில்லை. வாழ்க்கைக்கு ஒவ்வாக் காலங்களில் காலத்திற்கு ஏற்பக் கோடையுறக்கம் (aestivation) அல்லது குளிர் உறக்கம் (hibernation ) கொள்ளும் வழக்கம் ஆமைகளிடையே காணப் படுகிறது. இக்காலங்களில் உடல் வளர்ச்சி குன்று கிறது. மரங்களில் காணப்படுவது போன்று இவற் றின் காரப்பேஸ் தகடுகளில் வளர்ச்சிக் கோடுகளைக் காணலாம். பன்றி, பூனை, நீர்நாய், நரி, கழுகு, முதலை முதலியவை ஆமைகளைப் பிடித்து உண்ணுகின்றன. மீன்கள், நண்டுகள் போன்றவை கடலாமைக் குஞ்சு களைத் தின்று அழிக்கின்றன. ஆனால் மனிதனே இவற்றின் பெரிய எதிரி, ஏனென்றால் மனிதன் இவற்றின் இறைச்சியின் சுவையில் விருப்புற்றும் ஆமையோட்டின் அழகில் ஈடுபட்டும் இவற்றைப் பெருமளவில் கொல்கிறான். ஆமைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ் வனவாகவும், நிறைவுயிரி நிலையில் பிடிபட்டஒரு நில ஆமை 152 ஆண்டுகள் உயிருடன் இருந்ததாகவும் அறிகி றோம். ஆமை புகுந்தால் அந்த வீட்டிற்கு ஆகாது என நம் நாட்டில் கூறுவதுண்டு. ஆனால் மேலை நாட்டினர் ஆமைகளை வளர்ப்புயிரிகளாக வளர்க்கின்றனர். பின்வரும் ஆமை இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.