உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிடேசி 77

ஆயினி 12 ஆர்க்கிடேசி 77 9 .11 -10 ஆண் மிலார் 8 ஆண் மஞ்சரி 3. இலையடிச்சிதல் பெண்பூ பெண் மஞ்சரி (இரு அளவுகளில் காண்க) 5. 6.ஆண் பூ 7. மகரந்தத்தாள் 8. கேசங்கள் 9. பெண் பூவின் நீள்வெட்டுத் தோற்றம் 10. சூல் 11. சூலகத்தண்டு 12. ஆண் பூவின் விரிப்புத் தோற்றம். உழவுச் சாதனங்கள் ஆகியவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. தேயிலைப் பெட்டிகள் விமானத்தின் பாகங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப் படுகிறது. விதைகள் உண்பதற்கும் மருத்துவத் திற்கும் பயன்படுகின்றன. நூலோதி எ.கோ. 1. Fischer, C.E.C., Gambles Fl. Pres. Madras, Adlard & Son Ltd., London, 1928. 2. Hooker, J.D., Hook. F.FI.Br. Ind., 1888. 3. The Wealth of India, Vol.I., CSIR, Publica- tion, New Delhi, 1984. ஆர்க்கிடேசி ஒருவித்திலைப் பிரிவைச் (monocotyledoneae) சார்ந்த குடும்பங்களில் ஒன்று ஆர்க்கிடேசி (orchidaceae) ஆகும். து ஏறக்குறைய 450 பேரினங்களையும் (genera ) 10,000 முதல் 15,000 வரையிலான சிற் றினங்களையும் (species) பெற்றுள்ள மிகப்பெரிய குடும்பமாகும். தென்னிந்தியாவில் ஏறக்குறைய 60 பேரினங்களும் 194 சிற்றினங்களும் காணப்படு கின்றன. வளர் இயல்புகள் (habits), வாழ்இடங்கள் (habitats), பூக்களின் தனிப்பட்ட பண்புகள் ஆகிய வற்றின் அடிப்படையில் இக்குடும்பம் மிக உன்னத மான (specialized) அல்லது உயர்ந்த (advanced நிலை அடைந்திருக்கின்றது என்று கருதப்படு கின்றது. இதன் சிற்றினங்கள் எல்லாம் ஆர்க்கிடுகள் (orchids) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படு கின்றன. இவை உலகம் முழுவதும் பரவியிருந்த போதிலும், குறிப்பாக வெப்ப மண்டலப்பகுதிகளில் (tropics) அதிக அளவிலும், ஆர்க்டிக் (arctic) பகுதி களில் மிக அரிதாகவும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளிலுள்ள பெரும் பாலான பேரினங் கள் தொற்று அல்லது ஓட்டு வாழ் தாவரங்களாக (epiphytes) இருக்கின்றன. மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் நிலத் தாவரங்களாக அமைகின்றன.