உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிடேசி 79

2 3 5 ஆர்க்கிடேசி 79 படம் ஹேபினேரியா பிளாடிஃபில்லா 4. கலம் 5. லேபல்லம் 6. வால் 1. செடி 3, பீ. பொலீனியா (polenia) என்ற மெழுகு போன்ற திரள்களாகவோ காணப்படும். மகரந்தப் பைகள் 2 அல்லது 8 அறைகளையும், இவற்றின் எண்ணிக் கைக்குத் தக்கவாறு பொலீனியாவையும் பெற்றிருக் கும். பொலீனியா இல்லாத கீழ்ப்பகுதிக்கு காடிக்கிள் (caudicle) என்று பெயர். காடிக்கிள் ராஸ்டல்லத்தின் (rostellum) ஒருபகுதியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். மகரந்தம் ரப்பர் போன்று நீளும் தன்மையுள்ள இழைகளினால் இணைக்கப்பட்டுக் காணப்படும். 1 முதல் 2 மலட்டு மகரந்தத்தாள்கள் அநேகமாக இருப்பதுண்டு. சூலகமுடி 3 பிளவுகளுடனிருக்கும், இவற்றில் மூன்று அல்லது இரண்டு மட்டும் செயல் படும்; அப்பொழுது மூன்றாவது பிளவு மாற்றுரு அடைந்து ராஸ்டல்லம் ஆகின்றது. கனி காப்சூல் (capsule) வகையைச் சார்ந்தது; நீர் ஈர்க்கும் தன்மை யினால் கனி வெடித்து 3 முதல் 6 பகுதிகளாகப் (valves) பிரிகிறது. விதைகள் எண்ணற்றவை, பெரும்பாலும் கதிர்வடிவானவை (fusiform), முளை