உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கோசாரியா 85

கொண்டு கிடைத்தால் புதிய வரலாம். ண்மைகள் தெரிய கௌ. ஜெ. நூலோதி 1. Colbert, E.H,, Evolution of the Vertebrates, wiley eastern Limited, New Delhi, 1976. 2. Dhami, P.S., and Dhami, J.K., Chordate Zoo- logy. R.Chand & Co., Delhi, 1982. 3. Ekambaranatha Ayyar, M., A Manual of Zoo- logy, Part II, S. Viswanathan, Pvt. Ltd., Madras, 1986. ஆர்க்கோசாரியா இவை ஆர்க்கோசாரியா (archosauria) என்னும் பிரிவு ஊர்வன (reptilia) வகுப்பைச் சேர்ந்த ஒரு உள்வகுப்பு (subclass) ஆகும். ஆர்க்கோ சார்கள் 'ஆளும் ஊர்வன (ruling reptiles) என வழங்கப்படுகின்றன. பெர்மியக் (permian) காலந்தொட்டு இன்றுவரை வாழ்ந்து வரு கின்றன. இவற்றின் மண்டையோட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பொட்டுத் துளைகள் (tem- poral openings) உள்ளன. இருகால் நடைப்பழக் கத்தின் (bipedalism) தொடக்க நிலை இவற்றில் காணப்படுகிறது. விலா எலும்புகள் (ribs) இரு முனைகளுடையவை. இடுப்பு வளையத்தின் (pelvic girdle) எலும்புகளான இஷியம் (Ischium) என்னும் இடுப்புப் பக்க எலும்பும் பியூபிஸ் (pubis) என்னும் இடுப்பு முன் எலும்பும் நீளமாக உள்ளன. பற்கள் பொதிந்துள்ளன. பற்குழிகளில் பெரும்பாலான (armour) ஆர்க்கோசார்களுக்குப் உண்டு. முதலைகளும் (Crocodiles) டைனோசார் களும் (dinosaurs) 'டீரோடாக்டைல்கள்' (ptero- dactyls) எனப்படும் 'பறக்கும் ஊர்வனவும்' (iying reptiles) இப்பிரிவில் அடங்கும். இடை உயிர் ஊழி யில் (mesozoic era) காணப்பட்ட நிலவாழ் விலங்கு களில் ஆர்க்கோசாரியா பிரிவைச் சேர்ந்த ஊர்வன முதன்மை பெற்று விளங்கின. புறக்கவசம் ஆர்க்கோசாரியா உள்வகுப்பு 5 வரிசைகளாகப் (orders) பகுக்கப்பட்டுள்ளது. அவை, தீக்கோடான் ஷியா (thecodontia), குரோக்கடீலியா (crocodilia) சாரீஷியா (Saurischia), ஆர்னித்தீஷியா (ornithi- schia), டீரோசாரியா (pterosauria) என்பனவாகும். தீக்கோடான்ஷியா. இது ஆர்க்கோசாரியாவின் பிரிவு. ஆர்க்கோசாரியாவிலேயே பழம் பிரிவான இதிலிருந்துதான் தற்போது வாழும் ஊர் வனவும் பறவைகளும் பரிணமித்தன. இவற்றில் பற்கள் பற்குழிகளில் உறுதியாகப் பொதிந்திருந்தன. இதற்குப் புதைபல் அமைப்பு (thecodont dentition) முக்கிய ஆர்க்கோசாரியா 85 என்று பெயர். தொடக்க காலத்துத் தீக்கோடான்ட் டுகள் சிறிய உருவமுடையனவாகவும் இருகால் நடைப்பழக்கமுடையனவாகவும் குட்டையான முன் கால்களுடையனவாகவும் இருந்தன. இவை முன் பர்மியன் காலம் முதல் முன் டிரையாசிக் (triassic) காலம் வரை வாழ்ந்தன. இவற்றுள் சில, முதலை கள் போன்ற தோற்றத்துடன் விளங்கின; நிலத் திலும் நீரிலும் வாழ்ந்தன! ஆனால் மூச்சுத்துளைகள் (nostrils) முகத்தின் நுனியில் இல்லாமல் சற்று உள் ளடங்கிய உயரத்தில் காணப்பட்டன. பெரும் பாலான விலங்குகளின் முதுகில் எலும்புத் தகடுகள் (bony plates) இரு வரிசைகளில் அமைந்திருந்தன. தீக்கோடான்ஷியா பிரிவு டிரையாசிக் கால முடிவில் மறைந்துவிட்டது; ஆயினும் அதற்கு முன்பே மற்ற 4 வரிசைகளையும் இது தோற்றுவித்துவிட்டது. குரோக்கடீலியா. நடு டிரையாசிக் காலந்தொட்டே இப்பிரிவைச் சேர்ந்த விலங்குகள் வாழ்ந்து வருகின் றன. தொடக்க காலத்தில் வாழ்ந்தவை உருவில் சிறி யனவாகவும், உறுதியான கவசமுடையனவாகவும் காணப்பட்டன. முற்காலத்தில் வாழ்ந்தவை உருவ அமைப்பில் ஓணான்கள் போலிருந்தன; நீரிலும், அல்லது நீர், நிலம் ஆகிய இரு பகுதிகளிலும் வாழ்ந் தன. தட்டையான மண்டை ஓட்டுடனும், வாய்ப் பகுதியின் நுனியில் மூக்குத் துளைகளுட னும் நன்கு வளர்ந்த அண்ண எலும்புடனும் (palate) உள்ளன. பியூபிஸ் எலும்பு, இடுப்புக்குழியை (aceta- bulum) உருவாக்குவதில் பங்கேற்கவில்லை. ஐந்தா வது கால் விரல் குறைவுற்று மிகவும் சிறியதாக உள்ளது. இப்பிரிவில் 21 சிறப்பினங்களைச் சார்ந் தவை இன்று வாழ்கின்றன. வன முக டைனோசார்கள் (dinosaurs). சாரீஷியா, ஆர் னித்தீசியா ஆகிய இரு வரிசைகளைச் சேர்ந்த ஊர் டைனோசார்கள் என வழங்கப்படுகின்றன. இவை தற்போது வாழ்ந்து வரும், வாழ்ந்து மறைந்த முதுகெலும்புள்ள உயிரிகளில் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் இவை பின் டிரையாசிக் காலந்தொட்டுக் கிரெட்டேஷியஸ் காலம் (cretaceous period) வரை ஏறக்குறைய 15,00,00,000 ஆண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்ந்தன. இந்நீண்ட காலக்கட்டத்தில் டைனோசார்கள் உருவ அளவிலும் வடிவத்திலும் பலவகையாக விரிவடைந்தன. இவற்றின் அளவு ஒரு சேவலின் (cock) அளவிலிருந்து 30 மீ. நீளமும் 36 முதல் 50 மெட்ரிக் டன் எடையும் கொண்ட மிகப்பெரிய அளவு வரை பலதிறப் பட்டன. டைனோசார்களில் உருவ .சாரீஷியா வரிசையைச் சேர்ந்த ஊர்வனவற்றின் இடுப்புப்பகுதியில் 3 கிளை களும், ஆர்னித்தீசியா வரிசையைச் சேர்ந்தவற்றில் கிளைகளும் இருந்தன. இப்பண்பு இவ்வரிசை களுக்கிடையிலான முக்கிய வேறுபாடாகும். 4