உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்டிக்‌, துணை ஆர்க்டிக்‌ தீவுகள்‌ 87

மண் பூல் ஸோல்ஸ்(pool zols) எனப்படும். ஆர்க்டிக் தீவுகளின் மண் கரும்பழுப்பு நிறமுள்ள மட்கிய மேற்புற அடுக்கைக் கொண்டுள்ளது. அலூஷியின் தீவுகள் (Aleutian Islands). இத்தீவு கள் அலாஸ்கா தீபகற்பத்திலிருந்து அகட்டு (Attu) தீவு வரை தென் மேற்காக ஏறத்தாழ ஆயிரம் மைல்கள் வரையிலும் பரவியுள்ளன. பெரிங் கடலை வடக் காகவும் பசிபிக் பெருங்கடலைத் தெற்காகவும் பிரிக்கின்றன. அவற்றின் கரடு முரடான மலைப் பகுதியின் மேற்புறங்கள் அலாஸ்கா மற்றும் அலூஷி யன் தொடரையும் அவற்றில் அநேக எல்லைகளை யும் கொண்டுள்ளன. அவற்றில் ஏறத்தாழ 150க்கு மேலான தீவுகள் இருக்கின்றன. அவற்றில் 65 மைல் நீளத்தையும் 25 மைல் அகலத்தையும் கொண்டுள்ள யூனிமாக் (unimak) தான் பெரியது. கடும் புயற்காற் றின் விளைவாக அலூஷியன் தீவுகள் மிகவும் வேறு பட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளன. இங்கு வீசும் திடீர்க்காற்றுக்கு வில்லிவா (williwaw) என்று பெயர். இங்கு வேகமான கடல் நீரோட்டம் அதிக மான மூடுபனியை உருவாக்குகின்றது. சராசரி வெப் பம் 0°C லிருந்து 0.5°C வரையிலும் மற்றும் வருடாந் தர மழையளவு 56.7 இலிருந்து 70,2 அங்குலம் வரை யிலும் இருக்கின்றன. நிலங்கள் பொதுவாக மரங் களற்றுக் காணப்பட்டாலும் புற்கள், வில்லோ மற்றும் ஆல்டர் மரங்களைக் கொண்டுள்ளன. கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்கள். இத்தீவுகள் பெரும் நிலத்திலிருந்து அமெரிக்கக் கண்டத்திட்டுக்கு வடக்காகவும் கிரீன்லாந்துக்கு 1410 மேற்காகவும் அமைந்துள்ளவை. இவை ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் இருக்கின்றன. தெற்கே உள்ள தீவுகள் மலைகளாகவும், மேற்கிலும், வடமேற்கிலும் உள் ளவை பீடபூமிகளாகவோ அல்லது சமவெளிகளா கவோ இருக்கின்றன. பாஃபின் தீவு (Baffin Island) கிழக்கத்திய டெவான் தீவு (Devon Island) மற்றும் தென்கிழக்கு எல்லிஸ்மியர் தீவுகள் (Ellesmere is- ands) ஆகிய தீவுகள் பிரிகேம்பிரிய வகைப் (precam - brian) பாறைகளைக் கொண்டு சராசரியாக 5000 முதல் 7000 அடி உயரத்துடன் இருக்கின்றன. எல் லிஸ்பியர் தீவு மற்றும் ஆக்ஸல் ஹீபர் (Axel heiber) தீவுகள் வழியாக உள்ள வடக்கத்திய தொடர்ச்சியில், மலைமுகடுகள் 1000 அடி உயரத்திற்கும் மேலாக இருக்கின்றன. ராணி எலிசபெத் தீவுகளின் வடமேற் குப் பகுதிகள், அண்மைக் காலத்தில் வெளிப்பட்ட கடற்பகுதிச் சமவெளிகளாகும். ஆங்காங்கே உப்புக் குவியல்கள் காணப்படுகின்றன. இந்தத் தீவுக் கூட் டங்களில் நீண்ட குளிர் காலம் 3 முதல் 4 மாதங்க ளாகவும், சராசரி வெப்பநிலை - 37°Cலிருந்து - 40°C வரையிலும் உள்ளன. பிப்ரவரி தான் மிகக் குளிரான மாதம். அப்பொழுது வெப்பம் - 45.5°Cக்கும் கீழே செல்கின்றது. குளிர்ந்த கோடைக்காலங்களில் வெப் பம் சீராக உள்ளது. ஜூலையில் அதிக அளவு வெப்பம் ஆர்க்டிக், துணை ஆர்க்டிக் தீவுகள் 87 உள்ளது அநேக இடங்களில் வெப்பநிலை 15.5°Cஐத் தாண்டுகின்றது. மழை அளவு வருடத்திற்கு 10 அங் குலத்திற்குக் குறைவாக இருக்கின்றது. பனிப்பொழிவு (snow fall) சராசரியாக 12.5 லிருந்து 100 அங்குலம் வரை இருக்கின்றது. இங்கு இயற்கைத் தாவர அமைப்பு தூந்திர வகையாகும். நியூபவுண்ட்லாந்து (Newfoundland). இந்தத் தீவு மேற்கு - கிழக்காகச் சரிந்து காணப்படும் ஒரு பீடபூமி யாகும். இங்கு தட்பவெப்ப நிலையும் இயற்கைத் தாவர அமைப்பும் துணை ஆர்க்டிக் மற்றும் கண் டத்திட்டுப் பகுதிகளின் தன்மையைக் கொண்டுள் ளன. குளிர்காலங்களில் உட்பகுதிகள் மிகவும் குளிராக இருந்தாலும், கடற்கரைப்பகுதிகளில் குறிப்பாகத் தென்கிழக்குப் பகுதிகள் கோடையிலும் குளிர்ச்சியாகவே உள்ளன. ஜூலையில் வெப்பம் 12.6°C முதல் 18.8°C வரை உள்ளது. வருட முழுவதும் மழை அதிக அளவில் பெய்கின்றது. மிகக் கனமான மழை (55 அங்குலத்திற்கும் மிகுதியான) தெற்குப் பகுதியில் பெய்கின்றது. பனிப்பொழிவு 100 அங்குலத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. போரியல் காடுகள் இங்கு பாதிக்கும் குறைவான பகுதியையே மூடியுள்ளன. கிரீன்லாந்து (Greenland) து உலகின் மிகப் பெரிய தீவாகும். சுமார் 1,600 மைல்கள் தெற்காக (56°, 46' N) கேப்ஃபேர்வெல் (cape farewell) லில் இருந்து வடக்காக (83°,93° N) கேப்மோரிஸ் ஜுசுப் (cape morris jesup) வரை பரவியுள்ளது, கேப் மோரிஸ் ஜூசுப் வட துருவத்திற்கு அருகாமை யில் உள்ளது, வட கோளார்த்தத்தில் ஆறில் ஐந்து பங்கின் மேற்பகுதி பனிக்கட்டிப் படுகையால் புதை யுண்டு இருக்கின்றது. விளிம்போரங்களில் எண்ணிக் கை அற்ற பனிப்படிவங்களும் பனிப்பாறைகளும் தனித்தனியாகக் காணப்படுகின்றன. மிதக்கும் பனிப்பாறைகளில் பெரும்பாலனவை தென்மேற்குக் கிரீன்லாந்தில் இருந்து உருண்டு வந்தவையாகும்.

தென் மேற்கு, வடகிழக்குக் கடற்கரைகளில் பனிக்கட்டிகளற்ற விளிம்புகள் மிக அகலமாகக் காணப்படுகின்றன. வட பகுதியின் பியரி நிலம் (peary land) தவிர மற்ற யாவும் பனிப் பாறை களால் மூடப்பட்டனவேயாகும். விளிம்புகள் ஆல் பைன் மலைகளையும், பீடபூமிகளையும் தாழ்வான நிலங்களையும் கொண்டுள்ளன. தென் மேற்குக் கரை யில் ஸ்கேயர்கார்டு (Skaergaard) அநேக தாழ்வான நிலங்களையும் பாறைகளையும் கொண்டுள்ளது, தட்ப வெப்ப நிலையில் பனிப் போர்வைகளின் (ice cap) முக்கியத்துவம் இன்னும் அறியப்படவில்லை. இங்கு வெப்பம் 2.8°C9. 4°C இலிருந்து 49°F வரையுள் ளது. பொதுவாகக் கோடைக்காலங்களில், ஃபியர்டுக ளின் உட்பகுதி வெளிப்பகுதியைக் காட்டிலும் வெப்ப மாகவும். குளிர்காலங்களில் குளிராகவும் உள்ளது.