உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஆர்கான்‌

94 ஆர்காள் வீரியம் வளிமங்களுக்கென்று தனிம வரிசை அட்ட வணையில் இடம் ஒதுக்கவில்லை. ராம்சே, அரிய வளிமங்களைக் கண்டுபிடித்த பின்னர் சுழித் தொகுதி ஒன்றை உருவாக்கி, இவற்றைத் தனிம வரிசை அட்டவணையில் சேர்த்தார். சுழிப் பிரிவுத் தனிமங்கள் எல்லாமே வளிமங்கள்; குறைந்த மந்த நிலையுடையவை. இதில் துணைப் பிரிவுகள் இல்லை. சுழிப்பிரிவில் உள்ள தனிமங்கள் அவற்றின் அணு எண்களின் (atomic numbers ) ஏறுவரிசைக்கேற்ப அமைந்துள்ளன. ஆர்கானின் அணு எண் 18. எனவே, சுழிப் பிரிவில் அது மூன்றா வது தனிமமாக அமைந்துள்ளது.ஆர்கான்,நியானுக் கும் (அணு எண் 10) கிரிப்டானுக்கும் (அணு எண் 36) இடைப்பட்ட தனிமமாக அமைந்துள்ளது. ஹீலியம் மட்டும் இரு எலெக்ட்ரான்களைத் தன் வெளிக்கூட்டில் (outer shell) பெற்றுள்ளது. ஆர்கான் உள்ளிட்ட எல்லா அரிய வளிமங்களும் நிலையான எலெக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள் ளன. ஆகையால் இவை எலெக்ட்ரானை இழக் கவோ பெறவோ முயல்வதில்லை. மந்த வளிமங்கள் தனிம வரிசை அட்டவணை யில் இருக்கும் இடம் சரியானது எனப் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் கூறலாம். மந்த வளிமங்கள் எல்லாம் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வளிமங்கள். இவை எல்லாமே ஓரணு வளிமங்கள். இவற்றின் அடர்த்தி, கொதி நிலை, உருகுநிலை ஆகிய பண்புகளில் அணு எடை அதிகமாகும் பொழுது, படிப்படியான மாறுதல் அடைகின்றன; இத்தனிமங்களின் எலெக்ட்ரான் அமைப்புகளிலிருந்து இவை சுழித் தொகுதியில் வைக்கத் தகுதியானவை; அதிக நேர்மின் தன்மை கொண்ட கார உலோகங் களுக்கும் அதிக எதிர்மின் தன்மை கொண்ட உப் பீனிகளுக்கும் (halogens) இடையில் இவை பரவலாக அமைந்துள்ளன. தனிம வரிசை அட்டவணையில் இடம் அல்லது வலப் பக்கத்திலுள்ள தனிமங் களின் பண்புகளோடு, இத்தனிமங்களின் பண்புகள் ஒத்திருக்கவில்லை. ஆர்காள் தயாரிக்கும் முறை. ஆர்கான் உள்ளிட்ட அனைத்து அரிய வளிமங்களும் வளிமண்டலத்தி லிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த முறையில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. முதல் நிலை யாக, மின்போக்கைத் தொடர்ந்து வளிமண்டலத் தில் செலுத்தினால், காற்றிலுள்ள ஆக்சிஜனும், நைட்ரஜனும் வினைபுரிந்து நைட்ரஜன் டை ஆக்சை டாக மாறி அது வெளியேறிவிடுகிறது. Ng + 20, 2 NO, இரண்டாவதாக, கிளர்வூட்டிய கரி (activated charcoal) வெவ்வேறு வெப்பநிலைகளில், வெவ்வேறு மந்த வளிமங்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்ற உண்மையைப் பயன் படுத்தி மந்த வளிமங்கள் ஓவ்வொன்றாகப் பிரித் தெடுக்கப்படுகின்றன. வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனையும், நைட்ர ஜனையும், நைட்ரஜன் டை ஆக்சைடாக வெளியேற் றும் முதல் நிலை பின்வருமாறு நிகழ்த்தப்படுகிறது. ராலே முறை. இம் முறைக்கு வித்திட்டவர் கேவெண்டிஷ். பின் ராலே, ராம்சே ஆகியோர் இம் முறையில் சில மாறுதல்களைச் செய்தனர். இவர்கள் கையாண்ட ஆய்வுக் கருவியின் அமைப்பைப் படத் தில் காண்க. இந்த ஆய்வுக் கருவியில் 50 முதல் 60 லிட்டர் கொள்ளளவுடைய ஒரு குடுவை உள்ளது. இதில் மின்சாரத்தைச் செலுத்துவதற்காக இரு பிளாட்டின மின்முனைகள் இருக்கின்றன். மேலும், இதில் இரண்டு குழாய்கள் இருக்கின்றன. ஒரு குழாய் வழியாக எரிசோடாக் கரைசல் (caustic soda) எடுத் துச் செல்லப்பட்டு, குடுவையின் அடிப்பாகத்தில் பீச்சாங்குழல் போல் பீச்சியடிக்கப்படுகிறது. பின் இரண்டாவது குழாய் வழியாக எஞ்சிய எரிசோடாக் கரைசல் எடுத்துச் செல்லப்பட்டு மறுபடியும் பயன் படுத்தப்படுகிறது. மூன்றாவதாக உள்ள குழாய் வழியே கார்பன் டை ஆக்சைடு நீக்கப்பட்ட, அதிக அளவு ஆக்சிஜன் கலக்கப்பட்ட உலர்த்திய காற்று செலுத்தப்படுகிறது. (ஒரு பங்கு காற்றுடன் 11 பங்கு ஆக்சிஜன் கலக்கப்பட்டுள்ளது). ஒரு மின்சுருள் வழியாக 6000முதல்8000 வோல்ட் 2 படம் 2. ராலே முறை 1.பிளாட்டின மின்முனை 2. எரிசோடாக்கரைசல் வெளியேறும் வழி 3. எரிசோடாக்தரைசல் செல்லும் வழி 4. வளிமங்கள் உள்ளே செல்லும் வழி