உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆர்செனிக்‌ (கனிமம்‌)

98 ஆர்செனிக் (கனிமம்) கெடுக்கும். கண்களை ஆய்வதன் மூலம் இந்நோயி னைக் கண்டுபிடிக்கலாம். ஆர்கைல் ராபர்ட்சன் (Argyell Robertson ) என்ற அறிஞர்,1866ஆம் ஆண்டிலேயே மேகநோயானது மூளையையும், நரம்புப் பகுதிகளையும் கூடத் தாக்கும் என்பதையும் கண்பாவையின் அனிச்சையைக் (pupillary reflex } கூர்ந்து நோக்குவதன் மூலம் இந்நோயினைக் கண்டு பிடிக்கமுடியும் என்பதையும், இதனால் கண் பாவை யில் ஏற்படும் மாறுதலையும் விவரித்துள்ளார். அவர் கண்டுபிடித்த இப்புதிய பாவை மாறுதலுக்கு ஆர்கைல் ராபர்ட்சன் பாவை (Argyell Robertson pupil) எனப் பெயரிட்டார். மேகநோயினால் மாறுதலை அடைந்த ஆர்கைல் ராபர்ட்சன் கண் பாலை அளவில் சிறியதாக வடி வில் ஒழுங்கற்றதாக, இரு கண்களின் அளவு சமமற்ற தாக இருக்கும். நலமுள்ள கண்பாவைகள், அதிக ஒளிக்கதிர்கள் கண்களுக்குத் தேவையானபொழுது, (அதாவது இரு ளில்) விரிந்து இருக்கும். வெளிச்சம் அதிகமாக இருக் கும்போது சுருங்கி இருக்கும். ஒளிக்கதிர்களின் அள வைக் கொண்டு, கண்ணின் பாவை, விரிந்தும், சுருங் கியும் செயல்படுவதைப்பாவை அனிச்சை எனக் குறிப் பிடுவர். மேலும் ஒரு பொருளை அருகில் கொண்டு நோக்கும் பொழுது, பாவை சுருங்கும். இவ்வாறு சுருங்குவதை விழியின் குவி தகவமைப்பு (accomoda - tion pupilary refelx) எனக் குறிப்பிடுவர். ஒரு கண் பாவை சுருங்கும் பொழுது, மற்ற கண்பாவையும் சுருங்கும் இது ஒத்தியைவு ஒளி அமைவு (consensual light reflector) எனக் குறிக்கப்படும். இதேபோல நல முள்ள கண் பாவை தொலைவிலுள்ள பொருளைப் பார்க்கும் பொழுது விரியும். ஆனால் ஆர்கைல் ராபர்ட்சன் கண்பாவை ஒளிவிழும்போது சுருங்கி யும், இருளில் விரியும் தன்மையை இழந்தும் விடுகிறது. எனினும், தொலைவிலுள்ள பொருளையும் அண்மை யில் உள்ள பொருளைப் பார்ப்பதிலும் உள்ள அளவு வேற்றுமையை இழக்காமல் காண்பிக்கும். அதாவது, கண்ணின் பாவை சுருங்கி, விரியும் தன்மையை இழந்தபோதிலும் பார்வை நல்ல முறையில் இருப் பது ஆர்கைல் ராபர்ட்சன் பாவையின் ஒரு சிறப் புத் தன்மையாகும். இதிலிருந்து இப்பாவையுள்ள மக்கள் நல்ல பார்வையுள்ளவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் பாவை ஒளிக்கதிர்களால் மாற்ற மடைவதில்லை. கண்திரைப்படலம் (iris) அழிந்து காணப்படும். பொதுவாக இந்நோய் இரண்டு கண்களையும் ஒருசேரப் பாதிக்கும். ஆனால் சில சமயங்களில் இது ஒரு கண்ணைமட்டும் பாதிப்பது உண்டு. டாபீஸ் டொர்சாலிஸ் (tabees dorsalis) எனப்படும் முதுகு நரம்புமண்டல நோயின் சிறப்பாகக் காணப்படும் எஸ். மனோகர் டேவிட் ஆர்செனிக் (கனிமம்) ஆர்செனிக் பிரிவில் ஆர்செனிக் (As), ஆன்ட்டிமணி (Sb), பிஸ்மத் (Bi), டெல்லூரியம் (Te) ஆகிய இயல் தனிமங்கள் அடங்கியுள்ளன. இந்தக் கனிமங்கள் அறுகோணப் படிகத் தொகுதியில் உள்ள சாய்சதுரப் பட்டகங்களாகப் படிகமாகின்றன. ஆர்செனிக் பொதுவாகச் சாய்சதுரப் பட்டகங்களாகப் படிக மானாலும் சிற்சில வேளைகளில் பருச்சதுரம் போன்ற சாய்சதுரப் பட்டகங்களாகவும் படிகமாவதுண்டு. பொதுவாக இதன் படிகங்கள் திண்ணிய மணிக ளாகவும் சில நேரங்களில் நுண்ணிய துகள்களாகவும் சிறுநீரக வடிவாகவும், கூரை படிவுக் கூம்பு வடி வாகவும் காணப்படுகின்றன. இது வெள்ளை, கருப்புக் கலந்த சாம்பல் நிறத் தைப் பெற்றிருக்கிறது. இதனுடைய உராய்வுத்தூள் (streak) கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ளது. இதன் கடினத்தன்மை 5.7 ஆகும். இதன் அடர்த்தி எண் 3.5 ஆகும். சீரற்ற முறிவிலிருந்து நுண்மணி முறிவு வரை மாறுவதுடன் நொறுங்கும் இயல்புடையது; உலோக மிளிர்வுடையது. ஆர்செனிக் தனிமம், வெள்ளியிலும், கோபால்ட்டி லும், இரும்பிலும் முக்கிய நரம்பிழையாகக் (vein) காணப்படுகிறது. வணிகத்திலும் தொழிற் சாலையிலும் ஆர் செனிக் பயன்படுகிறது. உலோக ஆர்செனிக் கனி மம், துப்பாக்கிக் குண்டு செய்வதற்குப் பயன்படு கிறது. நார்வேயில் உள்ள சாக்சோனி மாவட்டத்தில் பிரிபெர்க் ஷனீபெர்க், மேரியன்பெர்க். அன்னா பெர்க், ஆண்டியுயாஸ் பெர்க் ஆகிய சுரங்கங்களில் நுண் மணிகளாக இது காணப்படுகிறது. ஜப்பானில் எச்சிஜான் மாவட்டத்தில் அகதானியில் கோள வடிவ மணிகளாகக் கிடைக்கிறது. நூலோதி ந.சந்திரசேகரன் Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Wiley Eastern Ltd., New Delhi, 1985. ஆர்செனிக் (தனிமம்) ஆர்செனிக் (arsenic) நைட்ரஜன் குடும்பத்தைச் சேர்ந்தது. நைட்ரஜன் குடும்பத்தில் நைட்ரஜன், பாஸ்ஃபரம், ஆர்செனிக், ஆன்ட்டிமணி, பிஸ்மத் ஆகிய தனிமங்கள் உள்ளன. இவற்றின் எலெக்ட் ரான் அமைப்பு ns'. nps என்ற முடிவடைவதால் இவைகள் p-தொகுப்புத் தனிமங்களைச் சேர்ந்தவை யாகும்.