உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஆர்செனிக்‌ (தனிமம்‌)

100 ஆர்செனிக் (தனிமம்) அமைப்பால் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வோர் அணுவும் பக்கத்து அடுக்கில் உள்ள மற்ற மூன்று அணுக்களாலும் நெருக்கமாகச் சூழப்பட்டிருக்கிறது. மஞ்சள் ஆர்செனிக், ஆர்செனிக் ஆவியை நீர்ம நிலையிலுள்ள காற்றில் ஒளியற்ற சூழ்நிலையில் குளிரவைக்கும்போது இது கிடைக்கின்றது. இது கார்பன் வெப்ப நிலைத்தன்மை அற்றது. அறையின் வெப்பநிலையில் எளிதில் உலோக ஆர்செனிக்காக மாறுகிறது. பளபளப்பற்ற தன்மை உடையது. இது டைசல்ஃபைடில் கரைகின்றது; சூழல் நிலையில் ஒளி உமிழும் தன்மை உடையது; எளிதில் ஆவியாகிறது. இதன் ஆவி, பூண்டின் மணம் உடைய தாகவும் கடும் நஞ்சாகவும் இருக்கிறது. இதன் மூலக்கூறு நாற்பட்டகக் கட்டமைப்பைப் (tetrahedral structure) பெற்றுள்ளது. கரிய ஆர்செனிக். இவ்வகை ஆர்செனிக் மேற் குறிப்பிட்ட இரண்டு வகைகட்கும் இடைப்பட்ட தாகும். கார்பன் டை சல்ஃபைடில் கரைக்கப்பட்ட மஞ்சள் ஆர்செனிக்கைத் தெளியவைக்கும்போது கரிய ஆர்செனிக் வீழ்படிவாகின்றது. இது சாம்பல் நிற ஆர்செனிக்கை ஹைட்ரஜன் சூழலில் சூடுபடுத்தும்போதும் ஒளிர்விடும் போதும் பதங்கமாகக் கிடைக்கிறது. இது படிகநிறமற்றது. உலோக ஆர்செனிக்கை விட நிலைத்தன்மை குறைந் தது. இது ஒளிக்கசியும் தன்மையைப் பெற்று இருக் கிறது. கார்பன் டை சல்ஃபைடில் கரைவதில்லை. இது 360°C க்கு வெப்பப்படுத்தும்போது சாம்பல் நிற ஆர்செனிக்காக மாறுகிறது. 2 As + 3 Cl, --+ 2 AsCI, ஆர்செனிக் சேர்மங்கள். சோடியம் ஆர்செனைடை நீராற்பகுக்கும்போதும், மகனீசியம் அல்லது நாக ஆர் செனைடை அமிலத்துடன் வினைப்படுத்தும்போதும் ஆர்சீன் (arsine) நிறமற்ற வளிமமாகக் கிடைக்கிறது. இது காற்றில் எரிந்து ஆர்செனிக் மூ ஆக்சைடைக் கொடுக்கிறது. ஒரு கண்ணாடிக் குழாயில் வெப்பப் படுத்தும்போது உலோகக் கண்ணாடி கிடைக்கின்றது. இதற்கு மார்ஷ் சோதனை (Marsh test) எனப் பெயர். ஆர்சீன் ஒரு வலுமிக்க ஆக்சிஜன் ஒடுக்கி (strong reducing agent). இது வெள்ளி நைட்ரேட்டை வெள் ளியாக ஒடுக்குகிறது. நன்றாகச் சூடாக்கப்பட்ட சோடியம் அல்லது செம்புடன் சேர்ந்து ஆர்செனைடு களை உண்டாக்குகின்றது. ஆர் ஆர்சீனியஸ் ஆக்சைடு அல்லது வெள்ளை செனிக் (As,O). ஆர்செனிக்கைக் காற்றில் எரிப்பதன் மூலமும், ஆர்செனிக்கல் பைரைட்டை அதிக வெப்ப நிலையில் வறுக்கும் போதும் இது கிடைக்கிறது. இதைப் பதங்கப்படுத்தும்போது ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற பொருள் கிடைக்கின்றது. இது நிறம், மணம் அற்றது. இது ஈரியல்புள்ள (amphoteric) ஒரு சேர்மமாகும். காரத்தோடு சேர்ந்து சோடியம் ஆர்செனைட்டையும் ஹைட்ரோகுளோரிக் அமிலத் துடன் சேர்ந்து ஆர்செனிக் மூ குளோரைடையும் கொடுக்கிறது. இது ஒரு சிறந்த ஆக்சிஜன் ஒடுக்கி. உப்பீனிகள் (halogens), பர்மாங்கனேட்டு, நைட்ரிக் அமிலம், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு ஆகியவை இதனால் குறைக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டேனஸ் ஆர்செனிக்கின் சில பொது இயல்புகள் இயல்புகள் உருகுநிலை (சாம்பல் நிறம்) -814°C (36 அடர்த்தி (சாம்பல் நிறம்) (மஞ்சள் நிறம்) ஆக்சிஜனேற்ற நிலைகள் எலெச்ட்ரான் அடைப்பு வேதியியல் பண்புகள். காற்றில் நீல நிறத்துடன் எரிந்து ஆர்செனிக் மூ ஆக்சைடைக் கொடுக்கிறது. 4 As + 3 0, 111 As408 அமிலங்களிலிருந்து இது ஹைட்ரஜனை வெளி யேற்றுவதில்லை. எனினும் நைட்ரிக் அமிலமும், சல்ஃப்யூரிக் அமிலமும் இத்தனிமத்தை ஆர்செனிக் அமிலமாக மாற்றுகின்றன. உருகிய சேர்மத்துடன் சேர்ந்து ஆர்செனைட்டைத் தருகின்றது. குளோரின் வளிமத்துடன் நுண்ணிய பொடி நிலையிலுள்ள ஆர்செனிக் சேரும்போது தீப்பற்றி எரிகின்றது. ஆர் செனிக் மூ குளோரைடு விளைகின்றது. மதிப்பு ளிமண்டல அழுத்தத்தில் 5.73கி/பரு செ.மீ.(14°C இல்) 2.03 கிபரு செ.மீ. (18°C இல்) -3, +3, +5 1s2,2s,2p,3s,3p°,3d10,4s2,4p³ குளோரைடு இதையே ஆர்செனிக்காகக் குறைத்து விடுகின்றது. பைரக்ஸ் கண்ணாடி (pyrex glass) செய்யவும், பூச்சிக்கொல்லியாகவும் (insecticide) தோலைப் பாதுகாக்கவும், சருமநோய்களுக்கு மருந் தாகவும் இது பயன்படுகிறது. இதன் மூலக்கூறு அறுகோணக் கட்டமைப்பைக் (hexagonal structure) கொண்டது. இரண்டு ஆர்செனிக் அணுக்கள் ஓர் ஆக்சிஜன் அணுவால் சேர்க்கப்பட்டு அமைந்திருக் கின்றன. ஆர்செனிக் ஐ ஆக்சைடு (As,Oo). ஆர்சனிக் மூ ஆக்சைடை நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜன் ஏற்றம் செய்தால் ஆர்செனிக் ஐ ஆக்சைடு கிடைக்கின்றது.