ஆர்செனிக் (தனிமம்) 101
mined As 0 AS As 1 1 As இது ஒரு நிறமற்ற, நீர் உறிஞ்சும் தன்மை வாய்ந்த படிகமாகும். இது நீருடன் சேர்ந்து ஆர்செனிக் அமி லத்தைக் கொடுக்கின்றது. ஆர்செனைட்டுகள். ஆர்சீனியஸ் ஆக்சைடை நீரில் கரைத்தால் உண்டாகும் ஆர்சீனியஸ் அமிலம் மூவி ணைய அமிலமாகும் (tribasic acid), அதன் உப்புக் கள் ஆர்சனைட்டுகளாகும். அவை ஆர்த்தோ ஆர் செனைட்டுகள், K,AsO, Cus (AsO), மெட்டா ஆர் ர்செனைட்டுகள் NaAsO, பைரோ ஆர் செனைட் டுகள் Na As O என்பனவாகும். சோடியம் ஆர்செனைட்டு (NaAsO,).சோடியம் பைகார்பனேட்டில் ஆர்சீனியஸ் ஆக்சைடைக் கரைத் தால் இது கிடைக்கிறது. இது பருமனறி பகுப்பாய்லில் (volumetric analysis) பயன்படுகிறது. இதன் நீர்த்த கரைசல் ஃபௌலர் கரைசல் (Fowler's solution) என்ற பெயரில் கால் நடை மருத்துவத்தில் பயன்படுகிறது. இது பூச்சிக் கொல்லியாகவும் வெட்டுக்கிளியை ஈர்த்துக் கொல் லும் பொருளாகவும் பயன்படுகிறது. செம்பு ஆர்செனைட்டு (CuHAsO,). அம்மோ னியம் ஆர்செனைட்டும் செம்பு சல்ஃபேட்டும் கலக் கும் போது நல்ல பச்சை நிறமுள்ள செம்பு ஆர் செனைட்டு வீழ்படிகின்றது. இது சுவர்த்தாள்களில் பச்சை நிறம் ஏற்ற உபயோகப்படுகிறது. ஆனால் சிலவகை நுண்ணுயிர்கள் (microorganisms) இதை மிகக் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்செனிக் சாக மாற்றிவிடுகின்றன. வெள்ளி ஆர்செனைட்டு (Ag;AsO ). சில்வர் நைட் ரேட்டைச் சமநிலைப் படுத்தப்பட்ட சோடியம் ஆர் சனேட்டுடன் சேர்க்கும்போது மஞ்சள் நிற வெள்ளி ஆர்செனைட்டு வீழ்படிகின்றது. இது அசெட்டிக் அமிலத்தில் கரையக் கூடியது. பாரிஸ் குப்ரிக் அசெட்டோ ஆர்செளைட் அல்லது பச்சை (CH CO0), Cu. 3Cu(AsO,), காரப்பண் நிறைந்த செம்பு அசெட்டேட்டை ஆர்செனிக் ஆக் சைடுடனும் அசெட்டிக் அமிலத்துடனும் சேர்த்துக் Ị ஆர்செனிக் (தனிமம்) 101 கொதிக்க வைக்கும்போது பச்சைநிறம் கொண்ட பாரிஸ் பச்சை (paris green) கிடைக்கின்றது. இது பச்சை வண்ணப் பூச்சுகள் (paints) தயாரிப்பிலும், பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ஆர்செனிக் அமிலம் (H,AsO,). ஆர்சீனியஸ் ஆக்சைடை நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜன் ஏற்றத் திற்கு உட்படுத்தும்போதும் ஆர்செனிக் ஐ ஆக்சைடை (arsenic pentoxide) நீரில் கரைக்கும் போதும் ஆர் சனிக் அமிலம் கிடைக்கின்றது. ஆர்சனிக் அமிலத்தின் உப்புக்கள் ஆர்செனேட்டு கள் ஆகும். ஆர்செனிக் அமிலம் ஒரு மூவிணைய அமில மாதலால் மூன்று வகை உப்புக்கள் கிடைக்கின்றன. சோடியத்தோடு ஏற்படும் மூன்று வகை உப்புக்கள் (i) மூசோடியம் ஆர்செனேட்டு,(ii) இரு சோடியம் மோனோஹைட்ரஜன் ஆர்செனேட்டு, (iii) ஒற்றை சோடியம் இரு ஹைட்ரஜன் ஆர்சனேட்டு என்பன வாகும். இரு சோடியம் ஆர்செனேட் காலிக்கோ அச்சுப்பணியில் (calico printing) பயன்படுகின்றது. ஈய ஆர்செனேட்டு Pb, (AsO,), இரு சோடியம் ஆர்செனேட்டை ஈய அசெட்டேட்டுடன் சேர்க்கும் போது ஈயஆர்செனேட்டு கிடைக்கின்றது. இது பழ மரங்களில் ஏற்படும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுகின்றது. ஆர்செனேட்டுகளை மிகையான நைட்ரிக் அமி லத்துடன் அம்மோனியம் மாலிப்டேட்டுடனும் ammonium molybdate) சேர்த்துச் சூடாக்கும்போது மஞ்சள் நிற அம்மோனியம் ஆர்செனோ மாலிப் GLL (ammonium arsenomolybdate) (NH),ASO, X.M00,YH,O) கிடைக்கிறது. ஆர்செனிக் இரு சல்ஃபைடு (As,S ). ஆர்செனிக் கையும், கந்தகத்தையும் சேர்த்துச் சூடுபடுத்தும் போது இது கிடைக்கிறது. இது ஓர் ஒளிக்கசிவு உடைய பொருளாகும். இது இயற்கையிலும் தாதுவாகக் கிடைக்கின்றது. இது வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. பொட்டாசியம் நைட் ரேட்டுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது சுடர் விட்டு எரிகின்றது. இந்தப் பண்பைப் பயன்படுத்தி வெள்ளைத் தீ அல்லது வங்காளத் தீ தயாரிக்கப் படுகிறது. அழகான வெள்ளைத் தீயைத் தயாரிக்க ரியால்கார், கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட்டு ஆகியவற்றைப் வெப்பப்படுத்த வேண்டும். அதன் அமைப்பு, சீர்மையற்ற நாற்பட்டக (distorted tetrahedron) அமைப்பாகும். இதில் ஆர்செனிக் அணுக்கள் கந்தக அணுக்களுடன் ணைக்கப்பட்டி ருக்கின்றன. ஆர்செனிக் மூசல்ஃபைடு - ஆர்ப்பிமென்ட் (As,Se). இது இயற்கையில் கிடைக்கிறது. ஹைட்ரஜன் சல்ஃ பைடைச் சோடியம் ஆர்செனேட்டுடன் சேர்க்கும் போது இது மஞ்சள் நிறப்பொருளாக வீழ்படிகின்றது.