உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆர்செனோ பைரைட்டு

102 ஆர்செனோ பைரைட்டு S As As S As As சோடியம் ஹைட்ராக்சைடிலும் அம்மோனியம் சல்ஃ பைடிலும் கரைகின்றது. இதன் அமைப்பு மடிக்கப் பட்ட ஊசி வடிவமாக இருக்கின்றது. As S As I S As S S As ஆர்செனிக் ஐசல்ஃபைடு(As,S,).ஆர்செனிக் மூசல்ஃ பைடையும் கந்தகத்தையும் சேர்த்து வெப்பப்படுத் தும்போது ஐ சல்ஃபைடு கிடைக்கின்றது. இது மஞ்சள் நிறப் பொருளாகும். இது மஞ்சள் நிற அம்மோனியம் சல்ஃபைடில் கரைகின்றது. ஆர்செனிக் உப்பீனிகளுடன்சேர்ந்து மூ ஹாலைடு களையும்,ஐ ஹாலைடுகளையும் தருகின்றது. ஆர்செனிக்குக்கான சோதனைகள். ஆர்செனிக் உள்ள பொருள்கள் ஹைட்ரஜன் சல்ஃபைடுடன் சேரும்பொழுது மஞ்சள் நிற ஆர்செனிக் மூசல்ஃபைடு வீழ்படிவாகின்றது. ஆர்செனிக் உப்புக் கரைசலில் சோடியம் ஹைட்ராக்சைடும் செம்பு சல்ஃபேட்டும் சேர்க்கும்போது நல்ல பச்சை நிறச் செம்பு ஆர் செனைட்டு (copper arsenite) வீழ்படிவாகின்றது. நடு வெள்ளி நைட்ரேட்டுடன் ஆர் நிலையாக்கப்பட்ட செனைட்டுகள் மஞ்சள் நிற வீழ்படிவையும் ஆர் செனேட்டுகள் இளம் சிவப்பு நிற வீழ்படிவையும் தருகின்றன. மார்ஷ் சோதனை. தூய சல்ஃப்யூரிக் அமிலத் தையும் துத்தநாகத்தையும் ஆர்செனிக் உள்ள பொரு ளுடன் சேர்த்து வெப்பப்படுத்தினால் வரும் ஆவியை ஒரு குழாயின் வழியாக வெளியேற்ற வேண்டும். அக்குழாயை ஆவிபோகும் வழியில் வெப்பப்படுத்தி னால் சிறிது தொலைவில் கரிய பளப்பளப்பான படி வம் கிடைக்கின்றது. இப்படிவம் சோடியம் ஹைப் போக்குளோரைட்டில் (sodium hypochlorite) கரையக் கூடியது. இச்சோதனைக்கு மார்ஷ் சோதனை எனப் பெயர். எடை அறிதல். ஒரு பொருளில் ஆர்செனிக்கின் எடையை இரு வகைகளில் கணக்கிடலாம். அதை எடையறி பகுப்பு மூலமாகவும் (gravimetric analysis) பருமனறி பகுப்பாய்வின் மூலமாகவும் அறியலாம். அமில ஆர்செனிக் கரைசலில் ஹைட்ரஜன் சல்ஃ பைடைச் செலுத்தினால் ஆர்செனிக் சல்ஃபைடு வீழ் படிகின்றது. அதை நன்றாகக் கழுவி உலர்த்தி AsgS, ஆக எடையை நிர்ணயிக்கலாம். பருமனறி பகுப்பு முறையில் ஆர்செனிக் உள்ள கரைசல் அமிலம் கலந்த பொட்டாசியம் அயோடை டுடன் சேர்க்கப்படுகிறது. அயோடின் விளைபொரு ளாக உண்டாகிறது. அதைச் சோடியம் தயோசல்ஃ பேட்டுக் கரைசலுடன் தரம்பார்த்து (titration) ஆர் செனிக்கின் எடையைக் கணக்கிடலாம். பயன்கள். இது கால்நடைகளின் தோலைப் பாதுகாக்கவும், பைரக்ஸ் கண்ணாடி (pyrex glass ) தயாரிக்கவும் பயன்படுகிறது. ஈயத்துடன் கலந்த கலவை கடினத்தன்மை வாய்ந்தது. இது ஈயக் குண்டுகள் செய்யப் பயன்படுகின்றது. வேளாண் மையில் ஆர்செனிக் சேர்மங்கள் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகின்றன. அண்மையில் ஆர்செனிக்கும், காலியமும் (gal- lium) சேர்ந்த கலவை அரைக்கடத்தியாகச் (semi- conductor) சிலிக்கான் சில்லுகளுக்குப் (chips) பதி லாகக் கணிபொறிகளில் (computer) பயன்படுத்துவ தாகத் தெரிகிறது. இந்தக் கலவையை விரைவில் கணிபொறிகளில் பயன்படுத்தி அவற்றை மிக வேக மாக இயக்கலாம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. சி. அகோரம் ஆர்செனோபைரைட்டு ஆர்செனிக் தனிமத்தின் முக்கிய தாது ஆர்செனோ பைரைட்டு (arsenopyrite). இக்கனிமம் ஒற்றைச் சரிவுப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறுகள் FeAs, Fe,As, FeAs, காடும் 34.3 என்பன. இக்கனிமத்தில் ஆர்செனிக் 46.0 விழுக் 19.7 கந்தகம் விழுக்காடும் இரும்பு உள்ளன. விழுக்காடும் சில சமயங்களில் இரும்பின் சில பகுதிகள் கோபால்ட்டால் இடப் பெயர்ச்சி அடைந்து காணப்படும். அதை டானைட்டு (danaite) என அழைப்பர். இதில் 3 முதல் 9 விழுக்காடு வரையிலும் கோபால்ட்கலந்து காணப் படும். இதன் படிக அச்சுகளின் நீள விகிதம் a:bc = 1.683:1:1.136 ஆகும். செம்பாள படிகங்கள் பட்டக வடிவிலும், அமைப்பிலும், தூண் வடிவ அமைப்பிலும், மணி யமைப்பிலும், மையவிரியமைப்பிலும் காணப்படும். பட்டகங்கள் வெள்ளி நிற வெண்மையாயும் (silver