உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்செனோலைட்டு 103

white) சாம்பல் நீல நிறமாயும் சில சமயங்களில் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். தூள் அடர் சாம்பல் கருப்பு ஊராய்வுத் நிறமானது. இதன் கடினத் தன்மை 5.5 முதல் 6 வரையிலும். அடர்த்தி எண் 5.9 முதல் 6.2 வரையிலும் மாறு படும். உலோக மிளிர்வையும், சீர் அற்ற முறிவை யும் நொறுங்கும் தன்மையையும் உடையனவாகக் தெளிவான செவ்விணை வடிவப் காணப்படும். (110) பட்டகக் கனிமப் பிளவும், தெளிவற்ற அடி யிணை வடிவப் (001) பிளவும் கொண்டது. ஒளியியலாக இக்கனிமம் ஒளி புகாத (opaque) தன்மை கொண்டது. ஆனால் தாது எதிர்பலிப்பு நுண்ணோக்கியால் (ore moroscope) பார்க்கும்போது வெள்ளை நிறமாகவும், இதன் ஒளி விலகல் எண் (refractive index) a அச்சின் திசையில் சிவப்புக்கு 1.404 1,830 1.660 படம் 1. ஆர்செனோ பைரைட்டின் கனிமத் தோற்றம் 1.847 ஆகவும், மஞ்சளுக்கு 1.597 ஆகவும், பச்சைக்கு ஆகவும், a அச்சுத் திசையில் சிவப்புக்கு ஆகவும் ஆகவும், மஞ்சளுக்கு பச்சைக்கு 1.490 ஆகவும்c நீல அச்சுத் திசையில் சிவப்புக்கு 1.994ஆகவும், மஞ்சளுக்கு 1,573 ஆகவும், பச்சைக்கு 1.307 ஆகவும் தோன்றும். மேலும் இதன் எதிர்பலிப்பு விழுக்காடு (reflection percentage) சிவப்புக்கு 47 ஆகவும் ஆரஞ்சுக்கு 48.5 ஆகவும், பச்சைக்கு 57.5 ஆகவும் காணப்படுகிறது. ஊதுகுழல் சோ ாதனை முறையில் இதனை ஆராயும்போது, மூடிய குழல் சோதனை முறையில் இதைச் சூடு செய்யும்போது மஞ்சள் நிற ஆர்செனிக் சல்ஃபைடைக் கொடுக்கும். பின்பு திண்மையான சாம்பல் நிற ஆர்செனிக் உலோகத்தின் படிகங்களைக் காணலாம். திறந்த குழல் சோதனையில் இது கந்தக வளிமங் களைக் கொடுத்துப் பின்பு வெண்ணிற ஆர்செனிக் மூவாக்சைடைப் படியச் செய்யும். இது நைட்ரிக் அமிலத்தில் கரைகிறது. பரவல். இக்கனிமம் உலகில் பல இடங்களில் பரவ லாகக் காணப்படுகிறது. பொதுவாக மற்ற வகைச் சால்கோ கலினா பைரைட்டு, வெள்ளித்தாது முதலியவற்றுடன் சல்ஃபைடுகளான பைரைட்டு, ஆர்செளோலைட்டு 103 இது கலந்த நிலையில் காணப்படுகிறது. சில சமயங் களில் வெந்நீர் ஊற்றுப் படிவுகளிலும் (hot spring deposits), தொடுகை உருமாற்றப் பாறை வளாகங் களிலும் அடிக்கடித் தங்கப் படிவுகளுடன் இக் கனிமம் காணப்படுகிறது. (Vastman உலகில் ஆஸ்ட்டிரியாவில் ஸ்லஸ்பர்க் என்ற இடத்திலும், ஸ்வீடனில் சாலாவிலும் (Sala) வாஸ்ட் மான்லாந்திலும் land) அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பிராங்கோனியாவிலும் (Franco- nia) நுண்படிகங்களாக அதிக அளவில் காணப்படு கிறது. ஒன்ட்டாரியாவில் (Ontario) மார்மோரா (Marmora) நகரப்பகுதியிலும் காணப்படுகிறது. இக்கனிமம் பலவகைப்பட்ட இந்தியாவில் உலோகச் சல்ஃபைடுகளுடன் கலந்தநிலையில் காணப் படுகிறது. குறிப்பாகப் பீகார், ஹரியானா, ஜம்முக் காஷ்மீரம், கர்நாடகம், இராஜஸ்தான், உத்தி ரப் பிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங் களில் பரவலாகக் காணப்படுகிறது. இக்கனிமம் பரவ லாக எல்லா மாநிலங்களிலும் உலோக சல்ஃபைடு கனிமங்களுடன் கலந்து காணப்படுகிறது. பயன்பாடு. ஆர்செனிக் தனிமத்தின் மிக முக்கிய மான கனிமம். இதிலிருந்து பூச்சிக்கொல்லி மருந் துகள், வண்ணக் கலவைகள் ஆகியவை தயாரிக்கப் படுகின்றன. நூலோதி ந.சந்திரசேகரன் 1.Ford, W. E., Danal's Textbook of Minerology, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A. N., Winchell, H., Elements of Optical Minerology, Wiley Eastern Private Limited, New Delhi, 1967. 3. Krishnaswamy, S., India's Mineral Resources, Oxford & 1BH. Publishing Company, New Delhi, 1979. 4. Gokhale, K. V. G. K., Rao, T. C., Ore Deposits of India, Thompson Press (India) Limited, Faridabad, 1978. ஆர்செனோலைட்டு ஆர்சனிக் (arsenic) தனிமத்தை உள்ளடக்கிய கனி மத்தை ஆர்செனோலைட்டு (arsenolite) என அழைப் பர். இதன் வேதியியல் உட்கூறு As,O, (arsenic tri-oxide). இது செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியில் (iso- metric system) படிகமாகிறது. மேலும் இது செஞ் சமச் சதுர எண்பட்டகங்களாகக் கிடைக்கின்றது.