உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆர்ட்டீசியன்‌ ஊற்று

104 ஆர்ட்டீசியன் ஊற்று இயற்கையில் திண்ணிய நிலையிலும் துகள் நிலையிலும் காணப்படுகின்றது. எண்முகப் பட்டகப் பிளவு கொண்டது. நிறமற்றோ வெள்ளை நிறத் துடனோ காணப்படுகிறது. இதன் கடினத் தன்மை 1.5; அடர்த்தி எண் 3. 7. அலகு படிகத்தில் (units cell) 16 மடங்கு வாய்பாட்டில் உள்ள அணுக்கள் காணப்படும். இதன் ஒளிவிலகல எண் (index of refraction) 1.755 ஆகும். ஆர்செனிக் கனிமங்களுடன் இரண்டாம் வகைக் (secondary minerals) கனிமங்களாக இது காணப் படுகிறது. இயற்கையில் மிகவும் அரிதாகக் காணப் படுகிறது. கலிஃபோர்னியாவில் (California) அமர்கோசா சுரங்கத்தில் (amargosa mine) அதிக அளவு காணப் படுகிறது. ஜாசிம்ஸ்டாலில் (Joachimstal), பொகி மியா (Bohenia) என்ற இடத்திலும், ஜெர்மனியி லும், பிரான்சிலும் அதிக அளவிலும் செக்கஸ்லோ வாக்கியா (csechoslovakia), நாட்டில் கிளாடிட்டைட் டுடன் (claudetite) சேர்ந்தும் காணப்படுகிறது. மேலும் கலிபோர்னியாவில் ஆல்ஃபைன் (Alphine) என்ற இடத்தில் எனார்கைட்டுடன் (enargite) இணைந்து காணப்படுகிறது. நூலோதி சு. ச. 1. Ford, W. E., Dana's Textbook of Minerarogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A. N., Winchell, H., Elements of Optical Mineralogy, Wiley Eastern Limited, New Delhi, 1968. ஆர்ட்டீசியன் ஊற்று ஒரு தொடர்ச்சியான படிவுப்பாறை வளாகத்தில் இரண்டு நீர் புகாப் பாறைகளுக்கு இடையில் நீர் புகும் பாறைப்படிவு அகப்பட்டுக் கொண்டு, தண்ணீ ருக்காகத் துளையிடும்போது அந்நீர்புகும் பாறையி லிருந்து, மேல் உள்ள அழுத்தத்தால் நீர் பீறிட்டு வெளி வருவதை ஆர்ட்டீசியன் (artesian) என்றும், அவ்வாறு தோண்டப்பட்ட கிணறு ஆர்ட்டீசியன் கிணறு (artesian well) அல்லது ஆர்ட்டீசியன் ஊற்று (artesian spring) என்றும் அழைக்கப்படும். இந்த ஆர்டோசிஸ் (artosis) என்ற சொல், பிரான்சு உள்ள ஆர்டோசிஸ் என்ற நீர்ப்படுகை வளாகப் பகுதியைக் குறிக்கும். இவ்வூற்று முதன் முதலில் அங்கு காணப்பட்டதால் இதற்கு இப் பெயர் ஏற்பட்டது. பண்பில் இலண்டனில் (London) உள்ள ஒரு நீர்ப்படுகையும் இந்த வளாகத்தை ஒத்திருந்தது. நாட்டில் இந்த ஊற்று, பல வழிகளில் தோன்றுகிறது. அவையாவன, பாறை வளாகங்களில் பெயர்ச்சிப் நீர்ப்பிடிப்புப் பரப்பு அழுத்தப்பரப்பு நீர்மட்டக்கிணறு ஆர்ட்டீசியன் கிணறு நீர்மட்டம் பாயும் தரைமட்டம் கிணறு நீர் நீர்மட்டம் அடங்கா நீர்ப்பகுதி. க்கும் அடுக்கு உட்புகா அடுக்கு அடக்கிய நீர்ப்பகுதி படம் 1. அடக்கப்பட்ட, அடக்கப்படாத நீர்ப்பிடிப்புப் பகுதிகள்