140 ஆரஞ்சு
140 ஆரஞ்சு (arran) காணப்படும். ஆரச்செம்பாளங்கள் சில இடங்களில் நீண்டு மிக ஆழ்ந்து செல்லும். அரான் கடற்கரை வளாகத்தில் 24 கி.மீ.தூரத்திற்குள் ஏறக்குறைய 525 செம்பாளக் கூட்டங்கள் உள்ளன. மொத்தத் தடிப்பு 1649 மீட்டர் அவற்றின் ஆராய்ந்துள்ளனர். என படிவுப் பாறை வளாகத்தில் இத்தகைய ஆரச் செம்பாளங்கள் தோன்றினால் அவை சூழ்ந்துள்ள பாறைகளைவிடக் கடினமாகவும் உறுதியாகவும் இருப்பதால் அரிமானத்திற்கு உட்படுவது இல்லை. எனவே, அல்லிடத்தில் மற்ற பாறைகளைவிட அவை உயர்ந்து முகடுபோலக் காட்சி அளிக்கும். சூழ்ந்துள்ள பாறைகளைவிட மென்மையாகவும் உய ரம் குறைந்ததாகவும் இருந்தால் செம்பாள இருப் பிடங்கள் கால்லாய்கள் போலமையும் (படம் 5). நூலோதி சு.ச. 1. Holmes, A., Holmes, D. L., Holmes Principles of Physical Geology, ELBS and Nelson, Lagos, 1978. 2. Gorshov, G., Yakushova, A., Physical Geology, Mir Publishers, Moscow, 1967. ஆரஞ்சு வெப்ப (tropic), மிதவெப்பப் (subtropic) பகுதி களில் பயிராக்கப்படும் மரக்கனி வகைகளில் ஆரஞ்சு வகையும் ஒன்றாகும். இவை எல்லாம் சித்ருஸ் (Cirrus) என்னும் பேரினத்தையும்,ரூட்டேசி (rutaceae) என்னும் அல்லி இணையா (polypetalous) இருவிதை யிலைக் குடும்பத்தையும் சார்ந்தவையாகும். ஆரஞ்சு கள் வணிகத்துறையில் மிகவும் முக்கியம் வாய்ந் தவை. இவற்றில் பலவகைகளுண்டு.இனிப்பு ஆரஞ்சு கள் (sweet oranges), செவில் ஆரஞ்சுகள், (seville oranges), மாண்டரின்கள் (mandarins) திராட்சை ஆரஞ்சுகள் (grape oranges), சாடக்குகள் அல்லது பொமல்லோக்கள் (shaddocks or pomelo), எலு மிச்சைகள் (lime), லெமன்கள் (lemons), சித்ரான்கள் (citrons) ஆகியவை மிக முக்கியமானவையாகும். ஆரஞ்சு தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமும் ஈரத்தன்மையுமுள்ள பகுதிகளில் மிகுதியாகக் காணப் பட்ட போதிலும், இப்பகுதிகளுக்குத் தெற்கிலும், வடக்கிலும் கூட து நன்கு வளர்ந்து வருகின் றன. சித்ருஸ் என்ற பேரினத்தை வகைப்பாட்டியிய லில் அறிந்து கொள்வது மிகவும் சிக்கலானதாகக் கருதப்படுகின்றது. வெவ்வேறு வல்லுநர்களின் கொள்கையின்படி இதன் சிற்றினங்களின் எண்ணிக் கை 145 வரை மதிப்பிடப் பட்டிருக்கின்றது. இருப் பினும் இதில் 12 முதல் 30 சிற்றினங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவில் பயிராக்கப்படுகின்றன. ஆரஞ்சுகளின் தாயகம் சீனா என்று கி.மு.2000 ஆண்டில் எழுதப்பட்ட ஒருகுறிப்பிலிருந்து தெரிகின்றது. பொதுப் பண்புகள். இவைஇலையுதிரா (evergreen) மரங்கள் அல்லது புதர்ச்செடிகளாகும். மாற்றமைவு கொண்ட ஆரஞ்சு (alternate phyllotaxy) இலைக் காம்புகள் சிறகுபோன்று விரிவடைந்திருக்கும்; இலைகளினுள் எண்ணெய்க் குடுவைகள் (oil cavities) ஏராளமாக இருப்பதால் இவை ஒரு விதமான குறிப்பிடத்தக்க நறுமணத்தைக் கொடுப்பதுடன், ஒளிக்கெதிர்ப்புறமாக வைத்துப் பார்க்கும் பொழுது அவை புள்ளிகள் போன்றும் காணப்படும். இலைக் கோணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஒரு வலுவான முள் (thorn) இலைகளின் உருமாற்ற மாகக் கருதப்படுகின்றது. மலர்கள் இருபாலானவை (bisexual); ஆரச்சமச்சீருடையவை (actinomor- phic); பெரும்பாலும் கோரிம்ப்(corymb) என்று கூறப் படுகின்ற மஞ்சரியில் அமைந்திருப்பவை. தனித்த மலர் அரிது. புல்லி, அல்லி வட்டங்கள் 4 முதல் 8 இதழ்களுடையவை. மகரந்தத் தாள்கள் எண்ணிக்கை யைப் பொறுத்துக் கற்றைகளாக இருக்கும். சூற்பை மேல்மட்டமானது. 8 முதல் 15(18) அறைகளைக் கொண்டது. சூற்பையைச் சுற்றித் தேன் சுரக்கும் தட்டு (disc) உள்ளது. சூலகத்தண்டு 1. சூலகமுடி சிர வடிவமாகவோ (capitate) முழுமையாகவோ சற்றுப்பிளவுற்றோ (lobed) காணப்படும். சாதா ரணமாகக்கனி பெரியது; இது ஹெஸ்பெரிடியம் (hesperidium) என்று கூறப்படுகின்ற ஒரு தனி வகை சதைப்பற்றுள்ள கனியாகும். கனி ஒவ்வொன்றிலும் பல அறைகள் உண்டு; ஒவ்வொரு அறையிலும் ஏறக்குறைய எட்டு விதைகள் (சில விதைகளற் றவை) சதைப் பற்றுள்ள பாகத்தில் புதைந் திருக்கும். கனிக்குத் தடித்த பீல் (peel) என்று கூறப் படுகின்ற தோலுண்டு. இதில் நிறமும், மணமும் உள்ள எக்சோகார்ப் (exocarp) அல்லது ஃபிளா விடோ (flavedo) என்ற மெல்லிய வெளிப்புறத் தோலும், வெண்ணிறப் பஞ்சுபோன்ற (spongy) பித் (pith) அல்லதுமீசோகார்ப் (mesocarp) என்ற இடைப் பகுதியும், எண்டோகார்ப் (endocarp) என்ற உள் பகுதியும் அடங்கியிருக்கின்றன. எண்டோகார்ப்பி லிருந்து சாறடங்கிய பல செல்களாலான குமிழ்கள் (vesicles) அறையின் மையத்தை நோக்கி வளர்ந்து நிரம்பியிருக்கின்றன. பொதுவாக, கனி சம்பந்த பட்ட ஒவ்வொரு இயல்பும், அதாவதுதோலின் தடிப் புத் தன்மை, சதைப் பற்றின் அளவு, சாற்றிளைவு, ளிப்பு, இனிப்புத் தன்மை, நறுமணம் போன்றவை சிற்றினங்களுக்குத் தக்கவாறு வேறுபடுகின்றன.