உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஆரைத்துடுப்பு மீன்கள்‌

156 ஆரைத்துடுப்பு மீன்கள் நிலையில் வைப்பதற்கு உதவும் நீள் சதுரத் தசை (pronator quadratus), ஆரை எலும்பின் முனை (distal end of radius) (இந்த இடத்தில் நாடித் துடிப் பின் பண்புகளை அறியலாம்) ஆகும். ஆரைத் தமனியின் கிளைகள். 1.முன்கைப் பகுதித் தசைகளின் கிளைகள் (muscular branches) முன்கை முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் சிறு கிளைகளாகச் செல்கின்றன. 2. முழங்கை மூட்டுத் தமனிப் பின்னல் (arterial anastomosis at elbow joint) ஆரை எலும் பின் திசையிலிருந்து முன்கை முன் புறக் குழிவுப் பகுதியிலிருந்து, ஆரைத் தமனி முதலில் ஒரு கிளை வழங்குகிறது. இக் கிளையின் பெயர், பின் வளையும் தமனி (radial recurrent artery) என்பது. இத்தமனி புயத்தமனியின் ஓர் உடனொத்த கிளையுடன் (radial) (collateral artery) சேர்ந்து பின்னிப் பிணைகிறது (anastomosis). 3. மணிக்கட்டுப்பகுதி. முன்புற மணிக்கட்டுத் தமனியும் (anterior carpel artery) பின்புற மணிக்கட்டுத் தமனியும் (posterior carpel artery) மணிக்கட்டுப்பகுதியின் முன் புறத்திலும் பின்புறத்திலுமாகக் கிளைகளைப் பெற்றிருக்கின்றன. 4. உள்ளங்கைப் பகுதி (palmar aspect). 1. 2 3 1 படம் 3 頭頭 5 மணிக் விரல் தமனி 2, ஆள்காட்டி விரல் தமனி 3. கட்டை வீரல் தமனி 4 முதல்புற மணிக்கட்டு விரல்கள் இடையே உள்ள தமனி 5. மேல்மட்ட கீழ்மட்ட உள்ளங்கைத் தமனிகள்(ஈ) சுட்டுப் பகுதியிலிருந்து ஆரைத்தமனி உள்ளங்கை வந்தடைந்து இரு கிளைகளாகப் பிரிந்து ஒன்று, மேல் மட்டத்திலும், மற்றொன்று கீழ் மட்டத்திலு மாக உள்ளங்கைத் தசைகளுக்கு இரத்தம் பாய்ச்சு கிறது. ஆரைத் தமனியின் மேல்மட்டக் கிளையும் (superficial branch of radial artery) ஆரத்தித் தமனி யின் மேல்மட்டக் கிளையும் (superficial branch of ulnar artery) இணைந்து, மேல்மட்ட உள்ளங்கைத் தமனி வளைவாகச் (Superficial palmar arch) செயல் படும். இது போன்று ஆரைத்தமனியின் கீழ் மட்டக் கிளையும் (deep branch of radial) ஆரத்தித் தமனி யின் ஆழக் கிளையும் (deep branch of ulnar artery) இணைந்து ஆழ உள்ளங்கைத் தமனி வளைவாகச் deep palmar arch) செயல்படும். 5. மணிக்கட்டுக் கும், விரல்களுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி. இப்பகுதியில் புறமணிக்கட்டு, விரல்களுக் கிடையே (அதாவது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே) உள்ள பக்கங்களில் ஆரைத் தமனி ஒரு கிளையை உண்டாக்குகிறது. இதுவே முதல் புறமணிக்கட்டுக்கும், விரல்களுக்கும் இடையே உள்ள தமனி (first dorsal metacarpel artery) ஆகும். மேலும் உள்ளங்கை இடைப் பகுதியில், ஆரைத் தமனி சற்று அண்மையில் நகர்ந்து கைக்கட்டைவிர லுக்கு ஒரு கிளையை அளிக்கிறது. இதன் பெயர் முதன்மைக் கைக்கட்டைவிரல் தமனியாகும் (arteria princeps poilicis) மற்றொரு கிளை இது போன்று ஆரைத் தமனியிலிருந்து ஆள்காட்டி விரலுக்கு அவ் விரலின் முனைவரை செல்கிறது. இது ஆரைத் திசை யில் அமைந்த முதன்மையான ஆள்காட்டி விரல் தமனியாகும் (arterial radialis indicis). இத்தமனி, விரல் தமனியுடன் (digital artery) பிணைகிறது. கி.காமாட்சி நூலோதி 1. McMinn, R.M.H., Hutchings, R.T.A., Colour Atlas of Human Anatomy, Wolfe Medical Publication Ltd., Conway Street, London, 1983. 2. Romanes, G. J., Cunningham's Text Book of Anatomy, 12th Edition, Oxford Press, Oxford, 1981. ஆரைத்துடுப்பு மீன்கள் University பிளாக்கோடெர்மி (Placodermi), எலாஸ்மோ பிராங்கை (Elasmobranchii), ஆக்டினோப்டெரிஜியை