உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரைத்துடுப்பு மீன்கள்‌ 181

(actinopterygii), கிராசாப்டெரிஜியை (crussopterygii) ஆகிய நான்கு மீன் பிரிவுகளில் ஆக்டினோடெரிஜி யன்களே பெரும் எண்ணிக்கையில் (6000 சிறப்பினங் கள் கொண்ட 150 குடும்பங்கள்) உள்ளன. இவை அனைத்து வகையான நீர்நிலைகளிலும், நீர்ச்சூழல் களிலும் வாழ்கின்றன. இவற்றின் உருவமும் உடற் பருமனும் வேறு எந்த வகை விலங்குகளிலும் காணப் படாத அளவிற்கு மாறுபட்ட வகைகளில் காணப் படுகின்றன. இந்த வகுப்பு மீன்களின் மூதாதைகள், நடு டிவோனியன் காலத்தில் நன்னீர்நிலைகளிலும், இடை உயிர் ஊழிக் காலத்திலிருந்து கடல் நீரிலும் கடல்நீரிலும் வாழ்ந்தன. அகச்சட்டகம் மட்டுமின்றிப் புறச்சட்டக மும் (உடற் செதில்கள்) எலும்பினால் ஆக்கப்பட் டுள்ளமையால் இவற்றை எலும்பு மீன்கள் (bony fishes) Graar & கூறுவர். இவற்றிற்கு உள் மூக்குத் துளையில்லை. தொடக்க கால ஆரைத் துடுப்பு மீன்களில் (ray-fimed fishes) நுரையீரல் இருந்தது; பின் வந்தனவற்றில் அது காற்றுப்பையாக (air bladder) மாறி மிதவைத் தன்மையைக் (buoyancy) கட்டுப்படுத்தும் உறுப்பாகச் செயல்படுகிறது. ஒரே ஒரு முதுகுத்துடுப்பு மலப்புழைத் துடுப்புக்கு நேர் மேலே அமைந்துள்ளது. துடுப்புகளின் அடிப்பகுதி சிறு எலும்புகளால் வலுவூட்டப்பட்டுள்ளது; மற்ற பகுதி, வரிசைகளாக அமைந்த ஆரை எலும்புகளால் தாங்கப்பட்டுள்ளன. ஆரை எலும்புகளின் இரண்டு பக்கங்களிலும் கொம்புப் பொருளாலாகிய மெல்லிய குச்சி போன்ற, முன்நுனியில் பிளவுற்ற துடுப்புக் கதிர்கள் அமைந்து துடுப்புகளுக்கு வலுவூட்டுகின் றன. ஆரைத் துடுப்பு மீன்கள், கதிர்த்துடுப்பு மீன் கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேல்வரிசை - காண்ட்ராஸ்ட்டி (Chondrostei). இவ் வரிசையைச் சேர்ந்த மீன்களின் வாய், உடலின் முன் முனையின் கீழ்ப்பக்கத்தில் அமைந்துள்ளது. குருத் தெலும்புச் சட்டகம், தலையில் மேல்தோல் தகடு கள் போன்ற சிறப்பு உறுப்புகளைப் பெற்றவை. எனவே, இவற்றைக் குருத்தெலும்புக் கானாய்டுகள் எனலாம். எனினும், இவை தொன்மையான மீன் களே. இவற்றில் பெரும்பான்மையான மீன்கள் அற் றுப்போய்விட்டன. இந்த மேல்வரிசையைச் சேர்ந்த மீன்களில் சில சிறப்பினங்கள் மட்டும் தற்போது வாழ்கின்றன. உடல்தோலில் சாய்சதுர வடிவச் செதில் கள் உள்ளன. சமமற்ற வால் துடுப்பு, பொதுவாகத் திறந்தேயுள்ள ஊதுபுழைகள் (spiracles), உணவுக் குழாய்க்கு மேலமைந்து நுரையீரல் போல் செயல் படும் காற்றுப்பை ஆகிய உறுப்புகள் இந்த ஊழி மிக மீன்களில் காணப்படுகின்றன. தொல்லுயிர் யில் (palaeozoic era) இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவற்றை பாலியோனிஸ்க்காய் டுகள் (Paleoniscoids) என்றும் கூறுவர். ஸ்டர்ஜியன்கள் (sturgeons) ஐரோப்பா விலும், வட அமெரிக்காவிலும், வட ஆசியாவிலும் ஆரைத்துடுப்பு மீன்கள் 157 உள்ள ஆறுகளில் காணப்படுகின்றன. கானாய்டு செதில்களுக்குப் (ganoid scales) பதிலாக ஐந்து வரிசையாக அமைந்த கூர்முனை எலும்புத் தகடுகள் தோலில் இருக்கின்றன; முகவாய் நீண்டும், பற் களின்றியும் காணப்படும்; ஸ்கேபிரின்கஸ் (scaphirhyn- chus) எனப்படும் தட்டை மூக்கு ஸ்டர்ஜியன்கள் வட, நடு அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் காணப் படுகின்றன. கரண்டி வாய் ஸ்டர்ஜியன் (spoon billed sturgeon) எனப்படும் பாலியோடான் (polyodon) மிசிசிப்பியில் காணப்படுகிறது. பாலிப்ட்டீரஸ் (polyp- terus), கேலமாய்க்தைஸ் (calamoichthys) ஆகியவை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. மேல்வரிசை- ஹோலாஸ்டி (Holostei), காண்ட் ராஸ்டியைக் குருத்தெலும்புக் கானாய்டுகள் என்பது போல, ஹோலாஸ்டியை எலும்புக் கானாய்டுகள் என்று கூறுவதுண்டு. இந்த ஆரைத்துடுப்பு மீன் களின் உட்சட்டகத்தின் பெரும்பகுதி எலும்பினால் ஆனது. நிறைவுயிரி நிலையில் முதுகெலும்பில் முது குத்தண்டு முழுதும் மறைந்துவிட்டது; உடல் தோலில் மெல்லிய சாய்சதுரச் செதில்கள் உள்ளன; வால் துடுப்பு, சிறியதாகவும் குறைவான சமச்சீரற்ற நிலையிலும் காணப்படுகிறது; குடலுடன் ஒரு குழாய் வழியாக இணைக்கப்பட்ட காற்றுப்பை குடலின் மேற்பக்கத்தில் உள்ளது; ஊது புழை மறைந்து விட்டது. இந்த மேல்வரிசையைச் சேர்ந்த ஆஸ்ப்பிடோ ரிங்கஸ் (Aspidorhynchus) ஜுராசிக் காலத்தில் வாழ்ந் தது. லெபிடோஸ்ட்டியஸ் (Lepidosteus), ஏமியா (Amia) ஆகிய இரு இனங்களும் தற்போது வாழ்கின்றன. போலியோனிஸ்க் காய்டுகளிலிருந்து படிமலர்ந்து இந்த மீன்கள் தோன்றின. லெப்பிடோஸ்ட்டியஸ் தென் அமெரிக்க ஆறுகளில் வாழ்கிறது. இதன் தோலில் ஒன்றோடொன்று ஒட்டியவாறு அடுக்கப் பட்ட செதில்கள் உள்ளன. முகவாய் குறுகி அலகு போலவுள்ளது. ஊதுபுழை இல்லை; காற்றுப்பை குடலுடன் ஒரு குழாயினால் இணைக்கப்பட்டுள்ளது. ஏமியா, வட அமெரிக்காவில் உள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் வாழ்கிறது. தலைப்பகுதியில் மெல்லிய கானாய்டுச் செதில்களும் மற்ற பகுதிகளில் மெல்லிய சைக்லாய்டுச் செதில்களும் (cycloid scales) உள்ளன. மேல்வரிசை- டீலியாஸ்ட்டி (Teleostei) தற்காலத் தில் வாழும் மீன்களில் பெரும்பாலானவை இந்த மேல்வரிசையில் அடங்குவன. உட்சட்டகம் முழுமையும் எலும்பாலானது; தோலில் செதில்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் கூரையில் ஓடுகள் அடுக்கப் படுவன போல அமைந்துள்ளன. செதில்கள் சைக் லாய்டு அல்லது டீனாய்டு (ctenoid) வகையைச் சேர்ந்தவை; செதில்களே இல்லாத சில மீன்களும் உள்ளன. செவுள்கள், எலும்பினாலான மூடியினால் மறைக்கப்பட்டுள்ளன. செவுள் அறை, செவுள் துளை வழியாக, இரண்டு பக்கங்களிலும் வெளியே திறக்கிறது. வால் துடுப்பு, பொதுவாகச் செவுள்