உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரைத்துடுப்பு மீன்கள்‌ 159

படுகிறது. 1800 மீட்டர் உயரத்துக்கு மேலுள்ள மலைப் பிரதேசங்களில் இந்த மீன் நன்றாக வாழ் கிறது. சேற்று நீரில் வாழ்வதில்லை; ஏனெனில் அங்கு இதன் முட்டைகள் அழிந்து விடுகின்றன. தகுந்த சூழ் நிலையில் முதல் வருடத்தில் 20 முதல் 25 செ. மீ. வரை யிலும், இரண்டாவது வருடத்தில் 30 முதல் 35 செ.மீ வரையிலும், மூன்றாவது வருடத்தில் 40 முதல் 45 செ. மீ. வரையிலும் வளர்ச்சியடைகிறது. சால்மோ லெவன்ஸிஸ் (Salmo lavensis, Lochleven trout). ஸ்காட்லாந்திலிருந்து கொண்டு வந்து நீலகிரி ஏரிகளில் வளர்க்கப்படுகிறது. இதனுடைய தலை நீண்டும், பச்சை நிறத்துடனும் காணப்படுகிறது. நோட்டோப்டிரஸ் நோட்டோப்டிரஸ் (Notopterus notopterus) இந்தியா, மலேயா நாடுகளில் நன்னீரிலும், உப்புத் தண்ணீரிலும் வாழ்கிறது. இதனுடைய உடம்பு வெள்ளியைப் போன்ற வெள்ளை நிறத்தில் உள்ளது. முதுகுப்புறத்தில் கரிய கரிய பழுப்பு நிறப் புள்ளிகள் உள்ளன. 61 செ. மீ. வரை வளர்கிறது. தமிழ்நாட்டின் பெரிய ஏரிகளிலும் நீர்த் தேக்கங் களிலும் காணப்படுகிறது. இது ஒரு புலாலுண்ணி மீனாகும். இதை வளர்க்கும்போது மற்ற உணவு மீன்களுக்குச் சேதம் விளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மீனைப் பச்சையாகவும் உலர்த் தியும் நல்ல உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த மீனுக்கு அம்பட்டன் கத்தி என்று பெயர் வரிசை II - ஸ்கோப்பெலிபார்மிஸ் (Scopeliformes) இவ்வரிசையைச் சேர்ந்த மீன்கள் ஆழ்கடலில் வாழ் பவை. ஒளி உண்டாக்கக்கூடிய புள்ளிகள் தோலில் உள்ளன. முதுகுப்புறத்திலுள்ள துடுப்பிலும் மலப் புழைத் துடுப்பிலும் கெட்டியான முள் இல்லை. கொழுப்புள்ள துடுப்பு இதற்கு உண்டு. ஹார்போடாள் நெபிரியஸ் (Harbodon nebereus, Bombay duck). இந்தியாவிலும் சைனாவிலும கட லிலும் கடலைச் சார்ந்த நீரிலும் வாழும் மீன். இது பம்பாய்க் கடற்கரையில் மிக அதிகமாகக் காணப் படுகிறது; 41 செ. மீ. வரை வளரும். பொதுவாகக் கூட்டமாக வாழும்; நல்ல ஊட்டம் நிறைந்த உண வுப் பொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தமிழில் வங்கரவாசி எனக் கூறுவர். சாரிடா தும்பிள் (Saurida tumbil), பாக் விரிகுடா வில் அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் காணப்படும். இது ஒரு நல்ல உணவு மீன். தமிழில் இம்மீனைக் குளுவை என்றும் தும்பிலி என்றும் அழைப்பார்கள். வரிசை III- சைப்ரின்பார்மிஸ் (Cypriniformes). கெண்டை வகை மீன்கள் இந்த வரிசையில் அடங் கும். பெரும்பான்மையான மீன்கள் 'நன்னீரில் வாழ் பவை. ஆரைத்துடுப்பு மீன்கள் 159 ஆக்ஸிகேஸ்டர் அர்ஜென்டியா (Oxygaster argen- tea), பவானி, காவேரி ஆகிய ஆறுகளில் தமிழ்நாட் டிலும் கர்நாடகத்திலும் காணப்படுகிறது. ஆக்ஸிகேஸ்டர் உண்ட்ராகி (Oxygaster untrahi), ஒரிசாவிலுள்ள மஹா நதியிலும், தென்னிந்தியாவி லுள்ள காவேரி, கொள்ளிடம் ஆறுகளிலும் காணப் படுகிறது. நல்ல உணவு மீனாகப் பயன்படுகிறது. கர்ரா லேம்ட்டா (Gurra lamta), மலைகளிலுள்ள நீரோடைகளில் காணப்படுகின்றது. உடம்பின் மேல் பாகம் பச்சை, அல்லது நீலம் கலந்த பச்சை நிறத்தி லும், அடிப்பாகம் மஞ்சள் நிறத்திலும் உள்ளது. இது 20 செ.மீ. வரை வளர்கிறது. இதில் கொழுப் புச் சத்து அதிக அளவில் உள்ளது; சுவை மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. லேபியோ அரிஜா (Labeo ariza), மத்திய இந்தியா வில் உள்ள ஆறுகளிலும் நீலகிரி மலையின் நீரோ டைகளிலும் காவேரியிலும் காணப்படுகிறது. காவே ரியில் 56 செ.மீ. நீளம் வரை வளர்ச்சி அடைகிறது. மீன் உற்பத்தியில் இது அதிகப் பயனைத் தருகிறது. லேபியோ கல்பாசு (Labeo catbasu), பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் தென்னிந்தியா வில் உள்ள ஆறுகளில் காணப்படுகிறது. கோதா வரி, கிருஷ்ணா ஆறுகளில் மழைக்காலத்தில் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளுக்குக் கறுப்பு நிறத்துடுப்பு களும் இடுப்புக்குப் பக்கத்தில் மஞ்சள் நிறப்பட்டை யும் உண்டு. இம்மீன் 91 செ. மீ. வரை வளர்கிறது; மிகச் சிறந்த உணவாகப் பயன்படுகிறது. இதனைத் தமிழில் காக்கா மீன் என்று கூறுவர். லேபியோ பிம்பிரியேட்டஸ் (Labeo fimbriatus), சேல் கெண்டை என்று அழைக்கப்படும் இது ஒரு சிறந்த உணவு மீன். லேபியோ கொண்டியஸ் (Labeo kontius), காவேரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளிலும் அவற்றின் எல்லாக் கிளைகளிலும் கடற்கரைவரை இந்த மீன் காணப் படுகிறது. காவேரியில் கிடைக்கும் மீன்களில் அதிக மாகக் கிடைப்பவை இந்த மீன்களே. குளங்களிலும் நன்றாக வாழ்கின்றன. மேட்டூர் அணைக்கட்டுத் தேக்கத்தில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. உடல் சிவந்த நிறமாகவும் முதுகுப்புறம் கறுப்பு நிற மாகவும் காணப்படும்;உதடுகள் சதைப்பற்றுள்ளவை. பக்கவாட்டில் நீண்டு இருக்கின்றன; 61 செ.மீ. நீளம் வரை வளர்ச்சியடையும். பெண் மீன், 30 முதல் 36 செ.மீ. நீளம் வளர்ச்சி அடையும்போது பாலின முதிர்ச்சி (sexual maturity) அடைகிறது. ஆண் 21 செ.மீ. நீளம் அடையும்போதே பாலின முதிர்ச்சி அடைகிறது. சைப்ரினஸ் கார்ப்பியோ (Cyprinus carpio), சைனாவில் உள்ள குளங்களில் நிறையக் காணப் படும் இம்மீன், இலங்கையிலிருந்து கொண்டு