உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162. ஆரைத்துடுப்பு மீன்கள்‌

162 ஆரைத்துடுப்பு மீன்கள் விலிருந்து சீனா வரை காணப்படுகிறது; கிழக்குக் கடற்கரையில் அதிகமாகக் காணப்படுகிறது. அச் சுறுத்தப்படும்போது மண்ணிற்கு அடியில் சென்று மறைந்து கொள்கிறது. மே மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய இம்மீன்கள் கூட்டமாகக் காணப் படும். இது நல்ல ஊட்டம் மிகுந்த உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. தமிழில் கழங்கான் என்று அழைக் கப்படுகிறது. கூட்ட லேக்டேரியஸ் லேக்டேரியஸ (Lactaruis lactarius) தமிழில் சுதும்பு என்றும் குதிப்பு என்றும் அழைக் கப்படுகிறது. இந்தியாவிலிருந்து சீனா வரை காணப் படுகிறது. இது இறால் மற்றும் சார்டைன்கள் போன்ற சில மீன்களை உணவாக உட்கொள்கிறது. ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாக இம்மீன்கள் கிடைக்கின்றன. மேற்குக் கடற் கரையை விடக் கிழக்குக் கடற்கரையில் அதிகம் கிடைக்கின்றன. வை நல்ல சுவையுள்ளவையாக இருப்பதால் அதிக வணிக முக்கியத்துவம் பெற் றுள்ளன. பார்மியோ நைஜர் (Formio niger), தமிழில் கருப்பு வௌவால் என்று அழைக்கப்படுகிறது. இது 61 செ.மீ. நீளம் வரை வளர்ச்சி அடைகிறது. இம்மீனில் தாதுப்பொருள், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரம் ஆகி ஆகியன உள்ளன. நெமிப்டிரஸ் ஜப்பானிகஸ் (Nemipterus japonicus) கிழக்கு, மேற்கு இந்தியக் கடற்கரைகளில் காணப் படுகிறது. நல்ல உணவு மீனாகக் கருதப்படுகிறது. போமடேஸிஸ் பர்கேடஸ் (Pomadasys furcatus). முக்கியமாக இந்தியக் கிழக்குக் கடற்கரையில் அதி லும் சென்னைக் கடற்கரையில் அதிகமாகக் காணப் படுகிறது. 28 செ.மீ. வரை வளரும். இம்மீனின் நல்ல வாசனைக்காக இது உண ளவு மீனாகப் பயன்படு கிறது. இதனுடைய காற்றுப்பை, மீன்பசைக்கூழ் (isinglass) தயாரிக்கப் பயன்படுகிறது. திலேபியா மொசாம்பிகா (Tilapia mossambica), ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட மீன்.தற்போது தன் பெயர் சாரோதி ரோடான் மொசாம்பிகா (Saratherodon mossambica) என்று மாற்றப்பட்டுள்ளது. 1952 இல்மத்தியக்கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் (Central Marine Fish- eries Research station) மூலமாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்ள எல்லா நன்னீர் நிலைகளிலும் நன்றாக வளர்ச்சி அடைகிறது. இம்மீன் முட்டைகளையும் குஞ்சுகளையும் தன்னுடைய வாயில் வைத்து வளர்க் கிறது. தமிழில் ஜிலேபிக் திலேப்பிக் கெண்டை என்றும் வழங்கப்படுகிறது. கெண்டை என்றும் டிரைக்யூரஸ் சவாலா (Trichurus savalail), நீண்ட நாடா போன்ற தட்டையான உடலுடைய கடல் மீன். ஆகையால் நாடா மீன் (ribbon fish) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வால் துடுப்பு இல்லை, தமிழ்நாடு, கேரளா, பம்பாய்,ஒரிசா கடற்கரை களில் காணப்படுகிறது. இம்மீன் வெள்ளி போன்ற வெண்ணிறமுடையது. இது தமிழில் வாளைமீன், சாவாளை, ஓலை வாளை ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராஸ்ட்ரெல்லிஜெர் கானாகுர்டா (Rastrelliger Kanagurta, Indian mackerel), இந்தியாவில் தென் கிழக்கு, தென்மேற்குக் கடற்பகுதிகளில் வாழ்கிறது. நீண்ட, கூர்மையான, தட்டையான தலையையுடை யது. முதுகுப்புறம் பச்சையாகவும், இரண்டு மருங்கு களும் நீல நிறமாகவும் இருக்கும். 20 முதல்25 செ.மீ நீளம் வரை வளர்ச்சி அடையும். தமிழில் இதன் பெயர் கானாங்கெளுத்தி. இம்மீனைப் பிடிப்பதற்கு முக்கிய மாக ரம்பானி வலை பயன்படுத்தப்படுகிறது. இத னைப் பச்சையாகவும், உப்பிட்டும், ஊறுகாயாகத் தயாரித்தும் உணவாகப் பயன்படுத்துகிறார்கள். ஸ்கோம்பிரோமோரஸ் கட்டேட்டஸ் (Scomberomo- rus guttatus - Seer fish), இந்தியாவிலுள்ள எல்லாக் கடற்கரைகளிலும் பொதுவாகக் காணப்படுகிறது. இது வேகமாக நீந்தக்கூடிய புலாலுண்ணி. தமிழில் வஞ்சிரம் என்றும் நெய் மீன் என்றும் அழைக்கப் படுகிறது. இது மிகச் சுவை மிகுந்த மீனாகும். களில் ஸ்ட்ரோமேட்டியஸ் ஆர்ஜென்ட்டியஸ் (Stromateus argenteus, pomfret), இந்திய, பசிபிக் பெருங்கடல் காணப்படுகிறது. உடல் மிகவும் தட்டை யானது. தோள் துடுப்பு மிகவும் அகலமானது; வால் துடுப்பு இரட்டையாகப் பிரிந்துள்ளது. தமி ழில் வெள்ளை வவ்வால், என்று அழைக்கப்படு கிறது. மிகச்சிறந்த உணவு மீனாகக் கருதப்படு கிறது. வரிசை X - X - புளுரோநெக்டிபார்மிஸ் (Pleuronecti formes) ஆழ்கடல் வாழ்மீன்கள் ஆழமான பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புப்பெற்றுள்ளன. மிக மிகத் தட்டையான உடலுடையவை. சூழ்நிலைக்கேற்ப மேற் பக்கம் (upper side) நிறத்தை மாற்றிக் கொள் கிறது. உடம்பின் கீழ்ப் பக்கம் வெண்மையாக வுள்ளது. நன்கு வளர்ச்சி பெற்ற கண்கள் இரண்டும் தலையின் மேற்புறப் பகுதியில் காணப்படும். சைநோகிளாஸஸ் செமிஃ ஆகிய குவின் குலினியேட்டஸ் (Cyno- glossus quinquelineatus), சைனோகிளோஸ் பாஸியேட்டஸ் (Cynoglossus semifasciatus) இரு மீன்கள், சென்னைக் கடற்கரையில், முக்கிய மாக மேற்குக் கடற்கரையில் காணப்படுகின்றன. நாக்கு மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. மிக